டிடிஎஃப் வாசன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? ஐபிஎல் விமர்சனம் இதோ
யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் ஐபிஎல். இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

IPL Movie Review
படத்தில் கிஷோர் டாக்ஸி ஓட்டுநராக இருக்கிறார். பின் ஏதோ சில காரணங்களால் இவர் வேலையை இழந்து விடுகிறார். பின் இவர் சொந்தமாக கார் வாங்கி டாக்ஸி ஓட்டுகிறார். இன்னொரு பக்கம் டெலிவரி பாயாக வாசன் வேலை செய்கிறார். ஒரு நாள் வாசன் பைக்கில் வரும்போது கிஷோர் குறுக்கே வந்து விடுகிறார். இதனால் கோபப்பட்டு வாசன், கிஷோரை திட்டி விடுகிறார். ஆனால், வேறொரு நபர் தான் கிஷோர் காலின் மீது பைக்கை ஏற்றி விடுகிறார்.
ஐபிஎல் விமர்சனம்
இதனால் கிஷோருக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், வாசன் மீது தான் கிஷோர் கோபத்தில் இருக்கிறார். இதற்கிடையில் த.கு.க என்ற கட்சியின் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதே கட்சியின் முதல்வர் பண்ணை வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை திருட தன்னுடைய ஆட்களை அனுப்பி வைக்கிறார். அதன் பெயரில் சில கொலைகளும் நடக்கிறது.
இந்த சூழலில் தான் மதுரையில் ராஜேஷ் என்ற இளைஞர் லஞ்சம் வாங்கியதை வீடியோவாக எடுத்ததாக நினைத்து போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட் லாக்கப்பில் வைத்து தாக்குவதால் அந்த நபர் இறந்து விடுகிறார்.
ஐபிஎல் படம் எப்படி இருக்கு?
ஆனால், அவருடைய செல்போனில் உள்ள ஒரு அதிர வைக்கும் வீடியோவை வைத்து போஸ் தப்பிக்க பார்க்கிறார். அதற்குப்பின் அப்பாவியாக இருக்கும் கிஷோரை அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லோருமே சேர்ந்து பலிகடாவாக நினைக்கிறார்கள். அதோடு கிஷோர் உடைய தங்கை தான் வாசனை காதலிக்கிறார். இதனால் தன்னுடைய காதலியின் அண்ணன் கிஷோரை வாசன் எப்படி காப்பாற்றினார்? இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
இந்த படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் டிடிஎஃப் வாசன் பெரிதாக பில்டப் எதுவும் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் சொல்லும் மெசேஜ் எல்லாம் தியேட்டரில் கிளப்ஸ்களை உருவாக்கியிருக்கிறது. முதல் பாதி வாசன் அமைதியாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சிறப்பாக ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார்.
ஐபிஎல் படத்தின் ரிவ்யூ
இவரை அடுத்து படத்தில் அதிகளவில் கிஷோர் தான் வருகிறார். இவர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லலாம். படத்தில் வாசன் ஸ்டன்ட் எல்லாம் செய்திருப்பது நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இந்த முழு படத்தையும் கிஷோர் தான் தாங்கி செய்து இருக்கிறார். படத்தில் கிஷோர் பேசப்படும் வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதன்பின் போலீஸ் சித்திரவதை செய்யப்படும் காட்சிகள், விசாரணை எல்லாம் நன்றாக இருக்கு.
ஐபிஎல் சூப்பரா? சுமாரா?
இரண்டாம் பாதியில் கிஷோர் தாக்கப்படும் காட்சிகள் கொஞ்சம் சளிப்படைய வைக்கும் வகையில் செல்கிறது. படத்தில் வரும் வில்லன்களும் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கிறது. கதைக்களம் நன்றாக இருந்தாலும் மேக்கிங்கில் இயக்குனர் சொதப்பி இருக்கிறார் என்று சொல்லலாம். நடிகர்களின் நடிப்பு தான் படத்தைக் காப்பாற்றி வருகிறது. பாடல்கள் பெரிதாக கவர இல்லை என்றாலும் பின்னணி இசை ஓகே. மொத்தத்தில் இந்த படம் சுமார் தான்.

