ரியோவின் ‘ஆண் பாவம் பொல்லாதது’ பாஸ் ஆனதா? பெயில் ஆனதா? முழு விமர்சனம் இதோ
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ஆண் பாவம் பொல்லாதது விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Aan Paavam Pollathathu Movie Review
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோராஜ், மாளவிகா மனோஜ், விக்னேஷ்காந்த், ஜென்சன் திவாகர் நடித்த கலகல காமெடி கலந்த கல்யாணம், டைவர்ஸ் குறித்த படம். மார்டன் பெண், முற்போக்காக சிந்திக்கும் மாளவிகாவை திருமணம் செய்கிறார் ஐடி ஊழியரான ரியோ. சில மாதங்களில் பிரச்னை. விவாகரத்து வாங்க கோர்ட் செல்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பது கதை.
இவர்களுக்கு விக்னேஷ்காந்த், ஷீலா எதிர் எதிர் தரப்பில் வாதாடுகிறார்கள். ரியோ, மாளவிகா நடிப்பு, ஈகோ சண்டை சூப்பர், கோர்ட் காட்சி, காமெடி சீன் பிளஸ். விக்னேஷ்காந்த் உதவி வக்கீல் ஆக வரும் ஜென்சன் சிரிப்பை அள்ளி தருகிறார். காதலர்கள், கணவன், மனைவி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். சிலருக்கு ஈகோ நீங்கலாம். சில ஜோடிகள் சண்டை போட்டு அன்பை பரிமாறலாம். சிவகுமார் முருகேசன் ஸ்கிரிப்ட், இயக்குனர் திறமை படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்
ரியோ தன்னோட கேரக்டரை ரொம்ப ஈஸியா பண்ணிருக்கார். கோர்ட் சீன்ல வசனங்கள் இல்லாமையே அழுத்தமான நடிப்பு. நடிப்பில் நல்லாவே முன்னேறியிருக்கார். மாளவிகா மனோஜ், ஜோ படத்தில் அமைதியா வந்து எல்லோரையும் கவர்ந்தவர் இந்த படத்தில் அப்படியே நேரெதிரான கேரக்டரில் அட்டகாசம். பலருக்கு இன்னும் crush மெட்டீரியலாக வாய்ப்புகள் அதிகம்.
ஆர்ஜே விக்னேஷ்காந்த் படத்தின் இன்னொரு ஹீரோ தான். ஆரம்பத்துல ஏதோ காமெடி ரோல் பண்ணுவார்னு பாத்தா இரண்டாம் பாதியில் மனுசன் பின்னிட்டார். கோர்ட் சீன்ல அவர் பேசுற வசனங்கள் அடிபொலி. ஷீலா குடுத்த வேலையை கச்சிதமா பண்ணிருக்காங்க. ஜென்சன் திவாகர் தான் படத்தின் பில்லர். அவர் அடிக்கிற ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டர்ல விசில் பறக்கும், சிரிப்பு சத்தம் தெறிக்கும். குடும்பஸ்தன், லப்பர் பந்துக்கு அப்புறம் செம்ம ரோல்.
படத்தின் பிளஸ் - மைனஸ் என்ன?
சித்துகுமார் பின்னணி இசை நல்லா இருந்தது. பாடல்கள் ஒரு பாட்டு மனசுக்கு நெருக்கம். கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் படம் ஆரம்பத்தில் கதைக்குள் வர 15 நிமிடம் எடுத்துக்கொள்ள அடுத்து இடைவேளை வரை காமெடி சரவெடி தான். இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைகள் இருந்தாலும் பெருசா எதுவும் உங்களுக்கு பீல் ஆகாது. அங்கேயும் காமெடி ஒர்க் ஆயிடுறதால ஈஸியா கடந்து போயிடலாம். சிவக்குமாரின் வசனங்கள் பல இடங்களில் நச். குறிப்பா போலி பெண்ணியம் பேசும், பெரியாரிசம் பேசும் பலருக்கும் செம்ம அடி.
ஆண் பாவம் பொல்லாதது எப்படி இருக்கு?
கிளைமேக்ஸ் முன்பு வரும் கோர்ட் சீனில் விக்னேஷ்காந்த் பேசும் வசனங்கள் பலரையும் யோசிக்க வைக்கும். அது யதார்த்தத்தை பலருக்கும் உணர வைக்கும். ஆண்களின் நிலையை எடுத்துச் சொல்ல ஒரு படம் வந்ததே ஆறுதல். அதில் ஆண்களின் பக்கம் மட்டும் நிற்காமல் பெண்களுக்கும் பேசியது சிறப்பு. தம்பதிகள் தங்களை உணர்ந்து கொள்ள தாராளமாய் பார்க்க வேண்டிய படம். எமோசனல் டச், கொஞ்சம் ஒர்க் ஆகல. அதை இன்னும் அழுத்தமாய் எழுதியிருக்கலாம் உட்பட சில குறைகள் இருந்தாலும் படம் பேசும்.