MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • காமெடியால் சக்சஸ் ஆனதா காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ்? விமர்சனம் இதோ

காமெடியால் சக்சஸ் ஆனதா காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ்? விமர்சனம் இதோ

அமீன் இயக்கத்தில் முனீஸ்காந்த், ராஜேஷ் மாதவன், சுபாஷ் செல்வம் ஆகியோர் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் காக்கி சர்க்கஸ் வெப் தொடரின் விமர்சனம் இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 10 2026, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kaakee Circus web series review
Image Credit : X

Kaakee Circus web series review

நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த், படிப்படியாக கதையின் நாயகனாக உருவெடுத்து வருகிறார். கடைசியாக மிடில் கிளாஸ் என்கிற படத்தில் நாயகனாக நடித்திருந்த அவர், தற்போது காக்கி சர்க்கஸ் என்கிற வெப் தொடரிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த வெப் தொடரை அமீன் இயக்கி இருக்கிறார். இதில் முனீஸ்காந்த் உடன் ராஜேஷ் மாதவன், வின்ஸு ரேச்சல் ஷாம் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். இந்த வெப் தொடருக்கு விபின் பாஸ்கர் இசையமைத்துள்ளார். மேலும் நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த வெப் தொடர் இன்று முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
காக்கி சர்க்கஸ் கதை என்ன?
Image Credit : X

காக்கி சர்க்கஸ் கதை என்ன?

சாதாரணமாக திருடனைப் பிடித்து சிறையில் அடைப்பது தான் நாம் கேள்விப்படும் விஷயம். ஆனால் இங்கு கதை முற்றிலும் மாறுபட்டது. பல அடுக்கு பாதுகாப்புகளுடன் இருக்கும் சிறைக்குள் நுழைந்து, அங்கிருந்தே ஒன்றரை லட்சம் ரூபாய் திருடப்படும் சம்பவம் தான் இந்த “காக்கி சர்க்கஸ்” வெப் சீரிஸின் மையக்கரு. ஏன் அந்த திருடன் சிறையையே குறிவைத்தான்? அவன் யார்? இப்படியொரு பாதுகாப்பை எப்படி மீறினான்? என்ற கேள்விகளுக்கான பதிலை ஜெயிலரும் சப் ஜெயிலரும் சேர்ந்து கண்டுபிடிக்கும் பயணமே இந்த படத்தின் கதை.

Related Articles

Related image1
லெஜண்டின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? லீடர் விமர்சனம் இதோ
Related image2
பந்தயம் அடித்ததா ஷர்வானந்தின் ‘பைக்கர்’ - முழு விமர்சனம் இதோ
35
காக்கி சர்க்கஸ் விமர்சனம்
Image Credit : X

காக்கி சர்க்கஸ் விமர்சனம்

சப் ஜெயிலராக வரும் சுபாஷ் செல்வம், குற்றவாளி யார் என்பது தெரிந்தும் சட்டப்படி எதுவும் செய்ய முடியாமல் திணறும் நிலையை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது முகபாவனைகளில் தெரியும் பதட்டமும் குழப்பமும் கதைக்கு உயிர் ஊட்டுகிறது. காதல் காட்சிகளிலும் அவர் சரியான அளவில் மென்மையாக நடித்து ரசிக்க வைக்கிறார்.

முனிஸ்காந்த் நடித்துள்ள ஜெயிலர் கதாபாத்திரம் வித்தியாசமானது. கைதிகளுக்கு புத்தக வாசிப்பு மூலம் நல்லெண்ணம் உருவாக்க முயலும் அவரது அணுகுமுறை கதைக்கு தனித்தன்மை சேர்க்கிறது. ராஜேஷ் மாதவன் தனது உடல்மொழி மற்றும் நம்பிக்கையுடன் கூடிய நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். “நான்தான் திருடினேன், என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற தைரியமான அணுகுமுறை அவரது கதாபாத்திரத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

45
காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் ரிவ்யூ
Image Credit : X

காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் ரிவ்யூ

வின்ஸு ரேச்சல் ஷாம், ஹீரோவை காதலிக்கும் பெண்ணாக அழகாகவும் மிகையில்லாமலும் நடித்திருக்கிறார். அப்துல் லீயின் கதாபாத்திரமும் தனக்கென ஒரு நினைவூட்டலை ஏற்படுத்துகிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் கதைக்கு தேவையான அளவில் தங்கள் பங்கை சரியாக கொடுத்துள்ளனர். விபின் பாஸ்கரின் பின்னணி இசை திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஏற்றபடி நகர்கிறது. நீரஜ் ரெவியின் ஒளிப்பதிவு, சிறைச்சாலை மற்றும் நகரத்தின் சில பகுதிகளை காட்சிப்படுத்தும் விதத்தில் கண்ணுக்கு இனிமையாக உள்ளது.

55
காக்கி சர்க்கஸ் எப்படி இருக்கு?
Image Credit : X

காக்கி சர்க்கஸ் எப்படி இருக்கு?

இயக்குநர் அமீன், ஒரு எளிய கருத்தை எடுத்துக்கொண்டு அதனை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் விரிவாக்கிய விதம் பாராட்டத்தக்கது. மலையாள படைப்பாளர்களுக்கே உரிய சுருக்கமான கதை அமைப்பை நுணுக்கமாக விரித்து, பார்வையாளர்களை ஈர்க்கும் திறமை இங்கும் தெளிவாக தெரிகிறது. மொத்தத்தில், “காக்கி சர்க்கஸ்” வித்தியாசமான கதைக்களம், சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் நன்றாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களுடன் ஒரு திருப்திகரமான அனுபவத்தை தரும் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ் ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 Review : அடிபொலியாக இருந்ததா திரிஷ்யம் 3...? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Athiradi : சரவெடியாக உள்ளதா பேசில் ஜோசப்பின் ‘அதிரடி’ திரைப்படம்? விமர்சனம் இதோ
Recommended image3
Karuppu Review : சூர்யாவின் கருப்பு பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
லெஜண்டின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? லீடர் விமர்சனம் இதோ
Recommended image2
பந்தயம் அடித்ததா ஷர்வானந்தின் ‘பைக்கர்’ - முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved