MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • Exam Review : எக்ஸாம் வெப் சீரிஸ் பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? விமர்சனம் இதோ

Exam Review : எக்ஸாம் வெப் சீரிஸ் பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? விமர்சனம் இதோ

Exam Web Series Review : சற்குணம் இயக்கத்தில் அப்பாஸ், துஷாரா விஜயன், அதிதி பாலன் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் எக்ஸாம் வெப் சீரிஸ் விமர்சனம் இதோ.

2 Min read
Author : Ganesh A
Published : May 15 2026, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Exam Web Series Review
Image Credit : X

Exam Web Series Review

வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கத்தில் வெளியாகி உள்ள வெப் தொடர் எக்ஸாம். துஷாரா விஜயன், அப்பாஸ், அதிதி பாலன் ஆகியோர் இந்த வெப் தொடரில் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நடுத்தரவர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவுதான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல், அதனை ஒரு திரில்லர் மோடில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ள வெப் தொடர் தான் இந்த எக்ஸாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எக்ஸாம் வெப் சீரிஸ்
Image Credit : X

எக்ஸாம் வெப் சீரிஸ்

எக்ஸாம் வெப் சீரிஸ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஏனெனில் இதற்கு முன்னர் புஷ்கர் காயத்ரியின் வால் வாட்சர் நிறுவனம் தயாரித்த சுழல், வதந்தி போன்ற வெப் தொடர்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதில் சுழல் வெப் தொடர் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகி ஹிட் அடித்தது. அந்த வரிசையில் எக்ஸாம் வெப் தொடரும் இன்று அமேசாம் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகி உள்ளது. அந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது? அதில் உள்ள பாசிடிவ் என்ன? நெகடிவ் என்ன? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

34
எக்ஸாம் வெப் சீரிஸ் விமர்சனம்
Image Credit : X

எக்ஸாம் வெப் சீரிஸ் விமர்சனம்

குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்து உருவான கதை இது. தொடரின் டிரெய்லரிலேயே கதையை நாம் எளிதாக யூகித்துவிட முடிகிறது. தொடரும் அதே பாதையில்தான் பயணிக்கிறது. துஷாரா விஜயன் தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். ஆனால், இந்தக் கதைக்கு அவர் எந்த அளவிற்கு பொருந்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. அதிதி பாலன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றாலும், பாதி தொடர் ஒரு பத்துக்கு பத்து அறைக்குள்ளேயே கடத்தப்பட்ட நிலையில் முடிகிறது. சொல்லப்போனால், இது ஒரு ஒர்க் ஃபிரம் ஹோம் போலீஸ் கதாபாத்திரம் போலத் தோன்றுகிறது.

44
எக்ஸம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
Image Credit : X

எக்ஸம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?

அப்பாஸ் கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம். ரைட்டிங் இந்தத் தொடரின் மிகப்பெரிய பலவீனம். பல கதாபாத்திரங்களின் முடிவுகள் தெளிவில்லாமல் இருக்கின்றன. வில்லனுக்கான பின்னணி காட்சிகள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். பல பழைய படங்கள் மற்றும் தொடர்களை பார்த்த உணர்வே மிஞ்சுகிறது. தேர்வு முறைகேடுகளை மட்டும் ஆழமாகப் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், சென்டிமென்ட் மற்றும் சோகக் கதைகள் தொடரின் வேகத்தைத் தடை செய்கின்றன.

சாம் சி.எஸ் பின்னணி இசை கூட பெரிதாகக் கவரவில்லை. நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. சுழல், வதந்தி வரிசையில் இந்த தொடரும் இடம் பிடிக்கும் என எதிர்பார்த்த நமக்கு, இறுதியில் கிடைத்தது ஏமாற்றம் தான். சீசன் 02-வுக்கும் லீட் கொடுத்திருக்கிறார்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விமர்சனம்
தமிழ் சினிமா
ஓடிடி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Enna Vilai Review : கருணாஸின் என்ன விலை படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ
Recommended image2
Sardar 2 Review : கார்த்தி vs எஸ்.ஜே.சூர்யா... சர்தார் 2 மிஷன் வெற்றியா? தோல்வியா? விமர்சனம் இதோ
Recommended image3
Mandaadi Review : சூரியின் மண்டாடி சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
காமெடியால் சக்சஸ் ஆனதா காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ்? விமர்சனம் இதோ
Recommended image2
ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படம் பட்டாசாய் இருந்ததா? புஸ்ஸுனு போனதா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved