2 -ஆக உடையும் கதர் கட்சி..! திமுகவுக்கு எதிராக திரளும் ‘உண்மையான’ காங்கிரஸ்..?
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவில் இருக்கும் நிலையில், ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் திரை மறைவில் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

செவி சாய்க்க மறுக்கும் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செல்வப் பெருந்தகை தலைமையில் இயங்கி வருகிறது. சமீப காலமாக இந்த கட்சியில் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை கொண்டு வரவேண்டும். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும். மூன்று அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும். அதற்காக நாம் ஏன் தவெகவுடன் கூட்டணியில் இணையக்கூடாது என விவாதங்கள் எழுந்து வருகிறது.
அந்த வகையில நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் தொடர்ந்து போர் குரல் எழுப்பி வருகிறார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் நான்கு சதவீத வாக்கு வங்கிகள் மட்டும் இருப்பதால் திமுக மேலிடம் காங்கிரஸ் கட்சியின் குரலுக்கு ஸ்டாலின் செவி சாய்க்க மறுத்து வருகிறார். இது பற்றி மு.க ஸ்டாலின் கருத்து சொல்லும் பொழுது ‘‘காங்கிரஸ் கட்சியினர் விருப்பப்பட்டால் இருக்கலாம்’’ எனக் கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில தமிழக காங்கிரஸ் கட்சியினரை ராகுல் காந்தி டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
காங்கிரஸ் கட்சிக்குள் கலவரம்
அப்போது எதுவாக இருந்தாலும் திமுக உடன் கூட்டணி வைத்துக் கொள்வோம். எந்த வகையிலும் போர் கொடி பிடிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கி அனுப்பி இருக்கிறார். அத்தோடு கட்சி கூட்டணி தொடர்பாக தனிப்பட்ட முறையில் யாரும் கருத்து சொல்லக்கூடாது என எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 90 முக்கிய கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால் அதில் 60 பேர் மட்டும் தான் கலந்து கொண்டார்கள். 30 பேர் ஒட்டுமொத்தமாக சொல்லி வைத்தது போல் கலந்து கொள்ளவில்லை.
உண்மையான காங்கிரஸ்காரன்
இதன் பின்னணியில மிகப்பெரிய அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது. சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் ஷோடங்கர், கட்சியினுடைய செயலாளர்கள் சூரஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ள இடம் 30 பேர் கலந்து கொள்ளவில்லை. மாணிக்கம் தாகூர் ஏற்கனவே திமுக ஐடிவிங் பற்றி தாக்கி பேசி வருகிறார். கரூர், எம்பி ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைமையை விமர்சனம் செய்து வருகிறார்.
‘‘நான் உண்மையான காங்கிரஸ்காரன்’’ எனச் சொல்லி வருகிறார் மாணிக்கம் தாகூர். இதே போல ஜோதிமணி ‘‘நான் நாடாளுமன்ற நிலை குழு பயணத்திற்காக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்’’ என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு காரணம் சொல்லி வருகிறார். இதற்கு காரணம் கட்சி தலைமைக்கு எதிரான கருத்துக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால் இவர்கள் வேறு அணியாக பிரிந்து தவெகவுடன் கூட்டணி சேரலாம் எனச் சொல்லப்படுகிறது.
2 ஆக உடையும் காங்கிரஸ்
தவெக சட்டமன்றத் தேர்தலில் 20% வாக்குகளை கூட பெற முடியாது என்கிற சூழ்நிலையில் இருக்கிறது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் ஓரளவு பலம் பெறலாம். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவில் இருக்கும் நிலையில், ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் திரை மறைவில் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு பிரிவினர் விலகி தவெக உடன் இணையலாம். இதனை மாணிக்கம் தாகூர் எம்பி ஒருங்கிணைப்பதாகவும் கூறப்படுகிறது.
