- Home
- Politics
- விஜயின் மாஸ்டர் பிளான்..! ஒட்டுமொத்தமாக மாறும் அரசியல் களம்..! பாகுபலியாக மாறும் தவெக..!
விஜயின் மாஸ்டர் பிளான்..! ஒட்டுமொத்தமாக மாறும் அரசியல் களம்..! பாகுபலியாக மாறும் தவெக..!
அன்புமணியை தவெக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என விரும்புகிறார் விஜய். அவரும் தனது பலத்தை நிரூபிக்க விஜய் கூட்டணி நல்ல சாய்ஸ் எனக் கருதுகிறார். இதை 2029 மக்களவை தேர்தலுக்கான ‘பார்க்கிங் டூலாக’ பயன்படுத்தலாம் என அன்புமணி தரப்பு நினைக்கிறது.

விஜய் தலைமையிலான தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் பலம் பெறும் வகையில் கூட்டணி உருவாக்கும் முயற்சியில் தீரவிரம் காட்டி வருகிறது. விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் அடிப்படையில், அதிமுக-பாஜக கூட்டணியுடன் இணையாமல், சிறு-நடுத்தர கட்சிகளை இணைத்து மாற்று வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வியூகத்தின் முக்கிய அம்சமமாக விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு, கூட்டணி முடிவுகளை அவர் தீர்மானிக்க உள்ளார்.
ஓபிஎஸ், டிடிவி.தினகரன், பாமக , எஸ்டிபிஐ ஆகியோர் தவெக உடன் இணையலாம் எனக் கூறப்படுகிறது. சிறு கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைத்து திமுகவை வீழ்த்தலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் தவெக கூட்டணிக்குள் ஓபிஎஸ், தினகரன், அன்புமணியை இழுக்க விஜயே ரூட் போட்டு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அன்புமணி மட்டும் இன்னும் தனது முடிவை சொல்லாமல் இருக்கிறார் என கூறுகிறார்கள். தவெகவுடன் கூட்டணி சேர இபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் இதற்கு கிட்டத்தட்ட சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
டிடிவி.தினகரன் ஏற்கனவே தனிக்கட்சி வைத்திருக்கிற நிலையில், ஓபிஎஸ் இப்போது இருக்கிற அதிமுக உரிமை மீட்பு குழுவை, அதிமுக உரிமை மீட்பு கழகம் என மாற்றப் போகிறார். இதற்கான பேச்சு வார்த்தை நடத்துகிற பொறுப்பை செங்கோட்டையனுக்கு கொடுத்துள்ளார் விஜய். செங்கோட்டையன் தலைமையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அமைக்க திட்டமிட்டுள்ளனர். விஜயுடன் கூட்டணி வைத்துக்கொள்ள டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸும் ஏற்கனவே தயார் என்கிற நிலையில் செங்கோட்டையின் மூலமாக அதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது.
இன்னொரு பக்கம் விஜய் கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு மறைமுகமாக ஆலோசனைகளை கொடுத்து வந்ததாக சொல்லப்படும் அன்புமணியை கூட்டணிக்குள் கொண்டு வருகிற முடிவில் விஜய் உள்ளார். இதற்கு அன்புமணி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாலும் அவரை தவெக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என விரும்புகிறார் விஜய். அன்புமணியும் தனது பலத்தை நிரூபிக்க விஜய் கூட்டணி நல்ல சாய்ஸ் எனக் கருதுகிறார். இதை 2029 மக்களவை தேர்தலுக்கான ‘பார்க்கிங் டூலாக’ பயன்படுத்தலாம் என அன்புமணி தரப்பு நினைக்கிறது. ஆகவே, திமுகவுக்கு எதிராக தவெக பாகுபலி கூட்டணி அமைத்து அதிமுகவை விட பம் பொருந்திய கூட்டணியாக மாற்றி திமுகவை வெல்ல முடியும் என்கிற திட்டத்தில் இறங்கியுள்ளார் விஜய் என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.
