MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • செங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த அசைண்மெண்ட்..! அதிமுகவின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவ டார்க்கெட்..!

செங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த அசைண்மெண்ட்..! அதிமுகவின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவ டார்க்கெட்..!

அதிமுகவை முதலில் டார்கெட் செய்து அது பலவீனமாலான் தான் நாம் பலமாக முடியும். அது தேர்தல் நேரத்தில் திமுக வெர்சஸ் தவெக என களம் மாறும். 2026-ல் நாம் ஆட்சிக்கு வரலாம் என தவெக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறது தவெக.

2 Min read
Author : Thiraviya raj
Published : Nov 28 2025, 08:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

திமுகவில் இணைக்க யாரும் என்னிடம் முயற்சி செய்யவில்லை என செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார், ஆனாலும் கூட, ரகசியமாக சில திமுக அமைச்சர்கள் முயற்சிகள் செய்தனர். ஆனால், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு இந்த அசைன்மென்டை முழுமையாக முடிதது செங்கோட்டையனை இணைத்ததில் முக்கிய பங்காற்றியவர் ஆதவ் அர்ஜுனா. அதிமுகவில் செங்கோட்டையனுக்கு பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும்போதே தவெகவின் ஆதவ் அர்ஜூனா தரப்பினர் அவருடன் தொடர்ந்து பேசி வந்தனர். விஜய், செங்கோட்டையனுடன் பேசுவதற்கு முன்பே மூன்று சிட்டிங் தவெக தரப்பில் உட்கார்ந்து என்ன மாதிரி செயல்படலாம்? எப்படி கொண்டு போகலாம்? என பேசி இருக்கிறார்கள்.

அதன்பிறகே நவம்பர் 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். அவர் தவெகவில் இணைந்த பிறகு மேலும் சில விஷயங்களை தீவிரப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது செங்கோட்டையன் போலவே முக்கியமான எதிர்கட்சிகள் இருக்கக்கூடிய முக்கிய முகங்களை தவெக பக்கம் கொண்டு வரக்கூடிய ஆபரேஷஷனையும் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது செங்கோட்டையனை இணைத்ததன் மூலமாக ஒரு முக்கியமான மெசேஜையும் விஜய் கொடுக்கிறார். அதிமுகவுக்கான கூட்டணியை கேட்டை ஓங்கி தடாலடியாக இழுத்து மூடி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

விஜயைப் பொறுத்த வரை கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி வருகிறார். ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்று தெளிவுடன் இருக்கிறது. தொடக்கத்தில் அதிமுக- தவெக கூட்டணி அமைக்க சில முயற்சிகள் நடந்தது. ஆனாலும், அதிமுக -பாஜக கூட்டணி உறுதியானது. பாஜகவை கொள்கை எதிரி எனச் சொல்லி வரும் நிலையில் அந்தக் கூட்டணில இணைய முடியாது என ஆரம்பத்திலேயே தவெக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டு விட்டது. ஆகையால் சமீபத்தில் நடந்தபொதுக்குழு கூட்டத்திலும் தெளிவாகவே கூட்டணிய முடிவு செய்யக்கூடிய அதிகாரத்தை விஜய் எடுப்பார். முதல்வர் வேட்பாளர் அவர்தான் என அழுத்தம் திருத்தமாக உணர்த்தும் வகையில் கூறி விட்டனர்.

செங்கோட்டையனை தவெகவில் இணைத்ததன் மூலமா இன்னொறு முறை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை உணர்த்தியுள்ளது தவெக. அதேலோல அதிருப்தியில் உள்ள பல்வேறு முக்கியமான முகங்கள் எல்லோரையும் தவெக பக்கம் கொண்டு வந்து சேர்க்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். திமுக வெர்சஸ் தவெக என களத்தை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார் விஜய். மற்றொருபிரதான எதிர்க்கட்சி வீக் ஆனால் தானே அது முடியும்.

34
Image Credit : X/AIADMKITWINGOFL

அதிமுகவை முதலில் டார்கெட் செய்து அது பலவீனமாலான் தான் நாம் பலமாக முடியும். அது தேர்தல் நேரத்தில் திமுக வெர்சஸ் தவெக என களம் மாறும். 2026-ல் நாம் ஆட்சிக்கு வரலாம் என தவெக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறது தவெக. அதையொட்டியே செங்கோட்டையனை போன்ற பலரையும் தவெக பக்கம் கொண்டு வரலாம் என நினைக்கிறார்கள். இதை தொடர்ந்து தான் செங்கோட்டையனுக்கு, விஜய் சில அசைன்மென்ட்களை கொடுத்து இருக்கிறார் என்கிறார்கள். முக்கியமாக தமிழ்நாடு முழுக்கவே செங்கோட்டையன் அறியப்பட்டாலும், மேற்கு மண்டலத்தில் வலிமையான முகமாக அவர் இருக்கிறார். அதே போல ஒவ்வொரு மண்டலத்திலும் அதிமுகவில் உள்ள முக்கியமான முகங்கள், சீனியர்கள் மாஜிக்களை தவெக பக்கம் கொண்டு வர வேண்டும் என முதல் கட்டமாக சீக்ரெட் அசைண்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என செங்கோட்டையனுடைய அதிதிவீரமான ஆதரவாளர்கள், தவெகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

44
Image Credit : Asianet News

விஜயகாந்தை திரைத்துறையில் தன்னுடைய வழிகாட்டியாக வைத்துபயணத்தை தொடங்கினார் விஜய். அரசியலிலும் அவரைப் போலவே சில விஷயங்களை பின் தொடர தொடங்கி இருக்கிறார். முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரனை பக்கத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவராகவே ஆனார் விஜயகாந்த். அதேபோல செங்கோட்டையனை பக்கத்தில் வைத்துக்கொண்டு விஜய் 2026-ல் நிச்சயமாக முதல்வராவார் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள் தவெக நிர்வாகிகள்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பிரியாணிக்கு ஆசைப்பட்ட சீமான்.. தயிர் சாதம் கூட இல்ல‌.. கைவிரித்த ஸ்டாலின், இபிஎஸ்? அடுத்தது என்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Related Stories
Recommended image1
கேரளாவுடன் கூட்டு சேர்ந்து சுரண்டவதுதான் திமுகவின் God's Own Partnership-ஆ..? கொந்தளிக்கும் இபிஎஸ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved