MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • இந்துக்களுக்கு அசிங்கம்..! ஸ்டாலின், உதயா, ராசா வீடியோ வெளியிட்டு அவமானப்படுத்திய மலையாளிகள்..! ஐயப்பன் கோவிலுக்கு வர எதிர்ப்பு..!

இந்துக்களுக்கு அசிங்கம்..! ஸ்டாலின், உதயா, ராசா வீடியோ வெளியிட்டு அவமானப்படுத்திய மலையாளிகள்..! ஐயப்பன் கோவிலுக்கு வர எதிர்ப்பு..!

ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டுமே

2 Min read
Thiraviya raj
Published : Aug 26 2025, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : stockPhoto

உலக ஐயப்பன் சங்கமம் மாநாடு, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் இணைந்து நடத்ததும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேரள அமைச்சர் வாசவன் அழைப்பு விடுத்தார். கேரள அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘‘சனாதன தர்மத்தின் எதிர்ப்பாளரும், திமுக தலைவருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உலக ஐயப்ப சங்கம மாநாட்டில் பங்கேற்பது இந்துக்களை அவமதிப்பதற்குச் சமம். சபரிமலை பாரம்பரியத்தையும், ஐயப்ப பக்தர்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவமதித்துள்ளார். ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டும் தான்’’ என கடும் தெரிவித்து வருகிறார் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர்.

24
Image Credit : our own

இந்நிலையில், கேரளாவில் உள்ள பலரும் சனாதன தர்மம், இந்துக் கோயில்களை அசிங்கமாக பேசிய திமுக, விசிக, திக-வினர் பேசிய வீடியோக்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘செப்டம்பர் 20 ஆம் தேதி பம்பாவில் நடைபெறும் உலகளாவிய ஐயப்ப சங்கமத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளதாக அறிந்தேன்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மாநிலத் தேர்தல்களுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மிகவும் இந்து விரோத அரசாங்கங்களில் இரண்டு கட்சியினரான திமுக மற்றும் சிபிஐ(எம்)இப்போது இந்து வாக்காளர்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன என்பது ஆச்சரியமல்ல.

Related Articles

Related image1
அண்ணாமலையை அசிங்கப்படுத்திய டிஆர்பி ராஜா மகன்..! ஆயிரக்கணக்கானோர் முன்பு நோஸ்கட்
34
Image Credit : ANI

முரண்பாடாக, மு.க.ஸ்டாலினின் சொந்த மகன் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் தான் சனாதன தர்மத்தை அழிப்பதாக சபதம் செய்தார். திமுக நீண்ட காலமாக இந்து வெறுப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது, இது பல ஆண்டுகளாக மோசமான, அவமானகரமான கருத்துக்களை மீண்டும் மீண்டும் பேசி வருகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் வசதிக்காக, திமுக தலைவர்களின் இந்த வெட்கமற்ற கருத்துக்களை தொகுத்து மலையாள வசனங்களுடன் ஒரு வீடியோவை இணைத்துள்ளேன். அதைப் பார்த்த பிறகு அவர் தனது மனசாட்சிப்படி செயல்பட்டால் நல்லது.

மு.க.ஸ்டாலின் அவர்களே, ‘‘நீங்கள் உண்மையிலேயே இந்த புனித நிகழ்வில் பங்கேற்க விரும்பினால், உங்கள் அறிவாலயம்

தலைவர்களை இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்.

44
Image Credit : X/@NainarBJP

சனாதன தர்மம் குறித்த அவமானகரமான கருத்துக்களுக்கு உதயநிதி ஸ்டாலினை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள். இந்துக்களை அவமதித்ததற்காக ஆ.ராசாவை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள். சைவம் மற்றும் வைணவத்தை அவமதித்ததற்காக பொமுடியை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களை இடிப்பதாக பெருமையாகப் பேசியதற்காக டி.ஆர்.பாலுவை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள்.

இது உங்கள் சித்தாந்தத் தந்தை திராவிடக் கழகமும், உங்கள் கூட்டணிக் கட்சியினரும் இந்துக்கள், இந்து மதம் மற்றும் இந்து கடவுள்களுக்கு எதிராக பல தசாப்தங்களாகக் கக்கிய அசுத்தத்தை கணக்கில் கூட எடுத்துக்கொள்ள முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
திமுக
சபரிமலை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved