MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சிறைவாசத்தின் போது சசிகலாவை ஏமாற்றிய டிடிவி..? கொழுந்து விட்டு எரியும் மோதல்..! பகீர் பின்னணி..!

சிறைவாசத்தின் போது சசிகலாவை ஏமாற்றிய டிடிவி..? கொழுந்து விட்டு எரியும் மோதல்..! பகீர் பின்னணி..!

சசிகலா தான் அரசியலை விட்டு வெளியேறுவதாகவும் யாருக்கும் எனது ஆதரவு கிடையாது என்றும் கடிதம் கொடுத்திருந்தார். அது டிடிவி.தினகரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

3 Min read
Author : Thiraviya raj
Published : Feb 07 2026, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சசிகலாவை சந்தித்தது கட்சிக்கு எதிரானதா..?
Image Credit : x

சசிகலாவை சந்தித்தது கட்சிக்கு எதிரானதா..?

அமமுகவின் மாணவி அணி தலைவர் ஜீவிதா நாச்சியார் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் நேற்று சசிகலாவை சந்தித்து இருந்தார். சசிகலாவை ஜீவிதா நாச்சியார் சென்று பார்த்டு வந்த ஒரு மணி நேரத்தில் அவர் அமுமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது அமமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அடையாளம் காட்டிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனது சொந்த சித்தியை ஒரு நிர்வாகி சென்று சந்திப்பது அமமுகவின் கொள்கைக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சசிகலாவின் நம்பிக்கையை இழந்த தினகரன்
Image Credit : Asianet News

சசிகலாவின் நம்பிக்கையை இழந்த தினகரன்

டிடிவி.தினகரன், சசிகலா இருவருக்கும் ஏற்பட்ட பிணக்கு, இருவரும் ஒரே அணியில், ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்க கூடிய நிலையில் அவர்கள் இருவரும் நீண்டகால அரசியல் எதிரி போல் ஒருவரை சென்று பார்த்தாலே அவரை கட்சியிலிருந்து நீக்க கூடிய அளவுக்கு எதிரிகளாக ஏன் ஆனார்கள்? என்று விசாரித்த போது பல விஷயங்கள் வெளி வந்துள்ளன. இது குறித்து சசிகலா தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘‘தான் சிறையில் இருக்கும்போது, கட்சி ஆரம்பிக்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியதை சசிகலா ஏற்கவில்லை. அதையும் மீறி டிடிவி கட்சி ஆரம்பித்தார். அவ்வப்போது கட்சி செலவு, நிர்வாகச் செலவு என சசிகலாவிடம் இருந்த பல நூறுகோடி மதிப்பிலான பணத்தை சசிகலாவிடம் இருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டார் டி.டி.வி. சில கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சசிகலாவின் நம்பிக்கையை இழந்து விட்டார் தினகரன். இதில் சசிகலாவுக்கு ஏக வருத்தம்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து ரிலீஸாகி வெளிவந்தபோது நேரடியாக ஜெயலலிதா நினைவிடத்திற்கும், அதிமுக அலுவலகத்திற்கும் செல்லலாம் என டிடிவி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், சசிகலா அதை கேட்காமல் ‘அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் இப்போதும் என்னோடு தொடர்பில்தான் இருக்கிறார்கள். இப்போது நாம் அந்த அலுவலகத்திற்கு சென்றால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். இதை நான் பார்த்துக் கொள்கிறேன்’’ எனக்கூறி டிடிவி.தினகரனின் பேச்சை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

34
கடும் அதிருப்தியில் டிடிவி.தினகரன்
Image Credit : Asianet News

கடும் அதிருப்தியில் டிடிவி.தினகரன்

அதே போல் 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி.தினகரன் தனித்து நிற்பதற்கு முயற்சி கொண்டபோது சசிகலாவிடம் சென்று ‘வெளிப்படையான ஆதரவு கொடுக்க வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். ஆனால், சசிகலா தான் அரசியலை விட்டு வெளியேறுவதாகவும் யாருக்கும் எனது ஆதரவு கிடையாது என்றும் கடிதம் கொடுத்திருந்தார். அது டிடிவி.தினகரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. நாம் ஒன்றாக இருக்கின்றோம். ஒரே குடும்பமாக இருக்கின்றோம். நமக்கு நமது சித்தி ஒத்துழைப்பு தர மறுக்கிறாரே என்று டிடிவி.தினகரன் கடுமையான மனவேதனையை வெளிப்படுத்தியாக சொல்கிறார்கள்.

2021க்கு பிறகு பெரிதாக இருவருக்கும் எந்தவித சந்திப்பும் நடைபெறவில்லை. சமீபத்தில் தேவர் குருபூஜை விழாவில் கூட இருவரும் சந்திப்பதற்கு வாய்ப்பு உருவானபோது. அப்போது திட்டமிட்டே டிடிவி.தினகரன், சசிகலா வருவதை தெரிந்து கொண்டு பத்து நிமிடங்களுக்கு முன்பாக அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட்டார். இரு தினங்களுக்கு முன்பு கூட பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தபோது இருவரும் ஒரே நேரத்தில் அருகருகே இருந்தபோதும் கூட, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் திரும்பிக் கொண்டு சென்று விட்டனர். டிடிவி.தினகரனை பொருத்தவரை சசிகலாவிற்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை. இதற்கு காரணம் தொடர்ந்து டிடிவி.தினகரன் தன் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக நடந்து கொண்டது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை.

44
மோதலான மனக் கசப்பு
Image Credit : Google

மோதலான மனக் கசப்பு

இதனை தொடர்ந்தே டி.டி.வி.தினகரன் கொடுத்த முக்கியத்துவத்தை ஏற்காமல் புறக்கணித்து வந்தார் சசிகலா. குறிப்பாக அமமுக ஆரம்பித்தபோதுகூட அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராகத்தான் தன்னை அறிவித்துக் கொண்டார் டி.டி.வி. பொது செயலாளர் பொறுப்பு சசிகலாவுக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆனால் சசிகலா கட்சிக்கு வராத காரணத்தால்தான் பொறுப்பை டி.டி.வி.தினகரனே எடுத்துக் கொண்டார். ஆகையால் டிடிவி தினகரன், சசிகலா இருவருக்கும் இடையே உரசல் போக்கு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே அவர்கள் ஒன்று சேராத காரணத்தினால் தற்போது சசிகலாவை சென்று சந்திக்கக்கூடிய நிர்வாகியைக்கூட கட்சியில் இருந்து நீக்கப்படக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது.

குறிப்பாக ஜீவிதா நாச்சியார், மதுரை, திருமங்கலம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட தயாராகி வந்தார். அதற்கான வாக்குறுதியை அவருக்கு டிடிவி.தினகரன் கொடுத்திருந்தார். ஆனால், இப்போது அதிமுகவுடன் டிடிவி.தினகரன் கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுவார் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த சூழலில் தனக்கு சீட்டு கிடைக்காத நிலையில் சசிகலாவை சென்று சந்தித்துள்ளார் ஜீவிதா நாச்சியார். விரைவில் சசிகலா ஒரு தனியாக கட்சி ஆரம்பிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில்தனக்கு சசிகலா மூலமாக ஒரு ஆதரவு கிடைக்கும் என்ற அடிப்படையில் ஜீவிதா சந்தித்துள்ளார். அவரை சந்தித்த காரணத்தால் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் மூலம் சசிகலா -டிடிவி.தினகரன் இடையே பற்றி வந்த மனக் கசப்பு இன்னும் அதிகமாகி விஷமமாக மாறி விட்டது’’ என்கிறார்கள் மன்னார்குடிவாசிகள்.

About the Author

TR
Thiraviya raj
டிடிவி தினகரன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Recommended image2
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Recommended image3
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!
Related Stories
Recommended image1
சிஎஸ்கே அணியை வாங்கும் உதயநிதி..! இத்தனை ஆயிரம் கோடியா..? ஐபிஎல் கிரிக்கெட்டில் பரபர ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved