MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • புலிப்படையா..? ஃபுல் குடியா..? கருணாஸை வறுத்தெடுக்கும் சர்ச்சை போஸ்டர்..!

புலிப்படையா..? ஃபுல் குடியா..? கருணாஸை வறுத்தெடுக்கும் சர்ச்சை போஸ்டர்..!

கருணாஸ் அண்மைக்காலமாகத் திமுக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதே சமயம், அவரது பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து எதிர்தரப்பினர் அவருக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 28 2026, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
போஸ்டரில் அதிரடி வாசகங்கள்
Image Credit : google

போஸ்டரில் அதிரடி வாசகங்கள்

தமிழக அரசியலில் சர்ச்சைகளுக்கும் சுவரொட்டிகளுக்கும் என்றுமே பஞ்சமிருந்ததில்லை. ஆனால், தற்போது திருவாடானை பகுதியில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர், சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், முன்னாள் எம்.எல்.ஏ கருணாஸை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர் சிவகங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளில் முக்குலத்தோர் சமூக அமைப்பினர் என்ற பெயரில் நடிகர் கருணாஸின் 'முக்குலத்தோர் புலிப்படை' அமைப்பைச் சாடும் வகையில் அமைந்துள்ள இந்த போஸ்டர்கள், மிகவும் காரசாரமான வாசகங்களைக் கொண்டுள்ளன.

அந்தப் போஸ்டரில், கருணாஸ் மது அருந்துவது போன்ற புகைப்படத்தைப் போட்டு, அதன் மேல் "கருணாஸ் புலிப்படையா? ஃபுல் குடியா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், "எனக்கு ஓட்டு, மக்களுக்கு வேட்டு; ஸ்டாலின் தொடரட்டும், கருணாஸ் திருந்தட்டும். முடியுமா? திரும்பிப் பார் திருவாடானையை!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது அவர் கடந்த காலங்களில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்த அல்லது செய்யத் தவறிய பணிகளை விமர்சிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
சமூக ரீதியான தாக்குதல்
Image Credit : our own

சமூக ரீதியான தாக்குதல்

இந்த போஸ்டரில் மிக முக்கியமாக, "முக்குலத்தோர் என்று கூறும் மூடனே, வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் மானம் கெட்ட மதுப்பிரியரே உனக்கு என்ன வேலை?" என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இது கருணாஸை ஒரு சமூகத் தலைவராக ஏற்பதற்கு அந்தச் சமூகத்தின் ஒரு தரப்பினர் காட்டும் எதிர்ப்பையே வெளிப்படுத்துகிறது. வீரத்திற்கும் மானத்திற்கும் அடையாளமாகத் திகழும் ஒரு மண்ணில், மது அருந்தும் ஒருவரைத் தலைவராக ஏற்க முடியாது என்ற தொனியில் அந்த வாசகங்கள் அமைந்துள்ளன.

Related Articles

Related image1
மதுரையில் கோவை 'மாப்பிள்ளை..!' பிடிஆரை வெல்வாரா இயக்குனர் சுந்தர் சி..? ஏ.சி. சண்முகத்தின் மாஸ்டர் பிளான்!
33
பின்னணி என்ன?
Image Credit : x

பின்னணி என்ன?

கருணாஸ் அண்மைக்காலமாகத் திமுக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதே சமயம், அவரது பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து எதிர்தரப்பினர் அவருக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் அமைப்புகளுக்கு இடையே நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிகாரப் போட்டி காரணமாகவே இதுபோன்ற அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

சமூக அமைப்புகளின் எதிர்வினை

இந்த போஸ்டர் விவகாரம் திருவாடானை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு பொதுவாழ்வில் இருப்பவரை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிப்பதா?" என்று கருணாஸின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், "உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்கள்" என்று மாற்றுக் கட்சியினர் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், அனுமதியின்றி அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ, 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், இதுபோன்ற தனிநபர் தாக்குதல் போஸ்டர்கள் தென் மாவட்ட அரசியலை மேலும் சூடாக்கியுள்ளன.

About the Author

TR
Thiraviya raj
திமுக கூட்டணி கட்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
Recommended image2
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!
Recommended image3
TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!
Related Stories
Recommended image1
மதுரையில் கோவை 'மாப்பிள்ளை..!' பிடிஆரை வெல்வாரா இயக்குனர் சுந்தர் சி..? ஏ.சி. சண்முகத்தின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved