MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • MK Stalin : டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்... இந்திய அளவில் கெத்து காட்டும் மு.க.ஸ்டாலின்

MK Stalin : டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்... இந்திய அளவில் கெத்து காட்டும் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சோசியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருவதால் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Mar 01 2023, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாள் விழா இன்று தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான இடங்களில் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகளை கொடுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தனது 70-வது பிறந்தநாளையொட்டி இன்று காலை தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய ஸ்டாலின், அடுத்ததாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

இதையும் படியுங்கள்... இலவச பேருந்து முதல் புதுமைப்பெண் திட்டம் வரை.. பெண்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு செய்த சாதனைகள் !!

34

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள அந்த விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் என அகில இந்திய அளவில் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

44

இப்படி முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் களைகட்டியுள்ள நிலையில், சோசியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதால், டுவிட்டரில் #HBDMKStalin70 என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  தந்தையை மிஞ்சிய மகன்.. மாற்றுத் திறனாளிகள் & திருநங்கைக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Recommended image2
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
Recommended image3
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved