- Home
- Politics
- என் நண்பர்கள் CM ஆகி விட்டார்கள்..! நான் கவுன்சிலர் ஆகக்கூட இல்லை..! கே.டி.ராகவன் வேதனை..!
என் நண்பர்கள் CM ஆகி விட்டார்கள்..! நான் கவுன்சிலர் ஆகக்கூட இல்லை..! கே.டி.ராகவன் வேதனை..!
என்னுடன் அப்போது இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்தவர், இப்போது மஹாராஷ்டிர முதலமைச்சராக இருக்கிறார். இப்போதும் நண்பர்தான்.

தமிழக பாஜகவில் மிகப்பெரிய இடத்தை அடைவார் என எதிர்பார்க்கப்பட்டவர் கே.டி.ராகவன். பாஜகவின் முக்கிய நிர்வாகியாக வலம் வந்தவர். அவர் 2021 ஆம் ஆண்டு வீடியோ விவகார சூழ்ச்சியில் சிக்கி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில் "இது என்னையும் கட்சியையும் களங்கப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டது. சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என்று கூறி இருந்தார். ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, விசாரணைக் குழு அமைத்தார்.
அந்த சம்பவத்துக்குப் பின், கே.டி.ராகவன் கட்சியில் அதிகாரப்பூர்வமான பொறுப்பிலிருந்து விலகி இருந்தார். ஆனால், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் சில சமயங்களில் பங்கேற்று, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார். 2023 ஆம் ஆண்டு மே மாதம், அவரது புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.டி.ராகவன், கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர். வழக்கறிஞராகப்பணியாற்றும் அவர் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவைச் சார்ந்து பேசியது, அவரது செயல்பாடுகள், அரசியல் தொடர்புகள் அவருக்கு கட்சியில் வலுவான இடத்தைக் கொடுத்திருந்தன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நெருங்கிய தொடர்புடையவர். 2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு, தமிழக பாஜகவில் அண்ணாமலை தலைமை மாற்றம் ஏற்பட்டது. நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக, கட்சி பழைய தலைவர்களை மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
2025 ஜூலை 30 அன்று, நயினார் நாகேந்திரன் அறிவித்த மாநில நிர்வாகிகள் பட்டியலில், ராகவன் மாநில பிரிவு அமைப்பாளர் என்ற புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். இது 2021 முதல் அவர் இல்லாத அதிகாரப்பூர்வ பதவி. இப்போது மீண்டும் கட்சிப்பணிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி இருக்கும் கே.டி.ராகவன் ஒரு நிகச்சியில் பேசும்போது, ‘‘கட்சியில் என்னுடன் இருந்த என் நண்பர்கள் எல்லாம் இப்போது என்ன பதவியில் இருக்கிறார்கள் தெரியுமா? நான் அகில இந்திய இளைஞரணிக்கு அந்தமான் நிக்கோபாரில் மாநிலப்பொறுப்பாளராக இருந்தேன்.
என்னுடன் அப்போது இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்தவர், இப்போது மஹாராஷ்டிர முதலமைச்சராக இருக்கிறார். இப்போதும் நண்பர்தான். மக்களவை சபாநாயகராக இருக்கக்கூட்டிய ஓம் பிர்லாவும், நானும் ஒரேமட்ட நிர்வாகியாகத்தான் இருந்தோம். அவர் இன்றைக்கு சபாநாயகராக இருக்கிறார். நம்ம அனுராக் தாகூர் அவர் அமைச்சராகி விட்டார். நான் இன்னும் கவுன்சிலராகக் கூட ஆகவில்லை’’ என வேதனைபடத் தெரிவித்துள்ளார்.
"பாவங்கள் எத்தனை உள்ளது என சொல்லமுடியாது. ஆனால், கொடிய பாவம் எது என்பது துரோகம் மட்டுமே. மீண்டும் எழுந்து நிற்கும் நம்பிக்கை நாயகன் கே.டி.ராகவன்’’ என பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் உற்சாகமூட்டி வருகின்றனர்.
