- Home
- Politics
- வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறாரா கமல்?... கையில் டார்ச் லைட்டுடன் உலா வரும் மகள் அக்ஷரா ஹாசனால் குழப்பம்!
வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறாரா கமல்?... கையில் டார்ச் லைட்டுடன் உலா வரும் மகள் அக்ஷரா ஹாசனால் குழப்பம்!
கமல் ஹாசனின் அண்ணன் மகளும், பிரபல நடிகையுமான சுஹாசினி கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது சர்ச்சையை எழுப்பியது.

திமுக, அதிமுக என்ற இரு கழக ஆட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் இருபுறம் சாயாமல் மய்யமாக நிற்கிறோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார் கமல் ஹாசன். கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை அள்ளியதால் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

ஐ.ஜே.கே., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம். தமிழகம் முழுவதும் கமல், ராதிகா, சரத்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் மத்தியில் கமல் ஹாசன் பிரச்சாரத்திற்காக கையில் எடுத்துள்ள முதல் ஆயுதம் ஊழல். எங்களால் மட்டுமே ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சியைக் கொடுக்க முடியும், ஏனென்றால் எங்களுக்கு எல்லாம் பணம் சம்பாதிக்க வேறு தொழில் இருக்கிறது. அரசியலை நாங்கள் தொழிலாக பார்க்கவில்லை சேவையாக பார்க்கிறோம் என்பது தான்.

மற்றொன்று பிற கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகவும், குடும்பத்திற்காக கட்சி நடத்துவதாகவும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல் ஹாசனின் அண்ணன் மகளும், பிரபல நடிகையுமான சுஹாசினி கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது சர்ச்சையை எழுப்பியது.

இது குடும்ப அரசியல் கிடையாதா? நடிகர், நடிகைகள் வாக்கு சேகரிக்கும் கவர்ச்சி அரசியலை கமலும் கையில் எடுத்துள்ளாரா? போன்ற விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்தது. தற்போது மகள் அக்ஷரா ஹாசனால் சிக்கலில் சிக்கியிருக்கிறார் கமல் ஹாசன்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அப்பா கமல் ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை மகள் அக்ஷரா ஹாசன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த பலரும் என்ன ஆண்டவரே வாரிசு அரசியல் கூடாது என சொல்லிவிட்டு, மகளை தேர்தல் களத்தில் இறங்கியுள்ளீர்கள்? அடுத்து ஸ்ருதி ஹாசனும் பிரசாரத்திற்கு வருகிறாரா? என கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தினரோ, ‘கமல் காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்துள்ள இடத்தில் சமீபத்தில் மீண்டும் அடிபட்டது அனைவரும் அறிந்த செய்தி தான். இதனால் ஏற்படும் கடும் கால் வலியைக் கூட பொருட்படுத்தாமல் கமல் ஒற்றை காலில் நின்றபடி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த மாதிரி சமயத்தில் உதவுவதற்காக தான் அப்பாவுடன் மகள் அக்ஷரா ஹாசன் இருப்பதாக’ கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது