- Home
- Politics
- என்னை எதிர்க்கும் அவ்வளவு பேரும் சங்கிகள்..! பாஜகவுக்கு நான் மட்டும்தான் எதிரி..! திமிறியடிக்கும் திருமா..!
என்னை எதிர்க்கும் அவ்வளவு பேரும் சங்கிகள்..! பாஜகவுக்கு நான் மட்டும்தான் எதிரி..! திமிறியடிக்கும் திருமா..!
ஏதோ நாம் திமுகவுக்கு முட்டுக் கொடுப்பதாகப் பேசுகிறோம் என சில அர்ப்பர்கள் வதந்திகளை பரப்புகிறார்கள். திமுக அதிகார உச்சத்தில் அசுல பலத்தோடு உட்கார்ந்து இருக்கிற கட்சி. அதுக்கு யார் போய் முட்டுக் கொடுக்கப் போகிறார்.

‘‘அந்த அம்மா இல்லாத நேரத்திலேயே 65 இடங்களில் வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள். திமுக Vs அதிமுக என்று இருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘‘அந்த தனியார் தொலைக்காட்சியில் காட்டிய வீடியோவுக்கு அடுத்து 35 வது நிமிடத்தில் அண்ணாமலை டிவிட் செய்கிறார். ஹெச்.ராஜா, அப்புறம் நைனார் நாகேந்திரன், அடுத்து கஸ்தூரி, வானதி சீனிவாசன். இவர்களெல்லாம் யார்? அவ்வளவு பேரும் சங்கிகள். அப்படியானால் திருமாவளவனை எதிர்க்கக் கூடிய அத்தனை பேரும் ஒரே கான்செப்டில் இருப்பவர்கள். நீதிபதி சொன்னார், ‘‘என்றைக்கு மனுஷ்மிருதி பற்றி பேச தொடங்கினாயோ அன்றைக்கே இதெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் இந்த தாக்குதல் நடக்கத்தானே செய்யும்’’ நாம் இதை எதிர்பார்க்கிறோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.
கொள்கை வார். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. தேர்தல் ரீதியாக உங்களுக்கு திமுக எதிரியாக இருக்கலாம். வேறு யாராவது எதிரியாக இருக்கலாம். கொள்கை ரீதியாக நாங்கள்தான் உங்களுக்கு தமிழ்நாட்டில் எதிரி. விசிக Vs பாஜக. அதிமுகவை காலி செய்வதுதான் உங்கள் நோக்கம். இதுதான் உங்கள் ஹிட்டன் அஜெண்டா. அந்த விவரம் தெரியாமல் அதிமுக அவர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நமது கவலை. அதனால்தான் நான் அடிக்கடி சொல்லுகிறேன் உங்கள் சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள், தனியாக நில்லுங்கள்.
அந்த அம்மா இல்லாத நேரத்திலேயே 65 இடங்களில் வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள். திமுக Vs அதிமுக என்று இருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது. திமுக vs பாஜக என மாற்றி விடாதீர்கள். அது நல்ல அரசியல் இல்லை. நீங்கள் எல்லாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் என்று சொன்னால் நீ யார் இதைப் பற்றி கேட்பதற்கு என்று சொல்கிறார்கள். தேர்தல் ரீதியாக உங்களுக்குள் எப்படி வேணாலும் சண்டை போட்டுக் கொள்ளுங்கள். பிரச்சனை கிடையாது. ஆனால் சாதி ஒழிப்பை ஏற்காதவர்கள், சமத்துவத்தை ஏற்காதவர்கள், பெண்ணுரிமையை விரும்பாதவர்கள் இந்த மண்ணில் வலுப்பெற வேண்டும் என்று விரும்புவதை, அதற்கு முயற்சிப்பதை அதற்கான அரசியல் நகர்வுகளை செய்வதை எப்படி நாம் நீடிக்க பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அதுதான் பிரச்சனை.
இதனால் நாம் தலையிட்டு பேசினால் ஏதோ நாம் திமுகவுக்கு முட்டுக் கொடுப்பதாகப் பேசுகிறோம் என சில அர்ப்பர்கள் வதந்திகளை பரப்புகிறார்கள். திமுக அதிகார உச்சத்தில் அசுல பலத்தோடு உட்கார்ந்து இருக்கிற கட்சி. அதுக்கு யார் போய் முட்டுக் கொடுக்கப் போகிறார். வீழந்த கட்சிக்குத்தானே முட்டுக் கொடுக்க முடியும்? சாயும் நிலையில் இருக்கும் ஒரு இயக்கத்துக்குத்தான் முட்டுக் கொடுக்க முடியும். திமுக அசுர பலத்தில் ஆட்சியில் உட்கார்ந்து இருக்க கட்சி. அந்த கட்சியை எவ்வளளோ பேர் எதிர்த்துப் பார்த்து, அவனவன் எல்லாம் போய் சேர்ந்து விட்டான். காணாமல் போய்விட்டான், கரைந்து போய் விட்டான். அந்தக் கட்சிக்கு போய் நாம் ஏன் முட்டுக் கொடுக்க வேண்டும்? நாங்கள் ஏன் பேசுகிறோம் என்றால் நாங்கள் பேசுகிற அரசியலுக்கு நீங்கள் வேட்டு வைக்கிறீர்கள். அது திமுக பேசலாம். திமுக பேசவில்லை என்பதற்காக நாங்கள் அந்த அரசியல் பேசாமல் இருக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.
