கேவலம் ஆபாச கும்பலை வைத்து நாடகம் போடும் திமுக..! முற்றும் தவெக - திமுக மோதல்
காரப்பாக்கம் கணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர் ஒருவர் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச பாடல்களுக்கு நடனம் ஆடுபவர் என ஆதார வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர் தவெகவினர்.

சென்னை, மதுரவாயில் திமுக எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதியின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது முன்னிலையில் தவெக உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். அப்போது தவெக இளைஞர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை உடைத்து, படிவங்களை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை வரவேற்று தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த வைஷ்ணவி, ‘‘Gen Z Kids புரிந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது! வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் காரப்பாக்கம் கணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர் ஒருவர் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச பாடல்களுக்கு நடனம் ஆடுபவர் என ஆதார வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர் தவெகவினர்.
அந்த இளைஞர் நடனமாடிய ஆபாச பாடல் வீடியோவை பகிர்ந்து, ‘‘கேவலம், ஆபாச கும்பலை வைத்து நாடகம் போடும் திமுக. ஆபாச நடன கும்பலை காசு கொடுத்து கூட்டி வந்து டிராமா போடும் திமுக. நேற்று இந்த நாடக கும்பலை தான் தவெகவில் இருந்து திமுகவுக்கு வந்துட்டாங்க என பீலா விட்டது. உங்களது திருட்டு வேலை அம்பலம் ஆகியது. 75 வருஷம்... இன்னுமா இந்த பொறி நமத்து போகாமல் இருக்கும்..? என திமுகவை கிண்டலடித்து வருகின்றனர்.
— TVK விஜய்பாலாஜி (@Vijaybalaj5004) November 17, 2025
இதற்கு பதிலடி கொடுத்து வரும் திமுகவினர், ‘‘ அட என்னங்க, தலைவன் குஷி படத்துல பண்ணினத இவன் வேறு பாட்டுக்கு பன்னுறான்... இது ஒரு குத்தம்மா? அது நாடக கும்பல். நீங்க சினிமா கும்பல். விஜய் அடிக்காத கிஸ்ஸா? மாமியாருக்கே சோப்பு போட்டவர் ஆச்சே’’ எனக் கூறி வருகின்றனர்.
ச்சீ.. ஆபாச நடன கும்பலை காசு கொடுத்து கூட்டி வந்து டிராமா போடும் திமுக🤢 https://t.co/AHJLTQ2C65
— priya (@PriyankaSmile01) November 17, 2025