திமுக கூட்டணியில் தேமுதிக... பிரேமலதா ராஜதந்திர முடிவு..! காங்கிரஸுக்கு ஆப்பு..!
திமுக தரப்பில் அமைச்சர் எ.வ.வேலு, பிரேமலதா விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். 7 தொகுதிகள், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுவதற்கு தனியாக இரண்டு தொகுதிகள் ஒதுக்கித் தருவதாகவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக சஸ்பென்ஸ் வைத்து பேசி வந்த பிரேமலதா விஜயகாந்த் வருகிற ஒன்பதாம் தேதி கடலூர் மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்க உள்ளதாக கூறி வந்தார். அவர் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. அதிமுக தலைமை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் தங்களுக்கு ராஜ்யசபா பதவி தரப்படவில்லை எனவும் குற்றம்சாட்டி அதிமுகவிலிருந்து தேமுதிக விலகி நிற்கிறது. இருந்தபோதும் வரும் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக ராஜ்யசபா பதவி ஒதுக்கி தருவோம் என அதிமுக தரப்பில் தூதுவிடப்பட்டது. ஆனால், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியை புறக்கணித்து விட்டார். இதற்கு காரணம் பிரேமலதா விஜயகாந்த் பொருத்தவரையில எந்த கட்சியை வெற்றி பெறுகிறதோ அந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
அதனால் தான் தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என பேசி வருகிறார். அந்த வகையில் அதிமுகவுடன், பாஜக மட்டுமே கூட்டணி வைத்துள்ள நிலையில வெற்றி வாய்ப்பு குறைவு என பிரேமலதா விஜயகாந்த் உணருகிறார். கருத்துக்கணிப்புகளும் அதிமுகவிற்கு ஆதரவாக இல்லை. எனவே அதிமுக கூட்டணியில் இணைந்தால் தோல்வியை சந்திக்க வேண்டும் என்கிற அடிப்படையில் அந்த கூட்டணியை பிரேமலதா புறக்கணித்திருக்கிறார். இதற்கிடையே தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தவெகவை பொருத்தவரையில் நடிகர் விஜய் இணைத்துக்கொள்ள விரும்புகிறார். காரணம் விஜயகாந்த் மீதான அனுதாப அலை ஓட்டும், விஜய் ரசிகர்கள் ஓட்டும் ஒன்றாக இணையும்போது வெற்றி வாய்ப்பு அதிகமாகும் என விஜய் கருதுகிறார்.
இந்நிலையில் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பிரேமலதா விஜயகாந்த் தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கி இருக்கிறார். முன்னதாக தவெக, காங்கிரஸ் கட்சியுடன் இணையும். ஆகையால் தாமும் தவெக கூட்டணியில் இணையலாம் என்ற முடிவில் இருந்தார். இதற்கு காரணம் தவெக, காங்கிரஸ் கட்சி, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என பலரும் இணையும்போது தவெகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என ஒரு விதமான கணக்கு போட்டு வைத்திருந்தார். தற்போது காங்கிரஸ் தரப்பில் தவெக கூட்டணி இல்லை என இறுதி முடிவு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தவெகவுடன் இணைந்தால் தேமுதிகவும் பின்னடைவை சந்திக்கும் என இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
இதற்கிடையே திமுக தரப்பில் அமைச்சர் எ.வ.வேலு, பிரேமலதா விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். 7 தொகுதிகள், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுவதற்கு தனியாக இரண்டு தொகுதிகள் ஒதுக்கித் தருவதாகவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக தரப்பில் கூட்டணியும் பலமாக இருப்பதால் திமுகவுடன் கூட்டணி சேரலாம் என பிரேமலதா விஜயகாந்த் இறுதி முடிவு எடுத்திருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல தேர்தல் செலவுக்கு தேவைப்படும் பணத்தின் ஒரு பகுதியை திமுக தரப்பில் தருவதாகவும் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. இடனால் திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்கிற இறுதி முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் தேமுதிக இணைந்தபோது கிட்டத்தட்ட ஏழு சதவீதத்திற்கும் மேலாக வாக்கு வங்கி இருந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து சரிவடைந்த நிலையில் தற்போது இரண்டு சதவீத வாக்கு வங்கி மட்டுமே தேமுதிகவிற்கு இருக்கிறது. ஆனாலும், தற்பொழுது விஜயகாந்த் மீதான அனுதாப அலை வீசும் என்ற அடிப்படையில் தான் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே திமுகவுடன், தேமுதிக இணைந்தால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 38 தொகுதிகள் ஒதுக்கித் தரவேண்டும். மூன்று அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஆலோசனை செய்த திமுக மேலிடம், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கித் தருவதாக முடிவு செய்து இருக்கிறது. மேலும் அமைச்சரவையில் இடம் தர முடியாது. தேவைப்பட்டால் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் தரலாம் என ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முடிவுக்கு வராத பட்சத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசி இறுதி முடிவு எட்ட இருக்கிறார். இந்நிலையில் தேமுதிக தங்களது கூட்டணியில் இணையுமானால் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்க தர முடியாது. 18 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கித் தர முடியும். 10 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கறாராகப் பேசியிருக்கிறார்.
இந்நிலையில தமிழக காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது? என்பது தெரியவில்லை. இருந்தபோதிலும் தற்போது அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த வருவதால் ராகுல் காந்தியை பொறுத்தவரையில் திமுக கூட்டணியை விட்டு பிரிந்து செல்வதை விரும்பவில்லை. எனவே திமுகவின் முடிவுக்கு டெல்லி காங்கிரஸ் மேலிடம் சம்மதம் தெரிவிக்கும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
