- Home
- Politics
- கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக்கூடாது..! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு..! தவெகவுக்கு சிக்கல்..?
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக்கூடாது..! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு..! தவெகவுக்கு சிக்கல்..?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் இந்த மனுவை விரைவில் விசாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
எஸ்.ஐ.டி விசாரணை சரியான திசையில் பயணித்ததால் அதற்கும், அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தவெக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு வசமே விசாரணையை ஒப்படைக்க கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சிபிஐ விசாரணைக்கான இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது மாநில சுயாட்சியை பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணம் என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்டது. செப்டம்பர் 27, 2025 அன்று தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம்காவல்துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தையும் அறிவித்தார்.
தவெக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாஜக சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அக்டோபர் 13, 2025 அன்று, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா தலைமையிலான அமர்வு, எஸ்.ஐ.டி, ஆணையத்தின் விசாரணைகளை இடைக்கால ரத்து செய்து, வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது. இதை மூன்று கண்காணிப்புக் குழு. ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை) கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியது.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் தாக்கல் செய்த பதில் மனுவில் ‘‘மனுவின் ஆரம்பகட்டத்தை) விசாரிக்காது. அரசுக்கு போதிய வாய்ப்பு இல்லாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிபிஐ தலையீடு, மாநில காவல்துறையின் திறனை கேள்விக்குள்ளாக்கி, ஜனநாயக அமைப்பை பலவீனப்படுத்தும். அரசியல் உணர்வுகள் இருந்தாலும், அது விசாரணை மாற்றத்திற்கு போதாது என்று வாதிடப்பட்டது. உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி முழுமையாக தகுதியானது, பாரபட்சமின்றி விசாரிக்கும். சிபிஐ தேவையில்லை’’ என வாதிட்டார்.
சிபிஐ, ஐ.பி.எஸ். பிரவீன் குமார் தலைமையில் 15 அதிகாரிகளுடன் கரூரில் விசாரணை நடத்தி வருகிறது. கூட்ட நெரிசல் வீடியோகாட்சிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்கிறது. ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழு கரூரை நேரில் பார்வையிட்டனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் இந்த மனுவை விரைவில் விசாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஐ.டிக்கு திரும்ப விசாரணை ஒப்படைக்கப்படுமா என்பது உச்சநீதிமன்றத்தின் அடுத்த அமர்வில் தெரிய வரும்.
