- Home
- Politics
- கரூர் விவகாரத்தை சும்மா விடக்கூடாது..! அமித் ஷா போட்ட ஆர்டர்..! பெரும் படையை அனுப்பும் பாஜக..!
கரூர் விவகாரத்தை சும்மா விடக்கூடாது..! அமித் ஷா போட்ட ஆர்டர்..! பெரும் படையை அனுப்பும் பாஜக..!
தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருரூக்கு வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி சம்பவ இடத்தை ஆய்வு செய்தும் வருகிறார். இந்நிலையில், பாஜக தலைமை விஜயை சந்திக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது தொண்டர்களும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டதாலும், நிகழ்ச்சியைத் தொடங்க தாமதம் ஏற்பட்டதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கரூர் சம்பவத்தை அறிந்து கொண்ட உடன் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் என பெருந்தலைவர்கள் அனைவரும் வேதனையோடு அறிக்கை விடுத்திருந்தனர். டெல்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு பேசி நிலவரத்தை கேட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகளை பற்றி விசாரித்து இருக்கிறார்கள். அடுத்து கரூர் சம்பவம் குறித்து ரிப்போர்ட் அனுப்பவும் உத்ததரவிட்டு இருக்கிறார்கள்.
அதே போல் ஆளுநர் மாளிகைக்கும் டெல்லி தலைமை போன் செய்து நிலவரத்தை விசாரித்து இருக்கிறது. ஆளுநர் ஆர்.என். ரவியிடமும் கரூர் சம்பவம் குறித்து ஒரு அறிக்கை அனுப்பக் கேட்டு இருக்கிறது டெல்லி மேலிடம். அவரும் தமிழக அரசிடம் இப்போது கரூர் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டு இருக்கிறார்.
இந்த விவகாரத்தை டெல்லி தலைமை சென்சிட்டிவான விஷயமாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த சம்பவத்தில் திமுக அரசின் பங்கு என்ன? அவர்கள் இதனை எளிதாக கையாண்டார்களா? என்பதை உன்னிப்பாக உற்று நோக்க ஆரம்பித்துள்ளது பாஜக டெல்லி தலைமை. கரூர் கூட்டத்திற்கு போதிய பாதுகாப்புகளை திமுக அரசு கொடுக்கவில்லை. கேட்ட இடத்தை ஒதுக்கவில்லை. பல கெடுபிடிகளை விதித்தனர். விஜய் கூட்டம் நடந்த போது மின்சாரம் தடைபட்டது. ஜெனரேட்டரை ஆன் செய்ய முயன்றபோது அதன் கனெக்சன் வயரையும் கட் செய்து இருந்ததாகக்கூறப்படுகிறது.
அந்த நேரம் பார்த்து விஜய் மீது கூட்டத்தில் இருந்து செருப்பை வீசினார்கள். இன்னும் சில பேர் பேர் கூட்டத்தில் நுழைந்து பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது காவல்துறையினரும் தடியடி நடத்தினார்கள். இதனால்தான் ஒட்டுமொத்த கூட்டமும் சிதறி ஓடி இவ்வளவு பெரிய துயரம் நடந்து விட்டது. இது திமுகவோட திட்டமிட்ட சதி என தவெக தரப்பில் சொல்கிற கருத்துக்களை பாஜக தலைமை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு அந்த கோணத்திலேயே பார்த்து வருகிறது என்கின்றனர்.
தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருரூக்கு வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி சம்பவ இடத்தை ஆய்வு செய்தும் வருகிறார். இந்நிலையில், பாஜக தலைமை விஜயை சந்திக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. பிஜேபி தரப்பில் இப்போதைக்கு சந்திக்க வேண்டும் என விஜய் தரப்பில் சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்கவும் பாஜக 8 பேர் கொண்ட குழுவை அதிகாரப்பூர்வமாக அமைத்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கரூரில் தவெக கட்சியின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தார்.
இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராயவும், இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தமிழ்நாட்டின் கரூர் நகருக்குச் செல்ல குழுவை அமைத்துள்ளார்.
அதன்படி, ஹேமமாலினி, எம்.பி, அனுராக் தாக்கூர், எம்.பி, தேஜஸ்வி சூர்யா, எம்.பி, பிரஜ் லால், எம்பி, முன்னாள் டிஜிபி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, எம்.பி சிவசேனா. அப்ரஜிதா சாரங்கி, எம்.பி, ரேகா சர்மா, எம்.பி, தெலுங்கு தேசம் எம்.பி.,யான புட்டா மகேஷ் குமார்’’ ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.