MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • தயங்கும் விஜய்..! நெருங்கும் பாஜக..! அமித் ஷாவின் அதிரடி மூவ்..! பற்றி எரியும் அரசியல் களம்..!

தயங்கும் விஜய்..! நெருங்கும் பாஜக..! அமித் ஷாவின் அதிரடி மூவ்..! பற்றி எரியும் அரசியல் களம்..!

திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தொடக்க முதலே தவெகவை இணைக்க முயற்சித்தும் வந்தது. ஆனால், விஜய் திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து விமர்சித்து வந்தார்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Sep 29 2025, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

ஆடிட்டர் குருமூர்த்தியை தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த விஜய்க்கு நெருக்கமான நபர்கள் நேற்று அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் ஆர்வலர்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பேசிய கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது. ஒருபுறம் இப்படி கண்மூடித்தனமாக மக்கள் கூடலாமா? அப்படியே மக்கள் கூடினாலும் அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே யோசித்து எடுக்க வேண்டும் அல்லவா? என்பதற்கான கேள்விகள் பலராலும் எழுப்பப்பட்டு வந்தாலும், முறையாக கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைக்காத தவெக நிர்வாகிகள் மீது அனைத்து தரப்பினராலும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

குறிப்பாக தவெக தலைவர் விஜய் சரியான நேரத்துக்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வராததும், இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும் நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல், உடனே கரூரில் இருந்து சென்னை திரும்பியதும் விஜய் மீது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் மீது தமிழக அரசு பதிந்துள்ள வழக்குகளும், நியமித்துள்ள விசாரணை ஆணையமும் அக்கட்சிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது, சந்தேகங்களையும் கிளப்பி இருக்கிறது.

திமுக- தவெகவுக்கு இடையேயான யுத்தத்தை கரூர் சம்பவம் மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிற நிலையில், டெல்லி இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டத்தில் இறங்கியுள்ளது. கரூர் விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே தமிழக அரசிடம் இருந்து தன்னுடைய உள்துறை அமைச்சகம் மூலமாக அறிக்கையை கேட்கச் சொன்னார் அமித் ஷா. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தவெக அணுகும் முன்னரே இது நடந்தது. தொடர்ந்து ஆளுநரும், தமிழக அரசிடம் இருந்து இந்த சம்பவம் தொடர்பாக விவரங்களை கேட்டுள்ளார்.

34
Image Credit : own

இதற்கிடையில், தேசிய மனித உரிமை ஆணையம் விவரங்களை கேட்க வேண்டும், உரிய விசாரனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார் தவெக முன்னணி தலைவர்களில் ஒருவரும், பாஜகவில் முன்பு நிர்வாகியாக இருந்தவருமான நிர்மல் குமார். இந்தப் பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை செய்யுமாறு விஜய் தரப்புக்கு ஆலோசனை சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆடிட்டர் குருமூர்த்தியை, விஜய் சந்திக்குமாறு வலியுறுத்தப்பட்டதாகவும், ஆனால், விஜய் அதற்கு தயங்கிய நிலையில், சந்திக்க தனது தரப்பினரை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

44
Image Credit : Asianet News

காரணம், திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தொடக்க முதலே தவெகவை இணைக்க முயற்சித்தும் வந்தது. ஆனால், விஜய் திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து விமர்சித்து வந்தார். பாஜகவை கொள்கை எதிரியென்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் வரையறுத்தார். இப்படிப்பட்ட சூழலில் விஜய்க்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அடுத்தடுத்த காய் நகர்த்தல்களை டெல்லியில் ஆரம்பித்துவிட்டன.

இதை அறிந்து கொண்டு தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினோடு பேசிய கையோடு, தவெக தலைவர் விஜயை தொடர்பு கொண்டும் பேசி இருக்கிறார்’’ என்கிறார்கள் நம்மிடம் பேசிய டெல்லி வட்டாரத்தினர்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
அமித் ஷா
டிவி.கே. விஜய்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
முதல்வர் சொன்ன ஒற்றை வார்த்தை.! கரூர் சம்பவத்தில் விஜய்க்கு கை கொடுத்த ஸ்டாலின்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved