MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • திமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் அன்வர்ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு.! ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

திமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் அன்வர்ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு.! ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் அன்வர் ராஜா, திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அவர், திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Aug 09 2025, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : facebook/ anwarraja and eps

அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் அன்வர் ராஜா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். மேலும் அதிமுகவில் இஸ்லாமிய தலைவர்களில் முக்கிய தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துகளை அன்வர் ராஜா தொடர்ந்து தெரிவித்து வந்தார். 

இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அடுத்த சில ஆண்டுகளில் பாஜகவுடன் அதிமுக உறவை முறித்துக்கொண்ட நிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

23
Image Credit : Asianet News

இந்த நிலையில் தற்போது 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத அன்வர் ராஜா, கட்சி நிகழ்வில் பெரிய அளவில் கலந்து கொள்ளாலம் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஜூலை 21 ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். 

அதிமுக-பாஜக கூட்டணியால் அதிருப்தி அடைந்திருந்த அன்வர் ராஜா, பாஜகவை விமர்சித்து வந்தார் மற்றும் அதிமுகவின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகக் கூறி, திமுகவில் இணைய முடிவு செய்தார்.

Related Articles

Related image1
ராமதாசுக்கு நல்ல புத்தி கொடு.. தலைய கூட தூக்க பயந்ததவங்க ஐயாவுக்கு அட்வைஸ்
Related image2
ஏதோ திமுக மூளையில் உதித்த திட்டம் மாதிரி பேசுறீங்க! நான் கேக்குற கேள்விக்கு தில்லு இருந்தால் பதில் சொல்லுங்க முதல்வரே! L.முருகன்!
33
Image Credit : DMK

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். இந்த சூழ்நிலையில் அன்வர் ராஜாவிற்கு திமுகவில் மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த திமுக இலக்கிய அணித்தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அரசியல்
மு. க. ஸ்டாலின்
திமுக
அதிமுக பாஜக கூட்டணி
எடப்பாடி பழனிசாமி அதிமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Related Stories
Recommended image1
ராமதாசுக்கு நல்ல புத்தி கொடு.. தலைய கூட தூக்க பயந்ததவங்க ஐயாவுக்கு அட்வைஸ்
Recommended image2
ஏதோ திமுக மூளையில் உதித்த திட்டம் மாதிரி பேசுறீங்க! நான் கேக்குற கேள்விக்கு தில்லு இருந்தால் பதில் சொல்லுங்க முதல்வரே! L.முருகன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved