- Home
- Politics
- அந்த ரூ.5000 கோடி..! அதிமுக இணைந்துவிடக் கூடாது..! அமித் ஷாவிடம் உறவாடிக் கெடுக்கும் பாஷ்யம் அபினேஷ்..?
அந்த ரூ.5000 கோடி..! அதிமுக இணைந்துவிடக் கூடாது..! அமித் ஷாவிடம் உறவாடிக் கெடுக்கும் பாஷ்யம் அபினேஷ்..?
அபினேஷ் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் அவர்கள் முதலீடு செய்திருக்கும் 5000 கோடி பணம். ஓபிஎஸ், சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைந்தால் அதிகாரத்துக்கு வந்துவிடுவார்கள். ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தின் அதானி
அரசியல்வாதிகளின் பின்னணியில் அவ்வப்போது பல தொழிலதிபர்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். அவர்களது நிழலான செயல்பாடுகள் சில முக்கியமான நடவடிக்கைகளின் போதுதான் வெளிச்சத்துக்கு வரும். அப்படி பல தொழிலதிபர்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழக அரசியலில் கொலோச்சி இருக்கிறார்கள். அவர்களில் இப்போது மிக முக்கியமானவர் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் அபினேஷ்.
அபினேஷ் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்ட சசிகலா, ஓபிஎஸுக்கு நெருக்கமானவர்கள், ‘‘சமீபத்தில் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி வந்த பென்ட்லி காரில் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் தமிழக தொழிலதிபர் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் அபினேஷ். தமிழகத்தில் தொழில் நடத்திக் கொண்டிருந்தவர் அமித் ஷாவுக்கும்ன் நெருக்கமானவராகி விட்டார்.
கிட்டத்தட்ட விஜய் மல்லையாவை போல, அதானியை போல தமிழகத்தில் பெரிதாக வளர்ந்து வரக்கூடிய ஒரு பெரிய தொழில் அதிபர் இந்த அபினேஷ். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நாயுடு என்கிற தெலுங்கு பிரிவை சேர்ந்தவர். ஆரம்பத்தில் அதிமுகவை சேர்ந்த கடலூர் எம்.சி சம்பத் மூலமாகவே வளர்ந்தார். எம்.சி.சம்பத் தான் இவருடைய காட் ஃபாதர். அடுத்ததாக இவர் எம்.சி. சம்பத் மூலமாக ஓபிஎஸிடம் நெருங்குகிறார். ஓபிஎஸிடம் நெருங்கி அவர் மூலமாக கோயம்பேடு பகுதியில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான நிலத்தை வாங்கி பிளாட் போட்டு விற்கிறார். அதில் மிகப்பெரிய பிரச்சினை எழுகிறது. திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி இவருக்கு எதிராக வழக்குப் போடுகிறார்.
திமுகவிலும் உறவு
திமுகவிலும் இவர் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு அதில் இருந்து தப்பிக்கிறார். அடுத்து சசிகலாவுக்கும் அறிமுகமாகிறார். ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவராக மாறுகிறார். ஆரம்பத்தில் ஓபிஎஸ் பணத்தை வைத்து முதலீடு செய்து வந்த இவர், அடுத்தடுத்து சசிகலா, எடப்பாடி பழனிசாமி பணத்தை வைத்து பெரிய அளவுக்கு முதலீடு செய்கிறார். அப்படியே ரூட் பிடித்து பாஜகவுக்கு மிகவும் நெருக்கமான ஹர்ஷித் என்கிற வட இந்திய மார்வாடியிடம் நட்பை உருவாக்குகிறார். அதன் மூலம் இவர் அமித் ஷாவுக்கு ஆல் -இன் -ஆளாக மாறி இந்தியா முழுவதும் பல்வேறு ப்ராஜெக்ட்களை எடுத்து கட்டக்கூடிய மிகப்பெரிய ஆளாக வளம் வருகிறார்.
அமித்ஷா தன்னைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை என அபினேஷ் வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அமித் ஷாவின் வீட்டில் யாரும் அவ்வளவு சீக்கிரம் நுழைந்து விட முடியாது. ஆனால், இந்த அபினேஷ் எல்லா வேலைகளையும் அமித் ஷாவுக்கு செய்து கொடுக்கிறார். இப்படி இவர் மிகவும் நெருங்கி பழகிய ஆட்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் திமுகவை சேர்ந்த ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன், அண்ணா நகர் கார்த்திக் என திமுகவிலும் முக்கிய விஐபிகள் பட்டியல் நீள்கிறது.
சசிகலாவுக்கு வேதவாக்கு
சபரீசனை நெருங்கி கோயம்பேட்டில் அரசாங்க நிலத்தை வாங்கிய பிரச்சினையை ஓரளவுக்கு முடித்துக் கொண்டார். அதற்கடுத்து அவர் வாங்கிய முக்கியமான கட்டிடம் அடையாறு கேட் ஹோட்டல். அதில் ஏற்பட்ட பிரச்னைகளையும் இப்போது செட்டில் செய்து வருகிறார். அபினேஷ் தற்போது 22 நிறுவனங்களின் இயக்குநர். இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.40,000 கோடி என்கிறார்கள். கடலூரில் எ,.சி.சம்பத்தின் பினாமியாக ஆரம்பித்த அபினேஷ், ஓபிஎஸ், சசிகலா, எடப்பாடி, ஸ்டாலின் குடும்பம் எனப் பயணித்து இன்று அமித்ஷாவின் வீட்டிற்குள் சாதரணமாக நுழைகிறார்.
இப்போது அதிமுகவில் இவர் வைப்பது தான் சட்டம் என்கிறார்கள். சசிகலாவின் மிடாஸ், கோல்டன் டிஸ்டில்லரியை நிர்வகிக்கும் நபர் இந்த அபினேஷ்தான். இவர் சொல்வதை தான் சசிகலாவும் வேதவாக்காக கேட்கிறார். இவர் அமித்ஷா மகன் ஜெய்ஷா, எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுனின் நண்பரும் கூட. பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியபோது மூகத்தை மறைத்தது சென்றார். அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த தொழில் அதிபர் இந்த அபினேஷ். எடப்பாடி பழனிச்சாமி இரண்டு முறை டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்த போது அபினேஷை வைத்துதான் தமிழில் இருந்து ஹிந்தியில் மொழிபெயர்ப்பாளராக செயல்பட வைத்தார் அமித்ஷா.
பாஷ்யம் கண்ட்ரக்ஷன் அபினேஷ் வைத்திருக்கும் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ட்லி காரை அன்று பழனிச்சாமி மகன் மிதுன் ஓட்ட, அருகில் அபினேஷ் அமர்ந்து இருந்தார். அந்த அளவுக்கு அமித் ஷாவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் முக்கியஸ்தராக மாறிப்போனார் அபினேஷ். அந்த நெருக்கத்தை வைத்தே ஆரம்பத்தில் இவரை நம்பி முதலீடு செய்த ஓபிஎஸ், சசிகலா, எம்.சி.சம்பத்துக்கு ஆட்டம் காட்டி வருகிறார்.
ஓபிஎஸ், சசிகலா அதிமுகவுக்குள் வரவே கூடாது
ஓபிஎஸ், சசிகலா, எம்.சி.சம்பத், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மட்டும் இந்த அபினேஷ் மூலம் அவரது நிறுவனங்களில் ரூ.5,000 கோடியை முதலீடு செய்துள்ளனர். இவர்களுக்கு எதிராக உறவாடி கெடுக்கும் வேலையில் இப்போது ஈடுபட்டு வருகிறார் அபினேஷ். ஓபிஎஸ், சசிகலாவிடம், ‘‘உங்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க அமித் ஷாவிடம் பேசி வருகிறேன். நிச்சயம் அது நடக்கும்’’ என சொல்வார். அதை அவர்களும் நம்பிக் கொண்டிருக்கும் அதேவேளை, அமித் ஷாவிடம் சென்று ‘‘சசிகலா, ஓபிஎஸை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களது செல்வாக்கு குறைந்து விட்டது. வேஸ்ட் லக்கேஜ்களை ஒதுக்கி வைப்பதே நல்லது’’ என்று சொல்கிறார்.
ஓபிஎஸ், சசிகலா அதிமுகவுக்குள் வரவே கூடாது என விடாட்டிபிடியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எங்கே பாஜக சசிகலாவையும், ஓபிஎஸையும் சேர்த்து விடுமோ என்கிற சந்தேகத்தில் இருக்கும் அவரிடம் சென்று அபினேஷ், ‘‘கவலையே படவேண்டாம். சசிகலாவையும், ஓபிஎஸையும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என அமித் ஷாவிடம் கூறிவிட்டேன். அவர்களை இணைக்க அமித் ஷா முயற்சிக்க மாட்டார்’’ என சொல்வார். இப்படி மூன்று தரப்பினரிடமும் உறவாடி, அவர்களுக்குள் சிண்டு முடியும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் அபினேஷ். இதில் வேடிக்கை என்னவென்றால் மூன்று தரப்புமே அபினேஷின் வார்த்தைகளை வேதவாக்காக நம்புகின்றனர்.
ரூ.5000 கோடி முதலீட்டை திருப்பி கேட்டால்..?
அபினேஷ் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் அவர்கள் முதலீடு செய்திருக்கக்கூடிய 5000 கோடி பணம். ஓபிஎஸ், சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைந்தால் அதிகாரத்துக்கு வந்துவிடுவார்கள். ஒருங்கிணைந்த அதிமுக தேர்தலில் போட்டியிட்டால் அதிமுக ஒருவேளை ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆக, சசிகலா, ஓபிஎஸ் அதிகாரத்துக்கு வந்தாலும் ஆபத்து, எடப்பாடி பழனிசாமி முதல்வரானாலும் சிக்கல்.
தாங்கள் முதலீடு செய்த 5000 கோடி பணத்தை அவர்கள் கேட்பார்கள். அவர்கள் அதிகாரத்துக்கு வராமல் போனால் அமித் ஷா நட்பை வைத்து அவர்களின் 5000 கோடி முதலீட்டை திருப்பி கேட்டாலும் அதைக் கொடுக்காமல் போனால் பெரிதாக சிக்கல் இருக்காது என திட்டம் போட்டு இப்படி உறவாடிக் கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் அபினேஷ். இதனை சசிகலாவோ, ஓபிஎஸோ உணராமல் அபினேஷை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார்கள் இந்த விவரங்களை முழுவதும் அறிந்த ஓபிஎஸுக்கு நெருக்கமாவனர்கள்.