MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • 2026 Election : 5 மாநிலங்களின் மொத்த தொகுதிகள் எத்தனை? பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் - முழு விவரம் இதோ.!

2026 Election : 5 மாநிலங்களின் மொத்த தொகுதிகள் எத்தனை? பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் - முழு விவரம் இதோ.!

2026 Assembly Election Latest Update : 2026 ஆம் ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 மாநிலங்களிலும் உள்ள மொத்த இடங்கள், பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள், போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

4 Min read
Author : Ramprasath S
Published : Apr 09 2026, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
2026 5 State Election
Image Credit : Gemini AI

2026 5 State Election

2026 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. மொத்தம் 824 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று ஏப்ரல் 9 சில மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. ஐந்து மாநிலத்தின் தேர்தல் முடிவுகளும் மே நான்காம் தேதி வெளியாகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் (2029 ஆம் ஆண்டு) வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் 5 சட்டமன்றங்களின் அரசாங்கங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தீர்மானிக்க உள்ளது. இதன் காரணமாக தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு இது அக்னி பரீட்சையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான மொத்த இடங்கள், பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள், தேர்தல் தேதி, போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
தமிழ்நாடு
Image Credit : our own

தமிழ்நாடு

  • மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை : 234
  • பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் : 118
  • தேர்தல் தேதி : ஏப்ரல் 23 (ஒரே கட்டமாக) 
  • தேர்தல் முடிவுகள் : மே 4
     

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணியும், அதிமுக தலைமையில் மெகா கூட்டணியும் அமைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் நாம் தமிழர், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல சிறிய கட்சிகள் தனித்துப் போட்டியென பலமுனைப் போட்டி உருவாகி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை ஆட்சி செய்து வரும் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக ஆட்சியை அமைப்பதற்கு முயன்று வருகிறார். மறுபுறம் இழந்த செல்வாக்கை மீட்க எடப்பாடி பழனிச்சாமியும் தீவிரம் காட்டி வருகிறார்.

தான் செயல்படுத்திய சமூக நலத் திட்டங்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் தங்களுக்கு வெற்றியைத் தேடி தரும் என்று திமுக நினைக்கிறது. மேலும் சட்டம் ஒழுங்கு, ஊழல் நிர்வாகம் தொடர்பான சிக்கல்களை முன்வைத்து அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது. கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்று வெளியாகி வரும் நிலையில் தமிழக தேர்தல் எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

போட்டியிடும் முக்கிய தலைவர்கள்:

  • திமுக : மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
  • அதிமுக : எடப்பாடி கே பழனிச்சாமி தவெக : விஜய்
  • நாம் தமிழர் கட்சி : சீமான்
  • பாஜக : தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

Related Articles

Related image1
தமிழக அரசியலில் கட்சி தொடங்கி காணாமல் போன நடிகர்கள் பட்டியல்.! எதிர்பார்ப்புடன் வந்து ஜொலிக்க முடியாமல் போன முக்கிய தலைகள்.!
Related image2
தமிழகத்தின் 'பவர் சென்டர்' எது? 2026-ல் ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் 10 'மெகா' தொகுதிகள்.! லிஸ்டில் உங்கள் தொகுதி இருக்கா?
36
கேரளம்
Image Credit : Asianet News

கேரளம்

  • மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை : 140
  • பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் : 71
  • தேர்தல் தேதி : ஏப்ரல் 9 (ஒரே கட்டமாக)
  • தேர்தல் முடிவுகள் : மே 4
     

கேரளாவில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடந்து வருகிறது. கேரளாவில் இருமுனைப் போட்டியே எப்போதும் நிலவுகிறது. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இடையே மாறி மாறி ஆட்சி அதிகாரம் பகிரப்பட்டு வருகிறது. 2016 முதல் தொடர்ந்து பினராயி விஜயின் தலைமையில் LDF இருமுறை ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலிலும் LDF மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயன்று வருகிறது. 

அதே நேரத்தில் UDF ஆட்சிக்கு வர துடிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தனது எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த முயல்கிறது. ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாக பிரச்சனை, வேலையின்மை ஆகியவற்றை முன்வைத்து UDF பிரச்சாரம் செய்கிறது. அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை முன்னிலை வைத்து LDF வாக்குகளை சேகரித்து வருகிறது.

போட்டியிடும் முக்கிய தலைவர்கள்:

  • LDF : பினராயி விஜயன், சைலஜா
  • UDF : வி.டி சதீசன் (காங்கிரஸ்), ரமேஷ் சென்னிதாலா (காங்கிரஸ்)
  • NDA : ராஜீவ் சந்திரசேகர் (பாஜக), கே சுரேந்திரன் (பாஜக)
46
மேற்கு வங்கம்
Image Credit : ANI

மேற்கு வங்கம்

  • மொத்த சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை : 294
  • பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் : 148
  • தேர்தல் நடைபெறும் தேதிகள் : ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29
  • தேர்தல் முடிவுகள் : மே 4
     

மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது. மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து வருகிறார். தற்போது நான்காவது முறையாக அவர் வெற்றி பெறும் முனைப்பில் இருந்து வருகிறார். சமூக குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல் புகார்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. 

பாஜக மமதாவின் கோட்டையை தகர்த்து ஆட்சியைப் பிடிக்க வியூகங்களை வகுத்து வருகிறது. தொடர்ந்து மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை மமதா பானர்ஜி நடத்தி வருகிறார். ஆளுநர் ரவி நியமனம் போன்றவை தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தின் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளன.

போட்டியிடும் முக்கிய தலைவர்கள்:

  • திரிணாமூல் காங்கிரஸ் : மமதா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி
  • பாஜக : சுவேந்து அதிகாரி, திலீப் கோஷ்
  • இடதுசாரிகள் : விகாஸ் ரஞ்சன் பட்டாச்சாரியா, மீனாட்சி முகர்ஜி, பீமன் போஸ்
56
அஸாம்
Image Credit : X

அஸாம்

  • மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை : 126
  • பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் : 64
  • தேர்தல் தேதி : ஏப்ரல் 9 (ஒரே கட்டம்) 
    தேர்தல் முடிவுகள் : மே 4
     

அஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்தது. இடையில் சில காலம் ஜனதா கட்சி ஆட்சி புரிந்து வந்தது. 2016 ஆம் ஆண்டு பாஜக வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. 2021 ஆம் ஆண்டு பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஹிமந்த பிஸ்வா ஷர்மா முதலமைச்சராக பதவி ஏற்றார். 

இங்கு வங்கதேசத்துடனான எல்லை பகிர்தல் பிரச்சனை மையம் கொண்டுள்ளது. மேலும் பாஜகவின் ஊழல் மிகுந்த ஆட்சி மற்றும் மத அரசியல் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில் ஊழல், பாலங்கள் அமைப்பதில் ஊழல், சாலைகளை விரிவாக்கம் செய்வதில் ஊழல் என்று அரசு தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

போட்டியிடும் முக்கிய தலைவர்கள்:

  • NDA : ஹிமந்த பிஸ்வா ஷர்மா (பாஜக), அத்துல் போரா (AGP), ஹக்ரமா மொஹிலாரி (BPF)
  • AIUDF : பக்ருதீன் அஜ்மல்
  • அசாம் சன்மிலிதோ மோர்ச்சா : கௌரவ் கோகாய் (காங்கிரஸ்), அகில் கோகாய் (ராய்ஜர் தளம்)
66
புதுச்சேரி
Image Credit : Google

புதுச்சேரி

  • மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை : 30
  • பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் : 16
  • தேர்தல் தேதி : ஏப்ரல் 9 (ஒரே கட்டமாக) 
  • தேர்தல் முடிவுகள் : மே 4
     

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது. ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி 2026 தேர்தலில் கடுமையான போட்டியை கொடுக்க இருக்கிறது. மத்திய அரசின் தலையீடு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து உள்ளன. மேலும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளின் தாக்கம் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியிடும் முக்கிய தலைவர்கள்:

  • NDA : என். ரங்கசாமி (NR Congress), நமச்சிவாயம் (பாஜக)
  • INDIA : நாராயணசாமி (காங்கிரஸ்), ராகவ பிள்ளை சிவா (திமுக)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
அரசியல் சுவாரஸ்யம்
திமுக
தேர்தல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
DMK vs AIADMK: "எதிர்க்கட்சிகளின் பேச்சு எங்களுக்குத்தான் சாதகம்": இபிஎஸ் விமர்சனத்துக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி
Recommended image2
மீண்டும் ஸ்டாலின்? இபிஎஸ்ஸை முந்தும் விஜய்.. சீமானுக்கும் ஷாக்.. புதிய கருத்துகணிப்பு முடிவு இதோ!
Recommended image3
NOTA Rules: நோட்டாவுக்கு அதிக ஓட்டு விழுந்தா என்ன ஆகும்? ஜெயிக்கிறது யாரு தெரியுமா?
Related Stories
Recommended image1
தமிழக அரசியலில் கட்சி தொடங்கி காணாமல் போன நடிகர்கள் பட்டியல்.! எதிர்பார்ப்புடன் வந்து ஜொலிக்க முடியாமல் போன முக்கிய தலைகள்.!
Recommended image2
தமிழகத்தின் 'பவர் சென்டர்' எது? 2026-ல் ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் 10 'மெகா' தொகுதிகள்.! லிஸ்டில் உங்கள் தொகுதி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved