MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஆர்டர் செய்த 15 நிமிடத்தில் பிரியாணி வீட்டுக்கு வந்துவிடும்; சொமொட்டோவின் விரைவு சேவை; முழு விவரம்!

ஆர்டர் செய்த 15 நிமிடத்தில் பிரியாணி வீட்டுக்கு வந்துவிடும்; சொமொட்டோவின் விரைவு சேவை; முழு விவரம்!

சொமொட்டோ நிறுவனம் 15 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யும் சேவையை அறிமுகம் செய்யுள்ளது. இது தொடர்பான முழு விரங்களை பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
| Updated : Jan 10 2025, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
zomato food delivery

zomato food delivery

உணவு விநியோக நிறுவனங்கள் 

இந்தியாவில் வீடு தேடி வந்து உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் பெருகி விட்டன. சொமொட்டோ (Zomato), ஸ்விக்கி (swiggy), ஜெப்டோ (zepto) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உணவு விநியோக சந்தையில் போட்டி போட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு நிறுவனமும் அதிகரித்து வரும் போட்டி நிறைந்த சந்தையில் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய புதுமைகளை உருவாக்கி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான சொமொட்டோ இந்தியாவில் 15 நிமிட உணவு விநியோக சேவையை கொண்டு வந்துள்ளது. அதாவது சொமொட்டோவில் நீங்கள் ஒரு உணவு ஆர்டர் செய்தால் வெறும் 15 நிமிடங்களில் அந்த உணவு நீங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து விடும். இந்த சேவை மும்பை, பெங்களூரு, சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
zomato food speed service

zomato food speed service

விரைவு உணவு சேவையை எப்படி பயன்படுத்துவது? 

சொமொட்டோ2 ஆண்டுகளுக்கு முன்பு 10 நிமிடங்களில் உணவு விநியோகம் செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அந்த சேவையை நிறுத்திய நிலையில், இப்போது மீண்டும் 15 நிமிட உணவு விநியோக திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சொமொட்டோ விரைவு உணவு சேவையை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

1. உங்கள் ஸ்மார்ட்போனில் Zomato செயலியை ஒப்பன் செய்யுங்கள்.

2. அதில் காண்பிக்கப்டும் '15 நிமிட டெலிவரி' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்

3. இதை கிளிக் செய்தவுடன் உணவகங்களின் பட்டியலையும், உணவுகளின் பட்டியலையும் பெறுவீர்கள். 

4. இதில் நீங்கள் விரும்பியதை தேர்வு செய்யும்போது, 15 நிமிடங்களில் அந்த உணவு உங்களை தேடி வந்து விடும்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கார்போஹைட்ரேட்ஸ்; இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

34
swiggy food delivery

swiggy food delivery

ஸ்விக்கி, ஜெப்டோ, பிளிங்கிட்

சொமொட்டோ மட்டுமில்லை இந்தியாவில் ஸ்விக்கி, ஜெப்டோ, பிளிங்கிட் , Swish, Zing மற்றும் Ola Dash போன்ற புதிய நிறுவனங்களும் அதிவேக உணவு விநியோக சேவையில் ஈடுபட்டு வருகின்றன. சொமொட்டோவுக்கு பிரதான போட்டியாளராக திகழும் ஸ்விக்கி, 15 நிமிட உணவு விநியோக சேவையை செயல்படுத்துவதற்காகவே Snacc என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

முன்னதாக Bolt என்ற செயலி மூலம் விரைவு உணவு விநியோக சேவையை ஸ்விக்கி செயல்படுத்திய நிலையில், இப்போது Snaccம் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.  Zomato வின் விரைவு வர்த்தகப் பிரிவான பிளிங்கிட் 10 நிமிடங்களில் உணவு விநியோகம் செய்யும் சேவையை செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் அதன் கடைகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகிறது.

இதேபோல் ஜெப்டோவும் விரைவு உணவு விநியோக சேவையை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் அதன் கபேக்களில் இருந்து குறைவான துரங்களில் உணவு சேவையை விநியோகம் செய்து வருகிறது.

44
zomato and swiggy

zomato and swiggy

இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் 

இதேபோல் பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான Swish 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது தவிர ஓலா டேஷ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனமும் விரைவு உணவு சேவையை வழங்கி வருகிறது. விரைவு உணவு சேவையில் பல்வேறு சாதக, பாதக அம்சங்களும் உள்ளன.

1. ரொம்ப பசியுடன் இருப்பவர்களுக்கு 15 நிமிடங்களில் உணவு கிடைக்கும்போது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2. 15 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படுவதால் இதற்கு உணவு நிறுவனங்கள் மிக அதிக கட்டணம் நிர்ணயிக்கும். இதை கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

3. அதிவேகமாக உணவு தயார் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்படுவதால் அதன் தரம் நன்றாக இருக்குமா? என்பதும் கேள்விக்குறிதான். 

4. ஏற்கெனவே பெரு நகரங்களில் டிராபிக் அதிகமாக உள்ள நிலையில், 15 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்ய வேண்டும் என்ற நெருக்கடியால் உணவு விநியோக ஊழியர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.

உடல் மெலிய '1' கிளாஸ் பெருஞ்சீரக தண்ணீர்.. எப்போது குடித்தால் பலன் தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜொமேட்டோ
சுவிக்கி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved