உங்கள் ரத்த வகை இதுவா? அப்ப இந்த நோய்கள் உங்களை தாக்கலாம்!
உங்கள் ரத்த வகை உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதய நோயிலிருந்து மன அழுத்தம் வரை எந்தெந்த நோய்கள் எந்தெந்த ரத்த வகை கொண்ட மக்களை அதிகம் பாதிக்கும் என்று பார்க்கலாம்.
உங்கள் ரத்த வகையை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை பற்றி சொல்ல முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உங்கள் நரம்புகள் வழியாக ஓடும் இரத்தம், நீங்கள் யாரிடம் தானம் செய்யலாம் அல்லது பெறலாம் என்பதை மட்டும் தீர்மானிக்கவில்லை, இது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. A, B, AB, மற்றும் O.என நான்கு வகையான இரத்தக் குழுக்கள் உள்ளன.
ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் மனநல மருத்துவர் ஷெல்டன் ஷேப்லோ நமது இரத்த வகை எவ்வாறு பல்வேறு நோய்களுக்கு நம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார், "இரத்த வகையைப் பொறுத்து, ஒரு நபர் எந்த நோயாலும் பாதிக்கப்படலாம்." என்று தெரிவித்தார்.
இதய நோய் அபாயம்:
AB மற்றும் B இரத்த வகைகளைக் கொண்ட நபர்கள் இதய நோய்க்கான ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளது., முக்கியமாக அதிக கொழுப்பு மற்றும் அதிக அளவு புரதம் ரத்த உறைதலுடன் தொடர்புடையது.
எனவே அசுத்தமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்யவும், இதய ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்யவும், புகைபிடிப்பதைத் தவிர்க்கவும், மேலும் ஆபத்தைத் தவிர்க்க உங்கள் இதய ஆரோக்கியத்தை கண்காணிக்கவும். மறுபுறம், O ரத்த வகை உடையவர்களுக்கு பொதுவாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
வயிற்றுப் புண்கள்:
O ரத்த வகையை சேர்ந்தவர்கள் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என்றாலும் இந்த இரத்தக் குழுவைக் கொண்டவர்கள் வயிற்றுப் புண்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்ற ரத்த வகைகளுடன் ஒப்பிடும்போது அவர்கள் தோல் சேதத்தை அனுபவிக்கலாம். O வகை ரத்தத்தைத் தவிர, A வகை ரத்தமும் சில வயிற்றுப் புண்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, முழு தானியங்கள், மீன், பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்க்கவும். குறைந்த பட்சம் 40 நிமிடங்களுக்கு வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள், புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்.
பார்வைக் குறைபாடு: AB ரத்த வகையை கொண்டவர்களுக்கு வயதாகும்போது பார்வைக் குறைபாட்டை உருவாக்கலாம். இரத்தத்தில் உள்ள புரதச் சிக்கல்கள் ஞாபக மறதியை ஏற்படுத்தும்.
ரத்தம் உறைதல்: A மற்றும் B ரத்த வகைகளை கொண்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். இந்த குழுக்கள் இரத்த உறைதல் பிரச்சினைகளுக்கு அதிக வாய்ப்புள்ளது, இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
stress
மன அழுத்த நிலைகள்: நீங்கள் A ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தால், மன அழுத்த மேலாண்மை உங்களுக்கு குறிப்பிடத்தக்க கவலையாக இருக்கலாம். இந்த இரத்தக் குழுவைக் கொண்டவர்கள் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகமாகச் சுரக்க முனைகிறார்கள்.
இது மனநல சவால்களை சமாளிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும். உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க, வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்” என்று ஷெல்டன் விளக்கம் அளித்துள்ளார்.