MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வாழைப்பழம் சாப்பிட்டு உடன் தண்ணீர் குடிக்கலாமா? தெரிஞ்சுக்க இதை படிங்க!

வாழைப்பழம் சாப்பிட்டு உடன் தண்ணீர் குடிக்கலாமா? தெரிஞ்சுக்க இதை படிங்க!

பலருக்கும் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இது ஒரு நல்ல பழக்கமா? குறிப்பாக வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா? குடித்தால் என்ன ஆகும்?

2 Min read
Author : Ramya s
Published : Dec 16 2024, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Banana Health Benefits

Banana Health Benefits

எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் தான். அவை மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. எந்த பருவத்திலும் கிடைக்கும், இந்த வாழைப்பழத்தில் சத்துக்களும் ஏராளமாக உள்ளன. அதனால்தான்.. இந்த பழத்தை சாப்பிட எல்லோரும் விரும்புகிறார்கள். கலோரிகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகளும் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளன.

 

25
Banana, Water Side Effects

Banana, Water Side Effects

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகளும் உண்டு. செரிமானம் மேம்படும்.  மூளை செயல்பாடும் அதிக சுறுசுறுப்பாக மாறும்.  இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது.  இத்தனை நன்மைகளை வழங்கும் இந்த வாழைப்பழம் தொடர்பாக எல்லோரும் செய்யும் ஒரு பொதுவான தவறால், வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த தவறு என்ன? அதனால் ஏற்படும் நஷ்டங்கள் என்னென்ன என்று பார்ப்போம்..

 

35
Banana, Water Side Effects

Banana, Water Side Effects

வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டாம்!

நம்மில் பலருக்கு வாழைப்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அப்படி செய்வது முற்றிலும் தவறு. வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு நீங்கள் ஒருபோதும் தண்ணீர் குடிக்கக்கூடாது. அது வயிற்று பிரச்சனைகளை அதிகரிக்கும். 

எப்படி என்றால், வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அதை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால், அது பொட்டாசியத்துடன் சேர்ந்து செரிமான பிரச்சனைகளை உருவாக்குகிறது மற்றும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது, இது வாயு, அசிடிட்டி, வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

45
Banana, Water Side Effects

Banana, Water Side Effects

வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்?

தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், வாழைப்பழம் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குடியுங்கள். அப்போதுதான் அந்த வாழைப்பழத்தில் உள்ள அனைத்து சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கும். 

எப்போது சாப்பிட வேண்டும்?

நீங்கள் விரும்பினால் காலை உணவிற்கு வாழைப்பழம் சாப்பிடலாம்.  தயிருடன் கலந்தும் சாப்பிடலாம். ஏனெனில் அவை கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்தவை. இவை உங்களுக்கு நிறைய நன்மை செய்யும்.

55
Banana, Water Side Effects

Banana, Water Side Effects

வாழைப்பழத்தின் நன்மைகள் :

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மன அழுத்த ஹார்மோனை சீராக்க உதவுகிறது. மேலும், இந்த பழத்தில் உள்ள கால்சியம் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நல்லது. 

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சருமத்திற்கு நல்லது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.

மேற்கண்ட நன்மைகளைப் பெற வேண்டுமென்றால், வாழைப்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கவே கூடாது, அப்போதுதான் வாழைப்பழத்தில் உள்ள அனைத்து சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved