MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Salary Hike: சம்பளம் உயர்ந்தும் மாச கடைசில பண கஷ்டமா? இந்த 5 தப்புகளை செய்யாதீங்க!

Salary Hike: சம்பளம் உயர்ந்தும் மாச கடைசில பண கஷ்டமா? இந்த 5 தப்புகளை செய்யாதீங்க!

வருஷா வருஷம் சம்பளம் ஏறினாலும், மாசக் கடைசி ஆகும்போது நிறைய பேர் கையில காசு இல்லாம கஷ்டப்படுறாங்க. இதுக்கு காரணம் சம்பளம் கம்மியா இருக்குறது இல்ல, நம்மளோட பணப் பழக்கம்தான். கையில காசு நிக்கணும்னா, இந்த 5 தவறுகளையும் உடனே நிறுத்தணும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 28 2026, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உங்க சம்பளம் உயர்ந்திருக்கா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்
Image Credit : Gemini

உங்க சம்பளம் உயர்ந்திருக்கா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

சம்பள உயர்வு (Salary Hike) என்பது பல வருஷ உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். மாசக்கணக்கா பட்ஜெட் போட்டு, செலவுகளைக் குறைத்த பிறகு, கையில் கொஞ்சம் அதிகமாகப் பணம் வருவது பெரிய நிம்மதியா இருக்கும். இந்த நேரத்தில் புது கார், போன் வாங்கணும்னு தோணும். இப்படி வருமானம் கூடும்போது, பலரும் செலவுகளையும் அதிகரித்துவிடுகிறார்கள். ஒரு வருஷம் கழித்துப் பார்த்தால், ஏன் பணம் மிச்சமாகவில்லை என்று ஆச்சரியப்படுவார்கள். உங்களுக்கு சமீபத்தில் சம்பளம் உயர்ந்திருக்கா? அப்போ உங்க கையில் பணம் தங்க வேண்டுமென்றால், செய்யவே கூடாத சில விஷயங்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அதிகரித்த சம்பளத்தை புத்திசாலித்தனமாக கையாளுங்கள்
Image Credit : Getty

அதிகரித்த சம்பளத்தை புத்திசாலித்தனமாக கையாளுங்கள்

உங்க சம்பளம் ஒரு ரூ.15,000 உயர்ந்திருக்குனு வச்சுக்கலாம். அதாவது, மாசாமாசம் உங்க கைக்கு ரூ.15,000 அதிகமா வரும். ஆனா, நிறைய பேர் இப்படி வர்ற பணத்தை அதிக வீட்டு வாடகை, வெளியில சாப்பிடுறது, ஷாப்பிங்னு ஈசியா செலவு பண்ணிடுறாங்க. கொஞ்ச நாள்லயே, பழைய சம்பளத்துல இருந்த அதே பணக்கஷ்டம் மறுபடியும் வந்துடும். செலவுகளை ஒரேடியா அதிகரிக்காம, அந்ததொகையை பிரிச்சுக்கோங்க. கொஞ்சம் முதலீடு பண்ணுங்க, இன்னும் கொஞ்சம் அவசர கால நிதிக்கு (Emergency Fund) மாத்துங்க. மீதி பணத்தை உங்க தேவைகளுக்கு பயன்படுத்துங்க. இப்படி செஞ்சா, எதிர்காலத்தை பாதிக்காம வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்.

Related Articles

Related image1
Daycare Business : லட்சங்களில் வருமானம் கொடுக்கும் டே கேர் சென்டர்கள்!
Related image2
Business Idea: மாசம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்! இந்த டிரெண்டிங் பிசினஸ் ஐடியா பற்றி தெரியுமா?
35
ஆடம்பரம் வேண்டாம்.. சேமிப்பே முக்கியம்
Image Credit : Getty

ஆடம்பரம் வேண்டாம்.. சேமிப்பே முக்கியம்

சம்பளம் கூடும்போது வீடு கட்டுறது, ஓய்வுக்கால நிதி, பிள்ளைகள் படிப்புனு பணம் சேமிக்கிறது சுலபம். ஆனா பலரும், அதிகரிச்ச பணத்தை அன்றாட செலவுகளுக்கே பயன்படுத்தி, இந்த இலக்குகளை தள்ளிப் போடுறாங்க. இதை தவிர்க்க ஒரு சுலபமான வழி இருக்கு. சம்பளம் உயர்ந்த உடனேயே, உங்க SIP அல்லது மற்ற முதலீடுகளை அதிகப்படுத்துறதுதான். நீங்க பணத்தை செலவு செய்ய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அதை முதலீடு செஞ்சிட்டா, அப்புறமா அந்தப் பணம் இல்லாத உணர்வே இருக்காது.
45
அவசர கால நிதி கட்டாயம்
Image Credit : Gemini

அவசர கால நிதி கட்டாயம்

சம்பளம் உயர்ந்ததாலேயே நீங்க நிதி ரீதியா பாதுகாப்பா இருக்கீங்கனு அர்த்தம் இல்ல. நாளைக்கு உங்க வேலை போயிட்டா, மாதாந்திர EMI, மற்ற வீட்டுச் செலவுகளை சமாளிக்க முடியாம போகலாம். அப்படிப்பட்ட நேரத்துல ஒரு அவசர கால நிதி (Emergency Fund) இருந்தா ரொம்ப தைரியமா இருக்கும். சம்பள உயர்வை மற்ற செலவுகளுக்கு பயன்படுத்துறதுக்கு முன்னாடி, அவசர கால நிதியை உருவாக்கப் பயன்படுத்துங்க. ஆறு முதல் பன்னிரண்டு மாத வாழ்க்கைச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை ஒதுக்கி வைப்பது நல்லது.
55
தகுதி இருந்தாலும் தேவையில்லாத கடன்கள் வேண்டாம்
Image Credit : Gemini

தகுதி இருந்தாலும் தேவையில்லாத கடன்கள் வேண்டாம்

உங்க வருமானம் கூடும்போது, பெரிய வீட்டுக்கடன், கார் லோன் அல்லது தனிநபர் கடனுக்கு (Personal Loan) தகுதி கிடைக்கலாம். அதுக்காக அதிகமா கடன் வாங்கணும்னு அர்த்தம் இல்ல. வங்கி நிறைய கடன் கொடுக்கத் தயாரா இருக்குறதால, அதை சுலபமா திருப்பிச் செலுத்திடலாம்னு நினைக்கிறது தவறு. பெரிய EMI உங்க சேமிப்பு, முதலீடுகளை பாதிக்கும். கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குறதுக்கு முன்னாடி, அந்தப் பொருள் உங்களுக்கு உண்மையிலேயே தேவையான்னு உங்கள நீங்களே கேட்டுக்கோங்க. வருமானம் கூடும்போது நிதிப் பொறுப்புகளும் கூடும். சம்பள உயர்வு என்பது உங்க மாதாந்திர பட்ஜெட்டை மட்டும் இல்ல, உங்க ஒட்டுமொத்த நிதித் திட்டத்தையும் (Financial Plan) மறுபரிசீலனை செய்யணும்னு ஞாபகப்படுத்துது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்பு
சம்பள உயர்வு
வணிக யோசனை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bread Omelette: தினமும் பிரெட் ஆம்லெட் சாப்பிடுகிறீர்களா? உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
Recommended image2
USA Salary: அமெரிக்காவில் மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்! செலவு போக கையில் எவ்வளவு மிஞ்சும் தெரியுமா?
Recommended image3
Garden Tips: தினமும் தண்ணி ஊத்த நேரமில்லையா? செடிகள் வாடாமல் இருக்க 5 சூப்பர் டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Daycare Business : லட்சங்களில் வருமானம் கொடுக்கும் டே கேர் சென்டர்கள்!
Recommended image2
Business Idea: மாசம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்! இந்த டிரெண்டிங் பிசினஸ் ஐடியா பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved