பெற்றோரே 'இனி' அந்த தப்ப பண்ணாதீங்க!! சின்ன விஷயம் தான் குழந்தையை ரொம்ப பாதிக்கும்!!
Effects Of Scolding Children : குழந்தைகளை நல்வழிப்படுத்த அவர்களை திட்டும் பெற்றோரா நீங்கள்? அதனால் வரும் எதிர்மறை பாதிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.

பெற்றோரே 'இனி' அந்த தப்ப பண்ணாதீங்க!! சின்ன விஷயம் தான் குழந்தையை ரொம்ப பாதிக்கும்!!
குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு கூடுதல் பொறுப்பு மிகுந்த கடமை. அனைத்து பெற்றோருமே தங்ளுடைய குழந்தைகளை நல்லவர்களாகவும், புத்திசாலியாகவும் வளர்க்கவே விரும்புவார்கள். அதற்காக குழந்தையை நல்ல பள்ளியில் சேர்ப்பார்கள். ஒழுக்கமான விஷயங்களை கற்றுக் கொடுப்பார்கள். தங்களின் பிள்ளைகள் தரமான கல்வி கற்று பொறுப்பாக வளர்வதை காண்பதே பெற்றோரின் விருப்பமாக உள்ளது. ஆனால் சில நேரங்கள் குழந்தைகள் நாம் எதிர்பார்ப்பது போல மிஸ்டர் பர்பெக்ட்'ஆக நடந்து கொள்வதில்லை. சிறுதவறுகள் செய்வார்கள். குறும்பாக நடந்துகொள்வார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு நல்ல புத்தி சொல்ல அவர்களை சற்று கோவமாக பெற்றோர் கண்டிக்கிறார்கள்.
குழந்தைகளை திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள்
குழந்தைகளை நல்வழிபடுத்தவே பெற்றோர் இதை செய்கிறார்கள். கோவமாக பேசுவது, திட்டுவது, ஒரு கட்டத்தில் அடிப்பது என பெற்றோர் கடுமையாக நடந்துகொள்கின்றனர். ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அவர்களை திட்டுவது சரியான போக்கு அல்ல. பல பெற்றோர்கள் குழந்தைகளை சின்ன விஷயங்களுக்காக மற்றவர்கள் முன்னிலையில் குழந்தையை திட்டிவிடுகிறார்கள். இந்தப் போக்கு சரியான அணுகுமுறை அல்ல. இதனால் குழந்தைகள் மீது எதிர்மறையான பாதிப்புகள் வரும். அதிகமாக திட்டுவதால் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என இந்தப் பதிவில் காணலாம்.
ஆக்ரோஷமான நடத்தை;
நீங்கள் சின்ன விஷயங்களுக்கும் குழந்தைகளிடம் அடிக்கடி கோபப்படுபவராக இருந்தால் உங்களுடைய குழந்தை அந்த நடத்தைக்கு பழகிக்கொள்ளும். தன்னுடைய பெற்றோர் நடந்து கொள்ளும் விதத்தையே குழந்தைகளும் பின்பற்ற தொடங்குவார்கள். நீங்கள் அதிகமாக திட்டும்போது அல்லது கோபப்படும்போது அவர்களுடைய சுபாவமே ஆக்ரோஷமாக மாறிவிடும். சின்ன விஷயங்களுக்கு கூட கோபத்தை வெளிப்படுத்தும் போக்கு அதிகமாகும். அவர்களும் ஆக்ரோஷமாகவே உங்களிடம் நடந்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: பெற்றோரே 10 வயசுக்குள்ள உங்க குழந்தைக்கு கண்டிப்பா இந்த '5' விஷயங்களை சொல்லி கொடுங்க!
தன்னம்பிக்கை குறையும்!
அடிக்கடி குழந்தையிடம் கோபம் கொண்டு திட்டினால் அவர்களுடைய தன்னம்பிக்கை குறையும். இதை செய்யாதே, அதை செய்யாதே, இப்படி இருக்காதே என அடிக்கடி சொல்வதால் அவர்கள் குழம்பிவிடுவார்கள். எந்த செயலை செய்யும் முன்பும் அவர்களுக்கு பயமும், தயக்கமும் ஏற்படும். அவர்களிடம் தன்னம்பிக்கை குறைவதால் அவர்கள் நினைப்பதை கூட அவர்கள் வெளிப்படுத்த தயங்குவார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளின் நெஞ்சு சளி ஒருநாளில் கரைய சூப்பர் வீட்டு வைத்தியம்!!
உளவியல் பாதிப்பு:
நம்முடைய குழந்தைகளை அடிக்கடி திட்டுவதால் அவர்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவார்கள். நீங்கள் அடிக்கடி திட்டினால் அவர்களுடைய சுயமதிப்பு பாதிப்புக்குள்ளாகும். அவர்கள் அவர்களேயே குறைத்து மதிப்பிடலாம். வளரும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் உள்ளது. அதிகமான மன அழுத்தம் வந்தால் படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள். குழந்தைகளின் உடல் உள்ள ஆரோக்கியமும் பாதிக்கும்.
கற்றல் திறன் குறையும்:
குழந்தைகளின் ஆதர்சனமாக பெற்றோர் விளங்கவேண்டும். அவர்களை அடிக்கடி திட்டும்போது புதிதாக எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவர்களிடம் குறையும். தவறுகளுக்கு அஞ்சுவார்கள். தோல்வியை கையாள தெரியாது. தவறாகிவிட்டால் என்னாகும்? சொதப்பினால் திட்டுவார்களா? என்ற கேள்விகள் மனதில் ஓடும். இந்த சுய சந்தேகத்தால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளமாட்டார்கள்.
குழந்தைகளை திட்டவே கூடாதா?
குழந்தைகளை திட்டலாம். ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கு திட்டுவதை தவிர்க்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை சிதைக்காதவண்ணம் பேச வேண்டும். அதாவது எது செய்தாலும் அப்பா, அம்மா திட்டுவார்கள் என அஞ்சும்படி இல்லாமல் உங்களிடம் மனம் திறந்து பேசும் அளவுக்கு பெற்றோர் மீது நம்பிக்கை இருக்கவேண்டும்.