MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பெற்றோரே 10 வயசுக்குள்ள உங்க குழந்தைக்கு கண்டிப்பா இந்த '5' விஷயங்களை சொல்லி கொடுங்க!

பெற்றோரே 10 வயசுக்குள்ள உங்க குழந்தைக்கு கண்டிப்பா இந்த '5' விஷயங்களை சொல்லி கொடுங்க!

Parenting Tips : ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை பத்து வயசுக்கு முன் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டிய ஐந்து வாழ்க்கை திறன்கள் இங்கே.

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 07 2025, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பெற்றோரே 10 வயசுக்குள்ள உங்க குழந்தைக்கு கண்டிப்பா இந்த '5' விஷயங்களை சொல்லி கொடுங்க!

பெற்றோரே 10 வயசுக்குள்ள உங்க குழந்தைக்கு கண்டிப்பா இந்த '5' விஷயங்களை சொல்லி கொடுங்க!

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக பல விஷயங்களை செய்கிறார்கள். எனவே, உங்கள் குழந்தையின் நல்ல வாழ்க்கைக்காக 5  வாழ்க்கை திறன்களை  நீங்கள் அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, அவர்களின் 10 வயதிற்குள் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அவை அவர்களை சிறந்த குடிமகனாகவும், வெற்றி பெறும் நபராகவும் உருவாக்கும். அவை எண்ணின் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

26
சுயவிவரம்:

சுயவிவரம்:

சுயவிவரம் என்பது தங்களது உணர்வுகள் அதாவது பலம், பலவீனம் மற்றும் தங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். குழந்தைகள் தங்களைப் பற்றி புரிந்து கொள்வதன் மூலம் அவர்கள் தங்களை நன்றாக வளர்த்துக்கொள்ள முடியும். மேலும் இதன் மூலம் குழந்தைகள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காமல், தங்களது மதிப்பை உணர்ந்து தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வார்கள்.

36
நல்ல தகவல் தொடர்பு:

நல்ல தகவல் தொடர்பு:

இது திறன் மூலம் குழந்தைகள் மற்றவர்களுடன் திரும்பிட தொடர்பு முடியும். இந்த திறன் ஆனது பேச்சு எழுத்து மற்றும் உடல் மொழி ஆகியவற்றை கொண்டுள்ளது. நல்ல தகவல் தொடர்பு மூலம் குழந்தைகள் தங்களது கருத்துக்களை பிறரிடம் தெளிவாகவும், மரியாதையாகவும் வெளிப்படுத்துவதற்கு உதவும். அதுமட்டுமின்றி அவர்கள் பிறரது கருத்துக்கொல்லையும் புரிந்து, அவர்களையும் மதிக்கப் பழகுவார்கள்.

46
சிக்கல்களை தீர்ப்பது:

சிக்கல்களை தீர்ப்பது:

சிறுவயதிலிருந்தே குழந்தைகள் இந்த திறனை கற்றுக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் எப்பேர்பட்ட சவால்களையும் சுலபமாக எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்குள் இருக்கும். முக்கியமாக இந்த திறன் மூலம் அவர்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க கற்றுக் கொள்வார்கள் மற்றும் சரியான முடிவுகளையும் எடுப்பார்கள். இந்த சிக்கல் தீர்க்கும் திறனால் உங்களது குழந்தை பிரச்சினைகளை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்கவே மாட்டார்கள். அதற்கு மாறாக அந்தப் பிரச்சனையை தீவிரமாக ஆராய்ந்து, அதற்குரிய சாத்தியமான தீர்வுகளை கண்டுபிடித்து வெற்றியை காண்பார்கள்.

இதையும் படிங்க:  பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் கேட்க விரும்பும் 3 வார்த்தைகள் இவை தான்!

56
ஒத்துழைப்பு:

ஒத்துழைப்பு:

மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது தான் இந்த திறனின் சிறப்பு. இந்த திறனானது குழந்தைகளின் பொதுவான லக்குகளை அடைய பெரிதும் உதவுகிறது. சிறுவயதிலிருந்தே குழந்தைகள் இந்த திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் அவர்கள் பிறரின் கருத்துக்களை மதிக்கவும், அவர்களுக்கு உதவவும் எப்போதுமே தயாராகவே இருப்பார்கள். முக்கியமாக அவர்கள் வெற்றிக்காக அதிகமாக பாடுபடுவார்கள். 

இதையும் படிங்க:  பெற்றோருக்கு தெரியாமலே பிள்ளைகள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?

66
படைப்பாற்றல் திறன்:

படைப்பாற்றல் திறன்:

படைப்பாற்றல் திறன் என்பது புதிய யோசனைகளை உருவாக்கவும், புதிய வழிகளில் சிந்திக்கவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து இந்த திறன்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் சுயமாக சிந்திக்கவும் புதுமையான விஷயங்களை கண்டுபிடிக்கவும் உதவுகிறது. சொல்லப் போனால் இந்த திறன் அவர்களுக்கு சவால்களை எதிர்கொள்ளவும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வத்தை தூண்டவும் உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved