சூரியன் உதிக்கும் முன் 'எப்படி' சேவல் கூவுகிறது? இதுதான் அந்த ரகசியம்!!
Roosters Crow Before Sunrise : சூரியன் உதிக்கும் முன் கும்மிருட்டில் அதிகாலையில் சேவல் கூவுவது எப்படி என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? அதன் பின்னணியை காணலாம்.

சூரியன் உதிக்கும் முன் 'எப்படி' சேவல் கூவுகிறது? இதுதான் அந்த ரகசியம்!!
உலகில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் ஒரு பின்புலம் இருக்கிறது. ஆனால் அதற்கான பதில்களை நம்மில் பலர் தெரிந்துகொள்வதில்லை. சேவல் கூவுவதற்கும் ஒரு காரணம் உண்டு. சூரியனுக்கு முன் சேவல் கூவும். அதற்கு முன்னே கிராமங்களில் பலர் எழுந்து வயலுக்கு கிளம்பிவிடுவார்கள். இப்படி அதிகாலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் எழுவது பல்வேறு நன்மைகளை பெற்று தரும். அப்படி பார்த்தால் சேவலுக்கு எப்போதும் நல்ல நேரம் தான் அது குழம்பாகும் வரை! சரி நாம் கதைக்கு வருவோம். எப்படி சேவல் சூரியன் உதிக்கும் முன் கூவுகிறது. மனிதர்களுக்கு முன்னால் அவை எப்படி எழுகின்றன? என இந்தப் பதிவில் காணலாம்.
சூரிய உதயத்திற்கு முன் கூவுகிறது ஏன்?
பறவைகள், விலங்குகள் இயற்கையோடு இயைந்து வாழ்பவை. அதில் சேவல்களும் அடங்கும். சூரியன் உதிக்கும்போது அவை மேயத் தொடங்கிவிடும். அந்தி சாயும்போது கூடடையும். சூரியன் தான் அவற்றின் கடிகாரம். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உயிரியல் கடிகாரம் மாறுபடும்.
எப்படி சூரிய உதயத்திற்கு முன் கூவுகின்றன?
சேவல் சூரிய உதயத்திற்கு முன் கூவ, அவற்றின் சர்க்காடியன் ரிதம் என சொல்லப்படும் உயிரியல் கடிகாரம் (Biological Clock) தான் காரணம். இது பொழுது விடியப் போவதன் சமிக்ஞையாகும்(signal). சேவலின் உயிரியல் கடிகாரத்தை பொருத்தவரை மனிதர்களை விடவும் அவை கொஞ்சம் முன்னதாக இருக்கிறது. இதன் காரணமாக சூரியன் உதிக்கப் போவதை அவை கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு முன்பாக உணர்ந்துகொள்கின்றன. இதனால் தான் விடியக் கருக்கலில் மனிதர்களுக்கு முன்பாக எழுந்து கூவி விடுகின்றன. அவை கூவி சத்தம் கேட்டு விழிப்பவர்களும் இருக்கிறார்கள்.
மரபான விஷயம்:
கோழியின் உயிர்க்கடிகாரம் துரிதமாக செயல்படும். அதுமட்டுமின்றி அவை ஒளியை கண்டறியும் திறனுள்ளவை. இதன் காரணமாகவே சூரியன் உதயமாகும் முன்னர் சூரியக் கதிர்களை உணர்ந்து கொள்கின்றன.
இதையும் படிங்க: கிழிந்த காலணிகள் லாரி பின்புறத்தில் ஏன் தொங்குகிறது தெரியுமா?
விடியல் குறியீடு:
சூரிய உதயமாகப் போவதை அறியும் சேவல், மற்ற கோழிகளை எழுப்பிவிட கூவுகிறது என சொல்கிறார்கள். ஒரு புதிய நாள் தொடங்குகிறது என குறிக்கும் ஒலிதான் அந்த கூவல். கோழிகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் இது ஒரு விடியல் குறியீடாக விளங்கிவருகிறது.
இதையும் படிங்க: செய்தித்தாளில் 'இந்த' நான்கு கலர் ஏன் இருக்கு தெரியுமா? கேட்டா ஆச்சர்யப்படுவீங்க!
கொஞ்சம் மாத்தி யோசிக்கலமா?
சேவல் கூவ மேலே இருக்கும் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதை உறுதியாக சொல்லும்படியாக சான்றுகள் இல்லை. சேவல் வெறுமனே காலை மட்டுமே கூவிவிட்டு சும்மா இருப்பதில்லை. அது மதியம், மாலை நேரத்திலும் கூவுகின்றன. காலையில் ஊரே அமைதியாக இருப்பதால் அது கூவினால் தனித்து தெரிகிறது அவ்வளவுதான். ஜப்பானில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் சேவல் ஒன்றினை 14 நாட்கள் காலை, இரவு என 24 மணி நேரமும் வெளிச்சம்படும் வகையில் வைத்திருந்தார்கள். அப்போதும் அது அதிகாலையில் கூவியுள்ளது. அதே போல 14 நாட்கள் மங்கிய வெளிச்சத்தில் (இரவு போன்ற சூழலில்) வைத்திருக்கும்போது அவை அதிகாலையில் கூவியுள்ளது. இதிலிருந்து அவை கூவ உயிரியல் கடிகாரம் மட்டும் தான் காரணம் என நிரூபணமாகியுள்ளது.