செய்தித்தாளில் 'இந்த' நான்கு கலர் ஏன் இருக்கு தெரியுமா? கேட்டா ஆச்சர்யப்படுவீங்க!
நாம் தினமும் படிக்கும் செய்தித்தாள்கள் பற்றி பல விஷயங்கள் பலருக்கும் தெரிவதில்லை என்று கூறலாம். செய்தித்தாள்களின் அடிப்பகுதியில் காணப்படும் நான்கு வண்ணப் புள்ளிகள் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதனைப் பற்றி தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Newspaper Colored Dots
நம்ம அன்றாட வாழ்க்கையில நிறைய பொருட்களை பயன்படுத்துறோம். ஆனா, அதைப் பத்தி சரியான தகவல் நம்மகிட்ட இருக்காது. டூத்பேஸ்ட்ல இருந்து பிளேடு வரைக்கும் நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கணும். அதுல நியூஸ் பேப்பரும் ஒன்னு. தினமும் நாம பேப்பர் படிப்போம். பேப்பர்ல கீழ இருக்குற நாலு கலர் புள்ளிகளையும் நீங்க பார்த்திருப்பீங்க. ஆனால், இந்த புள்ளிகள் என்னன்னு நிறைய பேருக்கு தெரியாது. இன்னைக்கு பேப்பர்ல கடைசில இருக்குற இந்த நாலு கலர் புள்ளிகளோட அர்த்தம் என்னன்னு உங்களுக்கு சொல்றோம்.
Interesting Facts
பேப்பர்ல கீழ இருக்குற நாலு கலர் புள்ளிகளை ரெஜிஸ்ட்ரேஷன் மார்க்ஸ் அல்லது கிராப் மார்க்ஸ்னு சொல்றாங்க. விதவிதமான கலர்கள் சரியா மேட்ச் ஆகுதான்னு செக் பண்ண இத பயன்படுத்துறாங்க. பேப்பர் கடைசில சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு கலர் புள்ளிகள் இருக்குறத நீங்க தினமும் பார்த்திருப்பீங்க. ஆனா, அத பத்தி பெருசா கவனிச்சிருக்க மாட்டீங்க. இந்த புள்ளிகள் சரியான கலர் பிரிண்டிங் பண்ணவும், கலர்கள் கலக்குறதுக்கும் உதவுது.
Newspaper
இந்த கலர் புள்ளிகள் பிரிண்டிங் சரியான இடத்துல, சரியான டிரெக்ஷன்ல நடக்குதான்னு சொல்லும். இது சரியான பிரிண்டிங்ல முக்கியமான ரோல் பண்ணுது. பிரிண்ட் பண்றப்ப கலர் சரியா இருக்கான்னு செக் பண்ண இந்த புள்ளிகள பயன்படுத்துறாங்க. இதனால பெஸ்ட் குவாலிட்டி பிரிண்டிங் கிடைக்கும். படிக்கிறவங்களுக்கும் சரியாக தெரியும். பேப்பரோட சைஸ் சரியாக கட் செய்வதற்கு கிராப் மார்க் உதவுது.
General Knowledge
இதனால பிரிண்டிங் ப்ராசஸ் சரியா நடக்கும். இது டிரிம் மார்க்ஸாவும் பயன்படுது. பிரிண்ட் பண்ணின பேப்பர எப்படி கட் பண்ணணும்னு இது சொல்லும். இதனால ஃபைனல் பிரிண்டட் பேப்பரோட ஷேப் கரெக்டா இருக்கும். பேப்பர் பேஜ் கீழ இருக்குற நாலு புள்ளிகள் சிஎம்ஒய்கேனு சொல்றாங்க. இதோட ஃபுல் நேம் சியான், மெஜந்தா, எல்லோ, கீ.
Four Color Dots
இது பிரிண்டிங் ப்ராசஸ்ல பயன்படுற நாலு கலர்களை குறிக்குது. சியான்னா நீல கலர். மெஜந்தான்னா பிங்க் கலர். எல்லோன்னா மஞ்சள் கலர். கீன்னா கருப்பு கலர். சிஎம்ஒய்கே பிரிண்டிங் ப்ராசஸ்ல, இந்த நாலு கலர்களை மிக்ஸ் பண்ணி விதவிதமான கலர்கள் பிரிண்ட் பண்ணலாம். இதனால நல்ல குவாலிட்டியும், வெரைட்டியும் கிடைக்கும். தமிழ் பேப்பர் மட்டும் இல்ல, இங்கிலீஷ், ஹிந்தி எல்லா பாஷை பேப்பர்லயும் இந்த புள்ளிகளை நீங்கள் பார்க்கலாம்.
லக்கி பாஸ்கர் படத்தில் வரும் Amex கார்டின் சிறப்பு என்ன தெரியுமா? வேற லெவல்!