- Home
- Lifestyle
- Sweating on Rainy Day : மழைக்காலத்தில் அதிகமா வியர்க்குதா? அசால்ட்டா இருக்காதீங்க.. மருத்துவர்கள் அட்வைஸ்
Sweating on Rainy Day : மழைக்காலத்தில் அதிகமா வியர்க்குதா? அசால்ட்டா இருக்காதீங்க.. மருத்துவர்கள் அட்வைஸ்
மழைக்காலத்தில் நீங்கள் அதிக வியர்வை பிரச்சனையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், அது சில உடல்நல பிரச்சனையின் அறிகுறியாகும்.

Excessive Sweating on Rainy Days
தற்போது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை கோடை வெப்பத்திலிருந்து நமக்கு நிவாரணம் அளித்து, வானிலையை இனிமையாக மாற்றுகிறது. மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு அதிக அளவில் வியர்வை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இது சில உடல்நல பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
மழைக்காலத்தில் அதிகமாக வியர்ப்பது ஏன்?
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், வியர்வை நம் உடலில் நடக்கும் ஒரு இயற்கையான செயல்பாடு. வெப்பம் அதிகமாக அல்லது ஈரப்பதமாக இருக்கும் போது உடலில் வியர்வையை சுரக்கும். ஆனால் மழைக்காலத்தில் வெப்பநிலை ரொம்பவே குறைவாகவும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அதிகமாக வியர்க்கிறது. இருந்தபோதிலும் மழைக்காலத்தில் அதிகமாக வியர்ப்பது அது ஒரு சில உடல்நல பிரச்சனையின் அறிகுறியாகும். ஆகவே இதே பிரச்சினையை நீங்களும் எதிர்கொள்கிறீர்கள் என்றால், அதை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில் பிரச்சனை மேலும் அதிகரிக்க கூடும்.
மழைக்காலத்தில் அதிகமாக வியர்ப்பதை ஏன் புறக்கணிக்க கூடாது?
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களின் அறிகுறிகளாலும் மழைக்காலத்தில் அதிகமாக வியர்வை வெளியேறலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் அதிக ஈரப்பதம் காரணமாக மூளையானது வியர்வை சுரப்பிகளை அதிகமாக சுரக்கும். அதுமட்டுமின்றி ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்ற நிலை காரணமாகவும் மழைக்காலத்தில் அதிகமாக வியர்வை ஏற்படுகிறது. நீரிழிவு தைராய்டு போன்ற பிரச்சினைகளாலும், ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் மழைக்காலத்தில் அதிகமாக வியர்க்கும். எனவே எந்தவித காரணமும் இல்லாமல் மழைக்காலத்தில் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறது என்றால் அதை அசால்டாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து, சரியான காரணத்தை கண்டறிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு :
மழைக்காலத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வெளியேறும் வியர்வையை தவிர்க்க பருத்தி மற்றும் லேசான ஆடைகளை அணியவது நல்லது. ஏனெனில் அவை தான் வியர்வையை எளிதில் உறிஞ்சி விடும் மற்றும் உடல் சுவாசிக்க எளிதாக இருக்கும். அதுபோல வியர்வை வருவதை தவிர்க்க தினமும் குளியுங்கள். காரணம் மழைக்காலத்தில் உடலை சுத்தமாக வைத்திருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.