MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மெசேஜ் ஓ.கே. ஆனா போனில் பேசுவதை தவிர்க்கும் 2K கிட்ஸ்! இதுதான் காரணமா?

மெசேஜ் ஓ.கே. ஆனா போனில் பேசுவதை தவிர்க்கும் 2K கிட்ஸ்! இதுதான் காரணமா?

18 முதல் 34 வயதுடையவர்களில் 70% பேர் மொபைல் போன் அழைப்புகளைத் தவிர்க்கிறார்கள், மெசேஜிங் மற்றும் சமூக ஊடகங்களை விரும்புகிறார்கள். இந்த மாற்றம் தகவல் தொடர்பு பாணியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது, இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை பாதிக்கிறது.

2 Min read
Web Team
Published : Sep 05 2024, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mobile Phone

Mobile Phone

1980களின் முற்பகுதியில் தொடங்கி 1990களின் பிற்பகுதி வரை பிறந்தவர்கள் மில்லினியல் என்று அழைக்கப்படுகின்றனர். அதன்பின்னர் பிறந்தவர்கள் Z தலைமுறை என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் 18 முதல் 34 வயது வரை உள்ளவர்களில் 70% பேர் தங்களுக்கு வரும் மொபைல்போன் அழைப்புகளை ஏற்பதில்லை என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தங்களுக்கு வரும் போன்களை இவர்களை புறக்கணிப்பதாகவும், சிலர் மெசேஜ் மூலம் பதிலளிப்பதாகவும் தெரியவந்துள்ளது. தங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அவர்கள் யார் என்று இணையத்தில் தேடுவதாகவும் சிலர் கூறி உள்ளனர். 

Uswitch என்ற நிறுவனம் 2000 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் 18 – 34 வயதுடைய 70% பேர் தங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு மெசேஜ் மூலம் பதிலளிப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

25
Mobile Phone

Mobile Phone

2009 வரை மொபைல் போனில் ஒருவரை அழைத்து பேசும் செலவு மிக அதிகம். இதனால் போனில் மெசேஜ் மட்டுமே அனுப்பும் தலிஅமுறையினர் உருவாகினர். 
35 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினர் சத்தமான ரிங் டோனை வைத்துக்கொள்ளவில்லை என்பதால் மொபைல் போனில் லைட் எரிந்தாலே ஏதேனும் மோசமாக நடந்துவிட்டதாக உணர்கின்றனர்.

இதையே தான் Uswitch நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பலர் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட 50% பேர் எதிர்பாராத அழைப்பு வந்தால் அது மோசமான செய்தியாக தான் இருக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். 
 

35
Mobile Phone

Mobile Phone

மோசடி அல்லது விற்பனையாளர்கள் யாராவது அழைப்பதால் அழைப்புகளை ஏற்பதில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதே நேரம் போனில் பேசவில்லை என்பதால் இன்றைய இளம் தலைமுறையினர் நண்பர்களுடன் தொடர்பில் இல்லை என்று அர்த்தம் இல்லை.

மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், ரீல்ஸ், மீம்ஸ் என தங்கள் நண்பர்களுடன் உரையாடி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் தாக்கம் அதிகரித்துள்ளதால் இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சேட் ஆகிய தளங்களில் மெசேஜ் மட்டுமின்றி வீடியோ மற்றும் படங்களை அனுப்ப முடியும் என்பதால் பலரும் சமூக வலைதளங்களில் சேட் செய்து வருகின்றனர். 

45
Mobile Phone

Mobile Phone

Uswitch கருத்துக்கணிப்பில் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்ட 37% பேர் வாய்ஸ் மெசேஜை அனுப்ப விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் அதே நேரம் 34 முதல் 54 வயது வரை உள்ளவர்களில் வெறும் 1% பேர் மட்டுமே வாய்ஸ் மெசேஜை தேர்ந்தெடுத்துள்ளனர். 

ஆனால் அதே நேரம், செல்போன் அழைப்புகளை தவிர்ப்பதால் தொழில் வாழ்க்கை அல்லது அலுவலக பணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். எனினும் வேலை நேரத்தில் போனில் வரும் அழைப்பை ஏற்றால் வேலை பாதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர். 

55
Mobile Phone

Mobile Phone

போன் பேசும் போது அதிகளவு நம்மை வெளிப்படுத்தக்கூடும், நெருக்கம் அதிகரிக்கும், ஆனால் அதே நேரம் மெசேஜ் அனுப்பும் போது நம்மை வெளிப்படுத்தாமல் தகவல் தொடர்பு கொள்ள முடியும் என்று இளம் வயதினர் கருதுகின்றனர். 

25 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் ஃபேக்ஸ் அனுப்புவதில் இருந்து மின்னன்ஞ்சலுக்கு மாறினர். இதன் மூலம் தகவல் தொடர்பு மேலும் எளிமையானது. ஆனால் 1990களில் எப்படி ஃபேக்ஸ் இயந்திரங்களை கைவிட்டோமா அதே போல் இன்னும் சில ஆண்டுகளில் மொபைல் போன் அழைப்புகளை கைவிட போகிறோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved