MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த '6' பிரச்சினை உள்ளவங்க வெறும் வயிற்றில் மறந்தும் நெய் சாப்பிடாதீங்க!!

இந்த '6' பிரச்சினை உள்ளவங்க வெறும் வயிற்றில் மறந்தும் நெய் சாப்பிடாதீங்க!!

Ghee In Empty Stomach : வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், உடலில் சில பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல.

2 Min read
Author : Kalai Selvi
Published : Dec 24 2024, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ghee health benefits in tamil

ghee health benefits in tamil

நெய் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாக கருதப்படுகிறது. அதாவது இதில் நம் உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள், நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமில அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால்தான் நம்முடைய முன்னோர்கள் நெய்யை உணவில் சேர்த்துக்கொண்டார்கள். ஆயுர்வேதத்திலும் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் இது உதவுகிறது. மேலும் இது உங்களது இருதய ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ghee in Empty Stomach In Tamil

Ghee in Empty Stomach In Tamil

இத்தகைய சூழ்நிலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் குறிப்பாக செரிமான அமைப்பு சுத்தப்படுத்தப்படும், மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கும், வயதான எதிர்ப்பு குறையும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும், கண் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தவிர மூளை, நினைவாற்றல் போன்றவற்றிற்கும் நெய் நன்மை பயக்கும்.  ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, நெய் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அனைவருக்கும் நல்லதல்ல. ஆம், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் அது நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். அது யார் யார் என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  நெய் நல்லது தான்; ஆனா 'இப்படி' சாப்பிட்டா பிரச்சினை வருவது கன்ஃபார்ம்!

35
Who should avoid ghee in tamil

Who should avoid ghee in tamil

யாரெல்லாம் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடக்கூடாது:

பால் அலர்ஜி உள்ளவர்கள்...

சிலருக்கு பால் மற்றும் பால் பொருட்கள் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டாம். மீறி சாப்பிட்டால் அதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதய பிரச்சனை உள்ளவர்கள்...

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும் போது அதில் இருக்கும் கொலஸ்ட்ராலானது இதய நோய் ஆபத்துகளை அதிகரிக்க செய்யும். அதுவும் குறிப்பாக, நெய்யில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு அமிலங்களானது இதய குழாய்களில் கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். எனவே, இதய பிரச்சினை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டாம்.

45
Ghee risks and precautions in tamil

Ghee risks and precautions in tamil

கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள்...

உங்களுக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்தால் நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பிரச்சனை வீரியமாகும்.

அதிக எடை உள்ளவர்கள்...

அதிகமாக இருக்கும் உங்களது எடையை குறைக்க நீங்கள் டயட்டில் இருக்கும்போது காலையில் வெறும் வயிற்றில் கண்டிப்பாக நெய் எடுத்துக் கொள்ள வேண்டாம். வேண்டுமானால் நீங்கள் உணவுடன் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவு மட்டும் நெய் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் எடுத்தால் உங்களது எடை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய்.. தினமும் சாப்பிட்டால் இந்த '6' நோய்கள் கிட்ட கூட நெருங்காது!!

55
ghee side effects in tamil

ghee side effects in tamil

கர்ப்பிணிகள்...

கர்ப்ப காலத்தில் பெண்கள் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டாம். ஏனெனில் பொதுவாக கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை அஜீரணக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பு ஏற்படும். நெய் எடுத்துக் கொண்டால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.

வயிற்று பிரச்சனை உள்ளவர்கள்..

நெய் செரிமான அமைப்புக்கு நல்லது என்றாலும் நீங்கள் அடிக்கடி செரிமான மற்றும் வயிற்று பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருந்தால் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நெய் பக்க விளைவுகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved