Drumstick : முருங்கைக்காய் கூட சிலருக்கு ஆபத்தாகுமா? யார் சாப்பிடக் கூடாது தெரியுமா?
முருங்கைக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், சிலர் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் யார் என்று இங்கு பார்க்கலாம்.

Drumstick Side Effects
முருங்கைக்காயில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆயுர்வேதம், இயற்கை மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகின்றது. இப்படி ஏராளமான நன்மைகள் இருந்தாலும், சாப்பிடவே கூடாது அவர்கள் யார் யாரென்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
யாரெல்லாம் முருங்கைக்காய் சாப்பிட கூடாது?
1. கர்ப்பிணிகள் : முருங்கைக்காய் கர்ப்பப்பையை சுருக்கி கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது.
2. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் : உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் முருங்கைக்காய் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் மேலும் குறைந்து விடும்.
3. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் : தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முருங்கைக்காய் சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு செயல்பாட்டை பாதிக்கும்.
முருங்கைக்காய் நன்மைகள் :
முருங்கைக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் செரிமானத்தை மேம்படுத்தும், எலும்புகளை வலுப்படுத்தும், கண்பார்வையை கூர்மையாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முருங்கைக்காய் நன்மைகள்
முருங்கைக்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
முருங்கைக்காய் நன்மைகள்
சிறுநீரக செயல்பாடு குறைபாடு உள்ளவர்களுக்கு முருங்கைக்காய் ரொம்ப ரொம்ப நல்லது. இது சிறுநீரக கற்களை உண்டாக்கும் ஆக்சலேட்டை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே சிறுநீரக நோயாளிகள் தயக்கமின்றி முருங்கைக்காய் சாப்பிடலாம்.