MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெந்தயத்தின் அற்புத பலன்கள் தெரியும்.. ஆனா யாரெல்லாம் சாப்பிட்டா பிரச்சனைனு தெரியுமா?

வெந்தயத்தின் அற்புத பலன்கள் தெரியும்.. ஆனா யாரெல்லாம் சாப்பிட்டா பிரச்சனைனு தெரியுமா?

Fenugreek Seed side Effects : வெந்தயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும் சிலர் வெந்தயம் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Dec 31 2024, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Fenugreek seed health benefits in tamil

Fenugreek seed health benefits in tamil

சமையலறையில் பயன்படுத்தப்படும் வெந்தயம் பல மருத்துவ குணங்களால் நிறைந்துள்ளன. வெந்தயம் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றது. முக்கியமாக இதில் பல மதிப்பு பண்புகள் மற்றும் நன்மைகள் உள்ளன. அதாவது வெந்தயத்தில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, இரும்புசத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ், வைட்டமின் பி6 வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை வயிற்றுப் பிரச்சனைகள் முதல் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Fenugreek seed side effects

Fenugreek seed side effects

ஆனால், எதையும் அளவுக்கு மீறி சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வெந்தயமும் அப்படித்தான். ஆம், வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, இருமல், வீக்கம், வாயு மற்றும் சிறுநீரில் துர்நாற்றம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மட்டுமின்றி உடலில் சில பிரச்சனை இருந்தால் வெந்தயம் சாப்பிடுவது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் தெரியுமா? எனவே எந்தெந்த நபர்கள் வெந்தயத்தை சாப்பிடக்கூடாது. மீறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள்.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

35
who should not take fenugreek in tamil

who should not take fenugreek in tamil

சர்க்கரை நோயாளிகள்:

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நன்மை பயக்கும் என்றாலும், இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். இது அவர்களுக்கு ஆபத்து. எனவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு தான் வெந்தயம் சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள்:

கர்ப்பிணி பெண்கள் வெந்தயம் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.  ஏனெனில், வெந்தயம் இயற்கையாகவே வெப்பத் தன்மையுடையது என்பதால், கர்ப்பிணிகள் இதை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரத்தப் போக்கு பிரச்சினை ஏற்படும். இதுதவிர வாயு, குமட்டல், வீக்கம், வயிற்றுப்போக்கு போன்று செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:   வெந்தயத்தை கூந்தலில் 'இப்படி' யூஸ் பண்ணுங்க... முடி வேகமாக வளரும்!

45
Fenugreek seed contraindications in tamil

Fenugreek seed contraindications in tamil

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்:

நீங்கள் உயர் ரத்த அழுத்தத்திற்காக மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்தயத்தில் சோடியம் குறைவாக உள்ளதால் இது ரத்த அழுத்த அளவை கணிச்சமாக குறைத்து விடும். நீங்கள் அளவுக்கு அதிகமாக வெந்தயம் எடுத்துக் கொண்டாலோ நீங்கள் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஒவ்வாமை உள்ளவர்கள்:

வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆம், வெந்தயத்தில் இருக்கும் பண்புகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் தடிப்புகள், தோல் எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதுபோல வாந்திக்கு முதல் பிரச்சனை உங்களுக்கு இருதல் வெந்தயம் சாப்பிட வேண்டாம்.

55
who should avoid fenugreek seeds in tamil

who should avoid fenugreek seeds in tamil

சுவாச பிரச்சனைகள்;

நீங்கள் சுவாச நோயாளிகளுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால் வெந்தயத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது மருந்துகளுடன் வினைபுரிந்து மோசமான விளைவை ஏற்படுத்தும்.

குறிப்பு: மேலே சொன்ன பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால் வெந்தயம் சாப்பிடும் முன் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசிக்க மறக்காதீர்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
(16.5 ov) 329 & 58/2
AUSAUS
429
Day 3 - Session 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Recommended image2
Water Tank Leakage: தண்ணீர் தொட்டியில் விரிசலா? புதிய தொட்டி வாங்கும் முன் இதைச் செய்யுங்கள்
Recommended image3
குளிர்ந்த நீரா, வெந்நீரா? சாப்பிட்டதும் நீங்கள் செய்யும் இந்தத் தவறு செரிமானத்தைப் பாதிக்குமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved