கேரட் சிறந்தது தான்.. ஆனா குளிர்காலத்துல இந்த '5' பேர் சாப்பிட்டால் 'கண்டிப்பா' பிரச்சினை!!
Carrot In Winter : கேரட் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் குளிர்காலத்தில் சிலருக்கு கேரட் நல்லதல்ல. எனவே எந்தெந்த நபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
who should avoid carrot in winter
மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப உணவு பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும். அந்தவகையில் தற்போது குளிர்காலம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த பருவத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் இந்த பருவத்தில் பல வகையான காய்கறிகள் சந்தையில் கிடைக்கும். அவை அனைத்தும் உணவின் முக்கிய பகுதியாகும். அந்த வகையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்த கேரட் இந்த பருவத்தில் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. கேரட்டில் அல்வா, கூட்டு, பொரியல் என பல வகையான ரெசிபிகள் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
who should avoid carrot in winter
ஆனால், இந்த பருவத்தில் கேரட் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டால், கண்டிப்பாக இல்லை. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆம், குளிர்காலத்தில் சிலருக்கு கேரட் சாப்பிடுவது நல்லதல்ல. எனவே எந்தெந்த நபர்கள் குளிர்காலத்தில் கேரட் சாப்பிடக்கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
who should avoid carrot in winter
குளிர்காலத்தில் யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது:
வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள்:
உங்களுக்கு வயிற்றில் அடிக்கடி ஏதேனும் பிரச்சனை இருந்தால் நீங்கள் குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கேரட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அது உங்களது வயிற்றுக்கு நல்லதல்ல. ஒருவேளை நீங்கள் சாப்பிட விரும்பினால் மிதமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
who should avoid carrot in winter
சர்க்கரை நோயாளிகள்:
குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கேரட் சாப்பிடும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கேரட்டில் இயற்கையாகவே அதிக அளவு சர்க்கரை இருப்பதால், இதை நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உங்களது சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு கேரட் சாப்பிடுங்கள்.
who should avoid carrot in winter
ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள்:
சிலருக்கு சருமத்தில் அடிக்கடி ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். இதனால் உடலில் அரிப்பு, தடிப்புகள் மற்றும் பருக்கள் வரும். உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால் கேரட்டை சாப்பிடுவதற்கு முன் யோசிங்கள். ஏனெனில் கேரட் ஒவ்வாமை பிரச்சினையை தூண்டும் அல்லது அதிகரிக்கச் செய்யும். இத்தகைய சூழ்நிலையில் கேரட்டை மிகவும் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது என்பதை சரி பார்க்கவும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
who should avoid carrot in winter
பாலூட்டும் பெண்கள்:
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் கேரட் அதிக அளவில் சாப்பிட கூடாது ஏனெனில் கேரட் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது தாய் பாலின் சுவையை மாற்றி விடுகிறது. அதுமட்டுமின்றி இதனால் குழந்தைக்கு தாய்க்கும் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 10 நிமிடத்தில் சுவையான கேரட் சாதம் இப்படி செய்ங்க.. செமையா இருக்கும்!
who should avoid carrot in winter
தூக்கப் பிரச்சனை உள்ளவர்கள்:
மன அழுத்தம் அல்லது வேறு சில காரணங்களால் நீங்கள் இரவு சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் கேரட்டை குறைந்த அளவு சாப்பிடுங்கள். ஏனெனில் கேரட்டில் இருக்கும் மஞ்சள் பகுதி சூடானது என்பதால் அவை வயிற்றுக்குள் சென்றவுடன் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். இதனால் உங்கள் தூக்கம் கெட்டுவிடும். எனவே நீங்கள் இரவு நிம்மதியாக தூங்க விரும்பினால் குளிர்காலத்தில் கேரட் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.