Vijayapriya Nithyananda: நித்யானந்தாவின் கைலாசா பிரதிநிதியாக ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற அழகி யார்?
ஐக்கிய நாடுகள் சபையின் 19வது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மாநாட்டில் நித்யானந்தாவின் கற்பனை நாடான கைலாசாவின் பிரதிநிதியாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்தப் பெண் யார்? இவரது ஸ்டைலைப் பார்த்தால் அசந்துபோவீர்கள்.
பலாத்காரக் குற்றச்சாட்டை எதிர்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்யானந்தாவால் நிறுவப்பட்ட புதிய நாடு கைலாசா. விஜயப்ரியா நித்யானந்தா ஐக்கிய நாடுகள் சபையில் கைலாசாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.
அமெரிக்கன் கைலாசா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விஜயப்ரியா நித்யானந்தா, இந்து மதத்தின் உச்ச தேசபக்தருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசினார்.
"இந்து மதத்தின் உ
யர்ந்த தலைவர் நித்யானந்தா, இந்து மதத்தின் பூர்வீக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகளை மீட்டெடுப்பதற்காக கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளார். அவர் கற்பிக்க தடை விதிக்கப்பட்டு, பிறந்த நாட்டிலி ருந்து நாடு கடத்தப்பட்டார்" என்று புகார் அளித்தார்.விஜயப்ரியா நித்யானந்தாவின் பேஸ்புக் பக்கத்தில் அவர் அமெரிக்கா வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை.
பிப்ரவரி 22 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சியில் கைலாசா பிரதிநிதியாக விஜயப்ரியா கலந்துகொண்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் கைலாசா நாடு சார்பில் பங்கேற்றவர் விஜயப்ரியா.
தனது பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தாவின் புகைப்படத்தை போட்டு, 'என் அன்புக்குரிய நித்யானந்த பரமசிவத்திற்கு' என்ற தலைப்பில் அவரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார் விஜயப்ரியா.
நித்யானந்தா சிரித்தபடி அமர்ந்திருக்க, ஸ்லீவ்லெஸ் ரவிக்கையும் பட்டுச் சேலையும் நகைகளும் அணிந்து, ஐ லவ் ஸ்வாமிஜி, பரந்தம் என்று வைகுண்ட ஏகாதசி வாழ்த்து கூறியுள்ளார். நித்யானந்தாவின் உருவத்தை கையில் பெரிதாக பச்சை குத்தியிருக்கிறார்.
புடவை, ருத்ராட்சம் மற்றும் தங்க ஆபரணங்களை அணிந்திருக்கும் இவர், மாடர்ன் உடைகள் அணிந்த படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
விஜயப்ரியாவின் LinkedIn பக்கத்தில் விஜயப்ரியா 2014ஆம் ஆண்டு கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை அறிவியல் படித்தவர் என்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, கிரியோல் மற்றும் பிட்ஜின் ஆகியவற்றில் புலமை பெற்றவர் என்றும் கூறப்பட்டுள்ளது.