- Home
- Lifestyle
- Morning Food: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்...அடடே..இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
Morning Food: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்...அடடே..இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
Morning Food: ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளுக்குத் தேவையாக உடல் ஆற்றலை கொடுக்கும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே அவை என்னென்னெ என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பிஸியான வாழ்கை முறையில், காலையில் எழுந்து அவசர அவசரமாக வயிற்றை நிரப்பும் வகையில், காலை உணவாக ஒரு கப் காபி ரொட்டி, சிட்ரஸ் பழங்கள் இல்லை என்றால் இரவில் மீதம் இருந்த பிரிட்ஜில் வைத்த உணவுகளை சாப்பிடுவார்கள்.
சிட்ரஸ் பழங்களில் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். மேலும் ரொட்டி அடிக்கடி இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும் காபி அஜீரணத்திற்கும் வழிவகுக்கும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் வறுத்த அல்லது அமில உணவுகளைத் தவிர்ப்பது நமக்கு நல்லது. இந்த வெயில் காலத்தில் தர்பூசணி போன்ற குளிர்ச்சியான பானங்களை காலை உணவாக எடுத்து கொள்வது நல்லது.
எனவே, ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளுக்குத் தேவையாக உடல் ஆற்றலை கொடுக்கும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே அவை என்னென்னெ என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
யோகர்ட் சாப்பிடலாம்:
காலை எழுந்தவுடன் உடற்பயிற்சிக்கு முன்பு, வெறும் வயிற்றில் யோகர்ட் சாப்பிடலாம். யோகார்டில் இருக்கும் புரதம் மற்றும் கால்சியம் உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.யோகார்ட்டில் புரதம் மற்றும் கால்சியம் அதிகளவில் காணப்படுகிறது. இது உங்க வயிற்றிற்கு குளிர்ச்சியாக இருப்பதோடு சீரணிக்கவும் உதவுகிறது.
முட்டை:
காலை உணவோடு முட்டை சேர்த்துக் கொள்வதன் மூலம் அதில் இருக்கும் அமினோ அமிலம் அன்று முழுவதும் உடல் சோர்வு ஏற்படாமல் தடுக்கிறது. முட்டைகளில் புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் தசைகளை சரி செய்யவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும் உதவுகிறது.
வேர்க்கடலை:
வேர்க்கடலை வெண்ணெய் என்பது ஒரு அத்தியாவசியமான காலை உணவாகும். . இது ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களைக் கொண்டுள்ளது. இது உங்களுக்கு சகிப்புத்தன்மையை உண்டாக்கும்.
வாழைப்பழம்:
காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது மலசிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்தது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் இயற்கையான சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் அதிகளவில் காணப்படுகிறது.