தூள் உப்பு vs கல் உப்பு; எதை போட்டு சமைத்தால் ஆரோக்கியம்னு தெரியுமா?
கல் உப்பு அல்லது தூள் உப்பு இந்த இரண்டில் சமையலில் எந்த உப்பை பயன்படுத்துவது சிறந்தது என்று இங்கு காணலாம்.

Rock Salt vs Powdered Salt
நாம் தினமும் சமையலுக்கு சேர்க்கும் உப்பு சுவையை கொடுப்பது மட்டுமல்லாமல், நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கும் உதவுகிறது. ஆனால் கல் உப்பு? தூள் உப்பு? இந்த இரண்டில் உண்மையில் எது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் உள்ளன. இது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கல் உப்பு
கடல் ஆவி மூலம் தயாரிக்கப்படும் இந்த உப்பு சாம்பல் நிறத்தில் தான் இருக்கும். பிறகு சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் இருக்கும். இது உணவில் தனித்துவமான சுவையை கொடுக்கும். இது இயற்கை மூலம் கிடைப்பதால் அதில் கனிமங்கள் தூள் உப்பை விட அதிகமாகவே உள்ளன. இதை சமையலில் கொஞ்சமாக சேர்த்தால் கூட சுவையை தூக்கலாக காண்பிக்கும்.
தூள் உப்பு :
இந்து உப்பு தொழில்துறையில் பரிமாறப்படும் போது சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் இதில் அயோடின் போன்ற சேர்மங்கள் சேர்க்கப்படுகிறது. இது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளன. மேலும் இந்த உப்பை அதிகமாக உபயோகித்தால் உயர் ரத்த அழுத்தம், இருதய தொடர்பான கோளாறுகள், கால்சியம் சத்து இழப்பு போன்ற பிரச்சினைகள் வரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எது சிறந்தது?
தூள் உப்பை ஒப்பிடுகையில் கல் உப்பானது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இந்த உப்பு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் வசதி மற்றும் சுத்தத்திற்காக சிலர் தூள் உப்பை தேர்வு செய்கிறார்கள். இருந்தபோதிலும், அளவோடு பயன்படுத்தினால் எந்த போக்கும் நல்லதே!