MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pongal 2024 Gallery: பொங்கல் எந்த திசையில் பொங்கினால் அதிர்ஷ்டம்! இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது!

Pongal 2024 Gallery: பொங்கல் எந்த திசையில் பொங்கினால் அதிர்ஷ்டம்! இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது!

எந்த திசையில் பொங்கல் பொங்கினால் என்ன அர்த்தம் என்பது குறித்து, நம் முன்னோர்கள் கனித்து கூறி உள்ள தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 05 2024, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

நிலத்தின் தெய்வமான இந்திரனுக்கும், சூரியனுக்கும், விவசாயத்திற்கு பேர் உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அன்று, மக்கள் அறுவடை செய்த புதிய பச்சரிசியை கொண்டு, புது பானையில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மஞ்சள், விபூதி, குங்குமம், சந்தனம், போன்ற மங்களகரமான பொருட்களை பூசி பொட்டு வைத்து... பானையில் பசும் பால் ஊற்றி, அரிசி, வெல்லம் போட்ட தித்திக்கும் பொங்கலை செய்து சூரியனுக்கு படையல் வைத்து நன்றி செலுத்துவார்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
pongal 2023

pongal 2023

 மாட்டுப் பொங்கல் அன்று, வெள்ளை பொங்கலும், சர்க்கரை பொங்கலும் வைத்து மாடுகளுக்கு படைத்து மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி விடுவதோடு மட்டும் இன்றி... வீட்டில் உள்ள அனைவரும் குடும்பமாக அமர்ந்து, பொங்கல் சாப்பிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

Sobhita Dhulipala: சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் காதலா? உண்மையை ஓப்பனாக கூறிய சோபிதா துலிபாலா!
 

38

நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் திருவிழா, சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். அதே போல், இளைஞர்கள் பாரம்பரியத்தை மறக்காமல், மஞ்சுவிரட்டு, உறியடித்தல், ஜல்லிக்கட்டு, வழுமரம் இருத்தல்  போன்ற வீர வீர விளையாட்டில் ஈடுபடுவார்கள்.
 

48

தமிழர்களின் பாரம்பரியத்தை பேணிக்காக்கும் நாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அன்று, நம் வீட்டில் பொங்கும் பொங்கலை வைத்தே... நம் குடும்பம் இந்த வருடம் முழுவதும் எப்படி இருக்க போகிறது என்பதை நாம் முன்னோர்கள் கணித்து கூறிவிடுவார்கள். சரி எந்த திசையில் பொங்கல் பொங்கினால் மிகவும் நல்லது, எந்த திசையில் பொங்க கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

Keerthi Pandian: பிக்பாஸ் மாயாவுடன்... ஸ்டேஜ் பர்ஃபாம்மென்சில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்! வைரலாகும் வீடியோ..

58

கிழக்கு:

கிழக்கு திசையில் பொங்கல் பொங்குவது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. கிழக்கு திசையில் பொங்கல் பொங்கினாள் வீடு வாங்கும் யோகம் உள்ளது. பூர்வீக சொத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரும். என்று நம்பப்படுகிறது.

68

மேற்கு

மேற்கு திசையில் பொங்கல் பொங்கினாலும் மிகவும் நல்லது. குறிப்பாக திருமண வயதில் உங்கள் வீட்டில் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்கள் வாழ்க்கையில்... சுப காரியம் இடையேறும். சுபச் செலவுகள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Baakiyalakshmi: 'பாக்கியலட்சுமி' தொடரில் இருந்து சன் டிவிக்கு ஜம்ப்பான பிரபல நடிகை! இவங்க தான் ஹீரோயினா?

78
Specialty of Pongal Festival

Specialty of Pongal Festival

வடக்கு

வடக்கு திசையில் பொங்கல் பொங்கினால், அந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு பணவரவு நல்லபடியாக இருக்கும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிட்டும். உங்கள் குடும்பத்தில் படித்து முடித்த பெண்கள் மற்றும் ஆண்கள் இருந்தால், அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் சிக்கல் இன்றி சந்தோஷமாக இருப்பீர்கள்.

88

தெற்கு:

மேலே கூறப்பட்ட  மூன்று திசைகளில் பொங்கல் பொங்கினால் நல்லது. ஆனால்  தெற்கு திசையில் பொங்கல் பொங்குவது அவ்வளவு சிறந்தது இல்லை. இந்த திசையில் பொங்கல் பொங்கினால் அந்த ஆண்டு முழுவதும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எப்போதும் ஏதேனும் ஒரு சோர்வு மற்றும் சோம்பேறித்தனம் உங்களை ஆட்கொள்வது போல் உணர்வீர்கள். திருமண பேச்சுகள் தள்ளிப் போகலாம்... அடிக்கடி உடல் உபாதைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பொங்கல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆப்பிள் நறுக்கியதும் கருப்பாகிறதா? நீண்ட நாள் ஃப்ரெஷ்ஷாக வைக்க சிம்பிள் டிப்ஸ் இதோ!
Recommended image2
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image3
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved