காதுல எறும்பு, பூச்சி போய்ட்டா இந்த '1' விஷயம் பண்ணுங்க.. உடனடி நிவாரணம்!!
Insect in Ear : உங்கள் காதில் எறும்பு, பூச்சி ஏதேனும் சென்று விட்டால் என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
Insect in Ear in Tamil
காதில் எறும்பு, பூச்சி செல்வது தொல்லைப் பிடிச்ச விஷயமாகும். அவை காதை விட்டு வெளியே வரும் வரை நம்மால் நிம்மதியாகவே இருக்கவே முடியாது. கண்டிப்பாக இந்த அனுபவத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது நாம் அனுபவித்திருப்போம். அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு தான் பெரும்பாலும் நடக்கும். மேலும், காதுக்குள் இருக்கும் பூச்சிகள் காது ஜவ்வு போன்ற பகுதிகளை கடித்து கடுமையான வலியை ஏற்படுத்தும். காது ரொம்பவே மென்மையான உணர்வு வாய்ந்த உறுப்பு என்பதால் இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். காதில் பூச்சிகள் எறும்புகள் வண்டுகள் சென்று விட்டால் அதை வெளியே எடுப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.
Insect in Ear in Tamil
இருட்டறை:
காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் முதலில் ஒரு இருட்டறைக்குள் சென்று டார்ச் அல்லது மொபைல் லைட்டை காதில் காட்ட வேண்டும். ஏனெனில் சில பூச்சிகள் ஒளியைப் பார்த்து உடனே வெளியே வந்து விடும்.
ஆலிவ் அல்லது பேபி ஆயில்:
உங்கள் காதுக்குள் எறும்பு, பூச்சி ஏதேனும் சென்று விட்டால் உங்கள் வீட்டில் ஆலிவ் அல்லது பேபி ஆயில் இருந்தால் அதன் சில துளிகளை காதுக்குள் விட்டால், பூச்சிகள் காதில் இருக்க முடியாமல் அந்த எண்ணெயுடன் சேர்ந்து வெளியே வந்துவிடும்.
Insect in Ear in Tamil
உப்பு நீர்:
இதற்கு மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதன் சில துளிகளை காதில் ஊற்றவும். உப்பு கலந்து நீர் பூச்சிக்கு பிடிக்காது என்பதால், அது உடனே காதிலிருந்து வெளியே வந்து விடும்.
ஆல்கஹால்:
காதில் இருக்கும் பூச்சி வெளியே வர ஒரு பஞ்சில் ஆல்கஹால் நனைத்து அதை காதின் வெளிப்பகுதியில் வைத்தால் பூச்சிகள் காதில் இருந்து வெளியே வந்துவிடும். ஒருவேளை இப்படி செய்தும் வெளியே வரவில்லை என்றால், சில துளிகள் மட்டும் ஆல்கஹாலை காதிற்குள் விடுங்கள். பூச்சி வந்துவிடும். .
Insect in Ear in Tamil
முக்கிய குறிப்பு:
1. காதிற்குள் பூச்சி சென்றால் பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் பொருட்களை வைத்து பூச்சிகளை எடுக்க வேண்டாம். இப்படி செய்தால் பூச்சி மேலும் உள்ளே சென்று விடும். அதுமட்டுமின்றி, உங்கள் காது ஜவ்வு தான் சேதமடையும்.
2. காதிற்குள் பூச்சி சென்றால் உடனே விரலை விட வேண்டாம் இதனால் உங்களுக்கு காது வலி தான் அதிகமாகும்.
3. சிலர் காதிற்குள் பூச்சி சென்றால் தீக்குச்சியை வைத்து எடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. இது காதில் இருக்கும் வேம்ஸ்களை காதினுள் தள்ளிவிடும். அதுமட்டுமின்றி இதனால் உங்கள் காதில் பிரச்சினையாகி, சில சமயம் காது கேட்காமல் கூட போய்விடும்.
4. தண்ணீர் , எண்ணெய் ஊற்றியும் காதிற்குள் இருக்கும் பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை காணுங்கள். முக்கியமாக குழந்தைகள் இந்த பிரச்சனையை சந்தித்தால் உடனே அவர்களை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
5. பூச்சிகள் உங்கள் காதிற்குள் செல்லாதவாறு எப்போதும் கவனமாக இருங்கள். முக்கியமாக வெளியே செல்லும்போது காதுகளை மூடிக்கொள்ளுங்கள்