MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இட்லி சிறந்த உணவாக இருந்தாலும் 'இப்படி' சாப்பிட்டா மட்டும் தான் ஆரோக்கியம்.. இல்லன்னா வேஸ்ட்!!

இட்லி சிறந்த உணவாக இருந்தாலும் 'இப்படி' சாப்பிட்டா மட்டும் தான் ஆரோக்கியம்.. இல்லன்னா வேஸ்ட்!!

Right Way To Eat Idli : இட்லி எளிய உணவாக இருந்தாலும் அதனை முறையாக சாப்பிடும் போது மட்டும் தான் முழு பலனையும் அடைய முடியும். இல்லையென்றால் உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 03 2024, 06:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Right Way To Eat Idli In Tamil

Right Way To Eat Idli In Tamil

தென்னிந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் காலையுணவு இட்லி ஆகத்தான் இருக்கும்.  ஏனென்றால் இட்லி சமைப்பதற்கு எளிமையான உணவு. அரிசியும், உளுந்தும் போட்டு ஆட்டி தயாரித்த புளித்த மாவில் இட்லி அவித்து அதனுடன் மணக்க மணக்க சாம்பார், சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்.  ஒருவேளை சட்னி, சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் பொடி வகைகளை வைத்துக் கூட சாப்பிட்டு விடலாம். அது மட்டுமில்லாமல் ஆவியில் வேக வைப்பதால் எளிதில் இட்லி செரிமானம் அடையும்.

25
Right Way To Eat Idli In Tamil

Right Way To Eat Idli In Tamil

இட்லியை காலை மற்றும் இரவு உணவாக எடுத்துக் கொள்வார்கள். இட்லியில் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கென உள்ள முறைப்படி சாப்பிட்டால் தான் நல்லது.  இல்லையென்றால் சில தீய விளைவுகளை ஏற்படுத்தும். எந்த உணவாக இருந்தாலும் அதற்கென உள்ள முறைப்படி தான் உண்ண வேண்டும். இட்லி சாப்பிடுவதற்கு என்று சில வரைமுறைகள் உள்ளன. பெரும்பாலான வீடுகளில் இட்லிக்கு சட்னி அல்லது சாம்பார் மட்டும்தான் வைப்பார்கள். சில வீடுகளில் இரண்டும் இருக்கும். 

 

35
Right Way To Eat Idli In Tamil

Right Way To Eat Idli In Tamil

சட்னியில் கடலை சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என பல வகைகள் உள்ளன. இட்லிக்கான பொடி வகைகளிலும் உளுந்து பொடி, தேங்காய் பொடி, மிளகாய் பொடி என பல வகை பொடிகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றினை வைத்து இட்லி சாப்பிடும் போது அது உடலுக்குள் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் வைத்து சாப்பிட வேண்டும் என்ற பேராசையில் உண்ணும்போது சுவை நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்குண்டான பாதிப்புகள் ஏற்படும். 

இதையும் படிங்க:  காலை டிபனுக்கு சத்தான வெஜிடபிள் இட்லி.. இப்படி செஞ்சு அசத்துங்க!

45
Right Way To Eat Idli In Tamil

Right Way To Eat Idli In Tamil

அதாவது நான்கு இட்லிக்கு நான்கு வகை பொடிகள், மூன்று வகை சட்னிகள் என எடுத்துக்கொண்டால் அது உடலுக்குள் செல்லும்போது சில பாதிப்புகளை உண்டு பண்ணுகின்றன. இதனால் நெஞ்செரிச்சல், வயிறு தொடர்பான கோளாறுகள் வரலாம். இட்லி பொடியில் சேர்க்கும் நல்லெண்ணெய் அல்லது நெய் அதிக கலோரிகளுக்கு வழிவகுக்கும். காலை இட்லியுடன் வடை சாப்பிடுவது நல்லதல்ல. இதில் உள்ள அதிக கலோரிகள் உடலுக்கு நன்மை பயக்காது. 

இதையும் படிங்க:  இட்லி மாவு புளிச்சு போச்சா? இந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணுங்க இட்லி டேஸ்ட்டா இருக்கும்!

55
Right Way To Eat Idli In Tamil

Right Way To Eat Idli In Tamil

இட்லியின் நன்மைகள்:

இட்லியை ஆவியில் வேக வைப்பதால் இதில் கொழுப்புச்சத்து காணப்படாது. எளிதில் செரிமானம் ஆகும். இட்லி சாப்பிடும் சமயங்களில் சாம்பாரும் சாப்பிடுவதால் அரிசியில் கார்போஹைட்ரேட்டும், பருப்பில் புரதச்சத்தும் கிடைக்கிறது. 

எப்படி சாப்பிட வேண்டும்? 

நீங்கள் 2 அல்லது 3 இட்லிகள் சாப்பிட்டால் ஒரு கப் சாம்பார் வைத்து சாப்பிடலாம். இதுவே ஆரோக்கியமானது. இத்துடன் சட்னி விரும்பினால் சேர்க்கலாம். ஆனால் தேங்காய் சட்னி உடல் எடையை கூட்டும். அளவாக உண்பது நல்லது. விரும்பினால் புதினா, வெங்காயம், தக்காளி இதில் ஏதேனும் ஒரு சட்னி வகை வைத்து சாப்பிடலாம். உடலுக்கு தேவையான வைட்டமின்களை தரும். இதுவே ஆரோக்கியமான வழிமுறை. காலை உணவுகளில் இட்லி நல்ல தேர்வாக இருக்கும். ஆனால் அளவாக உண்ண வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாறுமாறாக உயரப்போகும் தங்கம்..! அதிர வைக்கும் ரகசியம்..! இந்திய- சீனாவின் 'டாலரைசேஷன்' விளையாட்டால் உச்சம்..!
Recommended image2
Tea Filter Cleaning Hacks : டீ வடிகட்டில கறை போகவே மாட்டேங்குதா? இப்படி ஒருமுறை கிளீன் பண்ணி பாருங்க.. புது போல ஜொலிக்கும்!
Recommended image3
பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved