MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வேலை வேலைன்னு மதிய சாப்பாட்டை மிஸ் பண்றீங்களா? இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

வேலை வேலைன்னு மதிய சாப்பாட்டை மிஸ் பண்றீங்களா? இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

வேலைப்பளு காரணமாக மதியம் சாப்பிடாமல் இருப்பது உடல் நலத்தை பாதிக்கும்.இதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramya s
Published : Sep 30 2024, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
What Happens If You Skip Lunch

What Happens If You Skip Lunch

அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கிறது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால்  எப்பவும் வேலை மேலயே கவனமா இருக்க முடியுமா என்ன? ஆனால், சிலர் அதிக வேலை காரணமாக மதியம் சாப்பிடாமல் இருப்பார்கள்.. சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்காமல் கூட சிலர் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருப்பார்கள். இது ஓரிரு நாட்கள் நடந்தால் எந்த எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால், அடிக்கடி இப்படிச் செய்தால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். மதியம் சாப்பிடாம இருந்தா என்ன ஆகும் என்று பார்க்கலாம்.

ஆற்றல் குறையும். 

நீங்கள் தினமும் மதியம் சரியான நேரத்திற்கு சாப்பிட்டால் தான் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அப்போது தான் நீங்க தினசரி வேலைகளை செய்வதில் கவனம் செலுத்த முடியும். ஆனால், வேலை அதிகமாக உள்ளது என்று கூறி சாப்பிடாமல் இருந்தால் அடிக்கடி பசி, தலைசுற்றல், சோர்வு, மனநிலையில் மாற்றங்கள் என பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது உங்க வேலைத் திறனையும் அதிகமாக பாதிக்கும். அதனால மதியம் எவ்வளவு வேலை இருந்தாலும் சாப்பிட மறந்துடாதீங்க. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
What Happens If You Skip Lunch

What Happens If You Skip Lunch

வேலையில் கவனம் சிதறும்:

நீங்கள் சாப்பிடும் சாப்பாடுதான் மூளைக்குத் தேவையான சக்தியை அளிக்குது. அப்போது தான் உங்க மூளை நன்றாக வேலை செய்யும். ஆனா, நீங்கள் மதியம் சாப்பிடாம இருந்தால், மூளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது. இதனால நீங்க சரியா வேலை செய்ய முடியாது. கஷ்டமான வேலைகளைச் செய்யும்போது இன்னும் கூடுதல் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். 

ஹைப்போகிளைசீமியா:  

ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும் என்றால் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் நீங்கள் மதியம் சாப்பிடாம இருந்தால், ஹைப்போகிளைசீமியா பிரச்சனை வர வாய்ப்பு அதிகம். இதனால உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து இது சர்க்கரை நோய் உள்ளவங்களுக்கு இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். உடல்நலம் பாதிக்கும். 

35
What Happens If You Skip Lunch

What Happens If You Skip Lunch

எடை அதிகரிக்கும்.

சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால், நீங்கள் சாப்பிடாம இருந்தாதான் எடை அதிகமாகும். ஏனெனில், நீங்க ஒரு வேளை சாப்பாட்டைத் தவிர்த்தால், அடுத்த வேளை அதிகமாக பசிக்கும். இதனால நீங்க எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிடுவீர்கள். இது உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். 

செரிமானப் பிரச்சினைகள் வரும்:

நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான சத்துக்கள் எல்லாம் சரியாக கிடைக்கும். சத்துக்கள் உங்க உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்பவே முக்கியம். ஆனா, நீங்க மதியம் சாப்பிடாமல் இருந்தால், வாயுத் தொல்லை, அசிடிட்டி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல்னு பல செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால உங்கள் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில், தினமும் மதியம் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது அவசியம். 

45
What Happens If You Skip Lunch

What Happens If You Skip Lunch

மதியம் என்னென்ன சாப்பிடலாம்? 

சத்தான உணவுகள்:

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் மதிய உணவில் பழங்கள் காய்கறிகள், தானியங்கள், புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வது அவசியம். இதனால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். 

நீர்ச்சத்து அவசியம்:

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. நாள் முழுவதும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதற்காக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் சோர்வு, தலைவலி மாதிரியான பிரச்சினைகள் வராது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தான் இது மாதிரி பிரச்சினைகள் வரும். 

55
What Happens If You Skip Lunch

What Happens If You Skip Lunch

சாப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

சிலர் சாப்பிடும் போது கூட வேலை செய்வார்கள். ஆனால், இப்படிச் செய்யவே கூடாது. சாப்பிடும் போது வேலையை பற்றி யோசிக்காமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்தி, உணவை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். அப்போது உணவும் நன்றாக செரிமானம் ஆகும்.

ஆரோக்கியமான சிற்றுண்டிகள் :

சாப்பிட்ட பிறகு இடையே பசி எடுக்கும் ஆரோக்கியமற்ற திண்பண்டங்களுக்கு பதில், பழங்கள், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தவறாமல் சாப்பிடுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved