ஒரு மாசம் 'டீ' குடிக்காமல் இருந்தால் 'இவ்வளவு' மாற்றங்கள் ஏற்படுமா? இது நல்லா இருக்கே!!
Effects Of Quitting Tea : ஒரு மாதம் முழுவதும் டீ, காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Effects Of Quitting Tea In Tamil
டீ, காபி பலருக்கு அத்தியாவசியமாக உள்ளது. காலையில் விழித்ததும் டீ அல்லது காபியை நாடுவார்கள். இது நம்மஜ் உற்சாகத்துடன் வைத்திருக்கிறது. சிலரால் டீ இல்லாமல் வாழவே முடியாது. காலை முதல் மாலை வரை 5 முதல் 6 டீ குடிப்பவர்களும் உண்டு. டீ குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பதை விட டீ குடிக்காமல் இருந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை இங்கு காணலாம்.
ஒரு நாளில் 2 முறை தேநீர் குடிப்பது உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. ஆனால் நாள்தோறும் 2 முறை டீ குடித்தால் ஒருநாள் உடலில் பெரியமாற்றங்கள் ஏற்படலாம். ஏனென்றால் டீயில் சேர்க்கும் சர்க்கரை அவ்வளவு நல்லதல்ல. நாள்தோறும் அதிகமாக டீ குடிப்பதால் உடல்நலத்திற்கு கேடு தான். இந்த டீ பழக்கத்தை திடீரென நிறுத்தினால் நல்லதா? அதை முயன்று பார்க்க முதலில் 1 மாதம் டீ குடிக்காமல் இருந்து பார்க்கலாம்.
Effects Of Quitting Tea In Tamil
டீ குடிப்பதை நிறுத்தினால் என்னாகும்?
டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் உள்ள காஃபின் அளவு குறையும். இந்த அளவு குறைவதால் பதற்றம் குறையும். தூக்கக் கோளாறுகள் குறைந்து இரவில் ஆழ்ந்த தூக்கம் வரும். டீயில் டையூரிட்டிக் பண்புகள் உள்ளன. ஒருவர் அதிகமாக டீ குடிப்பதால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறைகிறது. நீங்கள் டீ குடிப்பதை விட்டுவிட்டால் உடலில் நீரிழப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனை குறையும்.
டீ அருந்துவதை விட்டுவிட்டால் நம் உடலின் செல்களில் சேதத்தை உண்டாக்கும் ப்ரீ ரேடிக்கல்கள் படிப்படியாக குறையும். ஏற்கனவே செரிமானக் கோளாறுகள் இருந்தால் அது கூட மெல்ல குணமாகிவிடும். உங்களுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் குறையும். டீ குடிப்பதை விட்டுவிட்டால் சர்க்கரை உட்கொள்ளல் குறையும். இதனால் முகத்தில் ஒரு பளபளப்பு உண்டாகும். உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
Effects Of Quitting Tea In Tamil
திடீரென நிறுத்துவது சரியா?
எந்த ஒரு பழக்கத்தையும் திடீரென கைவிடுவது சற்று கடினமாக தான் இருக்கும். சிலருக்கு டீயை உடனடியாக நிறுத்தி விடுவது மனரீதியான பிரச்சனைகளை கூட ஏற்படுத்தும். உடலில் சோர்வு, மந்தமாக இருப்பது போன்ற உணர்வு, கவன சிதறல், தலைவலி போன்றவை ஏற்படலாம். ஆனால் இவை தற்காலிகமான அறிகுறிகள் தான். சில நாட்கள் தொடர்ந்து டீ குடிக்காமல் பழகினால் இந்த அறிகுறிகள் அதுவே மறைந்துவிடும்.
டீ குடிக்கும் பழக்கத்தை விடவே முடியாது என நினைத்தால், அதற்கு மாற்றாக மூலிகை தேநீர் அருந்தலாம். செம்பருத்தி டீ, ஆவாரம்பூ டீ மாதிரியான மூலிகை தேநீர், பால், வெந்நீர், பழச்சாறுகளை அருந்தலாம். காஃபின் இல்லாத மூலிகை டீயை குடிப்பதால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
இதையும் படிங்க: டீ குடிச்ச உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா..? அப்போ நீங்க 'இத' அவசியம் தெரிஞ்சிக்கனும்..!
Effects Of Quitting Tea In Tamil
எவ்வளவு குடிக்கலாம்?
உங்களால் டீ குடிப்பதை அறவே தவிர்க்க முடியாதபட்சத்தில் எவ்வளவு குடிக்கலாம் என்பதற்கு ஒரு வரையறை உண்டு. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயிறு கோளாறு உள்ளவர்கள் டீ அளவாக குடிக்கலாம். கர்ப்பிணிகள் அதிகமாக டீ குடித்தால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் வாய்ப்புள்ளது. ரத்த சோகை மாதிரியான பிரச்சனைகள் வரலாம் என சொல்லப்படுகிறது. டீ அதிகமாக குடிக்கும்போது அதில் உள்ள டானின் என்ற உள்ளடக்கம் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கிறது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் பால் டீ அருந்தலாமா? எப்போது குடித்தால் சர்க்கரை அளவு நார்மலாக இருக்கும் தெரியுமா?