இந்த பொருட்களை வருட கணக்கில் வைத்து சாப்பிடலாமாம்.. கெட்டுப்போகாது!!
நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருட்களுக்கு உண்மையில் காலாவதி தேதியே கிடையாது தெரியுமா? அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
What Foods Does Not Expire?
பொதுவாகவே சில உணவுப் பொருட்களுக்கு காலாவதி தேதி இருக்கும். அதுவும் குறிப்பாக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளுக்கு காலாவதி தேதி அதில் குறிப்பிட்டு இருக்கும். அவற்றை அந்த குறிப்பிட்ட தேதிக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அவை ஏதாவது ஒரு நோய்களை ஏற்படுத்திவிடும். ஆனால் நாம் பயன்படுத்தும் குறிப்பிட்டு சில உணவுப் பொருட்களுக்கு காலாவதி தேதி இல்லை தெரியுமா? அவை நீண்ட நாள் ஆனாலும் பயன்படுத்தலாம், கெட்டுப்போகாது. அந்த பொருட்கள் பூச்சிகள் மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கப்படாமல் இருந்தால் கெட்டுப் போகாது. எனவே, எந்தெந்த பொருட்களுக்கு காலாவதி தேதி கிடையாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேன்:
தேன் ஹைட்ரஜன் பெராக்ஸைட் உருவாக்கும். இது பெரும்பாலும் பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகள் வளரவிடாமல் தடுக்கும். மேலும் இதில் குறைந்த அளவில் நீர்ச்சத்து இருப்பதால் பாக்டீரியாக்கள் வாழ ஏற்றதல்ல. இதை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்தால் மட்டுமே பல வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும். ஆனால் அதன் தரம் கால போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடுமே தவிர அது முற்றிலும் உண்பதற்கு பாதுகாப்பானது.
உப்பு :
உப்பு முறையாக சேமிக்கப்படும்போது அது கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். உப்பில் இருக்கும் சோடியம் குளோரைடு ஒரு நிலையான ரசாயன கலவை என்பதால், அது உப்பு கெட்டுப் போவதை தடுக்கும், எனவே உப்பை காற்று போகாத ஒரு கண்ணாடி டப்பாவில் சேமிக்க வேண்டும். உப்பை எடுக்கும்போது உலர்ந்த மற்றும் சுத்தமான கரண்டி பயன்படுத்துங்கள்.
சர்க்கரை :
சர்க்கரையும் கெட்டுப்போகாது. சர்க்கரையை குளிர்ந்த மற்றும் குளிர்ந்த இடத்தில் காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்து சேமிக்க வேண்டும். சர்க்கரையை எடுக்க ஈரமான கரண்டியை பயன்படுத்தக் கூடாது. சர்க்கரை டப்பாவை எப்போதுமே ஈரப்பதம் மற்றும் வெப்பத்திலிருந்து தள்ளியே வைக்க வேண்டும் இப்படி நீங்கள் செய்தால் மட்டுமே சர்க்கரை நீண்ட நாள் கெட்டுப் போகாமல் சேமிக்க முடியும்.
அரிசி :
அரிசியும் நீண்ட நாள் சேமித்து வைக்கக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். அரிசியை எப்போதுமே காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து தான் சேமிக்க வேண்டும். அரிசி காலாவதியாகாது என்றாலும், அதை சேமித்து வைக்கும் முறையை பொறுத்து அதன் தரம் குறையாமல் அப்படியே இருக்கும்.
எண்ணெய் :
எண்ணெய் சமையலறையில் பயன்படுத்தும் முக்கியமான பொருள். தாளிப்பது முதல் கூட்டு, பொரியல் என அனைத்திற்கும் எண்ணெய் தான் பயன்படுத்துகிறோம். எண்ணெயும் காலாவதியாகாது. ஆனால் அதை முறையாக சேமித்தால் அதன் தரம் குறையாது.