Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Expired make-up: உங்களின் காலாவதியான விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை..மீண்டும் பயன்படுத்த 6 சிறந்த வழிகள் இதோ

Expired make-up: உங்களின் காலாவதியான விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை..மீண்டும் பயன்படுத்த 6 சிறந்த வழிகள் இதோ

Expired make-up Kit: உங்களின் காலாவதியான மேக்கப் பொருட்களை மறு சுழற்சி செய்ய அல்லது மீண்டும் பயன்படுத்த தேவையான உதவி குறிப்புகள் இதோ..

Anija Kannan | Published : Sep 15 2022, 11:51 AM
2 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
18
Asianet Image

இன்றைய நவீன காலத்தில், கறுப்பு நிறத்தை வெள்ளையாகவும், வெள்ளை நிறத்தை கறுப்பாகவும், ஆண்களை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றும் மேக்கப் வரை பல  பல்வேறு விதமான மேக்கப் சாதனங்கள் உள்ளன. மேக்-அப் செய்து கொள்வது உங்கள் தோற்றத்தை மேம்படுத்தி, மேலும் அழகாக்கி தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். ஒவ்வொரு தருணத்துக்கும் ஏற்றது போல நீங்கள் மேக்கப்பை போட்டுக் கொள்ள வேண்டும்.

 மேலும் படிக்க ..Sani Peyarchi 2022: சனியில் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு பம்பர் பலன் உண்டு... உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

28
Asianet Image

அப்படி மேக் கப் செய்து கொள்வதற்காக நீங்கள் ஆசை ஆசையாக பார்த்து வாங்கும் சில விலை உயர்ந்த மேக்கப் பொருட்கள் காலாவதியான ஆன உடன் குப்பையில் தூக்கி  எறிய வேண்டி இருக்கும். அப்படி ஒருவேளை காலாவதி தேதிக்குப் பிறகு பயன்படுத்தினால் பல தோல் நோய்த்தொற்றுகள் வரலாம். இனி இதுபோன்ற காலாவதியான சாதனங்கள் நீங்கள் குப்பையில் தூக்கி  எறிய வேண்டாம்.அவற்றை மறு சுழற்சி செய்து பயன்படுத்தலாம் அவை எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

38
Asianet Image

லிப்ஸ்டிக்

உங்களுக்குப் பிடித்த லிப்ஸ்டிக் காலாவதி ஆகி விட்டால், இனி குப்பையில் தூக்கி ஏறிய வேண்டாம். அதற்கு பதிலாக டின்ட் லிப் பாம் செய்து பயன்படுத்தலாம். அதற்கு உங்கள் லிப்ஸ்டிக்கை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். இப்போது அந்த கிண்ணத்தை வெந்நீரில் சிறிது நேரம் வைக்கவும். அத்தகைய சூழ்நிலையில், லிப்ஸ்டிக் உருகிவிடும். இப்போது அதை உங்கள் வாஸ்லைன் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலக்கவும். இதனால் நீங்கள் அனைத்து பாக்டீரியாக்களையும் கொல்லலாம். இதற்குப் பிறகு, அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இப்போது உங்களுக்கு பிடித்த நிறத்தில் லிப் பாம் தயார்.

 மேலும் படிக்க ..Sani Peyarchi 2022: சனியில் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு பம்பர் பலன் உண்டு... உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

48
Asianet Image

ஐ ஷேடோ:

ஒரு வருடம் கழித்து உங்கள் ஐ ஷேடோவை புதியதாக மாற்ற வேண்டும். ஏனெனில், பொதுவாக ஐ ஷேடோக்கள் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளில் காலாவதியாகிவிடும். இதனால், பழையதை என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா?  பிறகு, இதனை பயன்படுத்த நீங்கள் முடிவு எடுத்தால், அதை நெயில் பாலிஷாக மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு, தெளிவான (Transparent nail polish) நெயில் பாலிஷை எடுத்து, ஐ ஷேடோ துகள்கள் சிறிது சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் புதிய நெயில் பாலிஷ் தயார். இதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

58
Asianet Image

 ஸ்கின் டோனர்

பெரும்பாலான ஸ்கின் டோனர் ஆல்கஹால் மற்றும் இரசாயனங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. அது காலாவதியானால், கண்ணாடி, மற்றும் உங்கள் மொபைல் ஸ்கிரீன் போன்றவற்றை சுத்தம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.

68
Asianet Image

லிப் பாம்

உங்களுக்கு பிடித்தமான லிம் பாம் காலாவதியாகி விட்டால் அதனைத் தூக்கி எறிய வேண்டிய அவசியம் இனி இல்லை. ஆம், இது உங்கள் குதிகால்களை கொப்புளங்கள் இல்லாமல் மென்மையாக்க உதவும், மேலும் வெட்டுக்காயங்களை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுத்தலாம். இது தவிர, உங்கள் நகங்களைச் சுற்றியுள்ள வறண்ட சருமத்திற்கு ஊட்டமளிக்க இந்த பழைய லிப் பாமைப் பயன்படுத்தலாம். 

78
Asianet Image

மஸ்காரா

மஸ்காரா பொதுவாக மூன்று முதல் ஆறு மாதங்களில் காலாவதியாகிவிடும். இருப்பினும், காலாவதியான பிறகு, அதை நீங்கள் உங்கள் புருவங்களுக்கு பயன்படுத்தலாம். உங்கள் புருவங்கள் நரைத்திருந்தால், அதை உபயோகிக்கலாம். மஸ்காராவின் பிரஷில் உள்ள அதிகப்படியான மஸ்காராவை அகற்றிவிட்டு, அதை புருவங்களை வடிவமைக்க தேவையான முறையில் பயன்படுத்தி கொள்ளலாம். இது தவிர, இந்த பிரஷ் மூலம் உங்கள் உதடுகளையும் மென்மையாக்க பயன்படுத்தலாம்.

88
Asianet Image

முக எண்ணெய்:

உங்களின் விலை உயர்ந்த முக எண்ணெய் மிகவும் காலாவதியானால், அதை உடலில் ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் உங்கள் சருமம் மிளிரும். 

 மேலும் படிக்க ..Sani Peyarchi 2022: சனியில் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு பம்பர் பலன் உண்டு... உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

Anija Kannan
About the Author
Anija Kannan
அழகு
 
Recommended Stories
Top Stories