MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழாயைத் திறந்தா வெந்நீர் வருதா? மாடித் தொட்டி சூடாவதை தடுக்க 5 சீக்ரெட் டிப்ஸ்.!

குழாயைத் திறந்தா வெந்நீர் வருதா? மாடித் தொட்டி சூடாவதை தடுக்க 5 சீக்ரெட் டிப்ஸ்.!

Water Tank Cooling Tips in Tamil: கோடைக் காலத்தில் குழாய்களில் இருந்து வரும் தண்ணீர் சுடுதண்ணீர் போல இருப்பது பொதுவான பிரச்சனை தான். இதில் இருந்து விடுபட சில எளிய தீர்வுகளை இங்கு காணலாம். 

3 Min read
Author : Ramprasath S
| Updated : Jun 20 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Water Tank Cooling Tips in Tamil
Image Credit : ChatGPT

Water Tank Cooling Tips in Tamil

தமிழகத்தைப் பொறுத்தவரை கோடை காலம் என்பது மிக நீண்ட பருவ காலமாகும். சுமார் ஆறு மாதத்திற்கும் மேலாக வெயில் கொளுத்துவது சகஜம்தான். குறிப்பாக சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, ஈரோடு போன்ற நகரங்களில் கோடை காலங்களில் வெயில் 105 டிகிரி தாண்டி பதிவாகிக் கொண்டிருக்கிறது. கோடைக் காலங்களில் நாம் குழாயை திறந்தாலே தண்ணீர் சுடுதண்ணீர் போல வருகிறது. இதற்கு நம் மாடியில் வைத்துள்ள தொட்டியில் சிறிய மாறுதல்களை செய்தால் போதுமானது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
வெள்ளை நிறப் பெயிண்ட்
Image Credit : Gemini AI

வெள்ளை நிறப் பெயிண்ட்

நாம் மொட்டை மாடியில் வைத்திருக்கும் தண்ணீர் தொட்டியை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்றாகும். தொட்டி வாங்கும் பொழுது கருப்பு தொட்டிக்கு பதிலாக, வெள்ளை நிறம் அல்லது மஞ்சள் நிற தொட்டிகளை வாங்கலாம். கருப்பு நிறம் சூரிய ஒளியையும், வெப்பத்தையும் விரைவாக உறிஞ்சிக் கொள்வதால் தண்ணீர் விரைவில் சூடாகிறது. பழைய தொட்டியை மாற்றுவது சாத்தியமில்லாதவர்கள் வெள்ளை அல்லது சுண்ணாம்பை வெளிப்பக்கம் பூசலாம். இது சூரிய கதிர்களை பிரதிபலிப்பதால் தொட்டி அதிக வெப்பமாகாமல் இருக்கும். இந்த சிறிய மாற்றம் தண்ணீரின் வெப்பநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:  Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?

Related Articles

Related image1
Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
Related image2
Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?
36
நிழல் பந்தல் அல்லது கூரை அமைப்பது
Image Credit : Gemini AI

நிழல் பந்தல் அல்லது கூரை அமைப்பது

சூரிய ஒளியானது நேரடியாக தொட்டியில் விழுவதால் தொட்டி வெப்பமடைகிறது. இத்தகையச் சூழலில் தொட்டியின் மேல் ஒரு சிறிய கொட்டகை போல அமைப்பது சூரிய ஒளியிலிருந்து தொட்டியை பாதுகாக்கும். ஃபைபர் சீட்டுகள், தார்ப்பாலின், தகரம் அல்லது பனை ஓலைகளைக் கொண்டு இந்த கொட்டகைகளை அமைக்கலாம். குறைந்த செலவில் செய்ய விரும்புபவர்களுக்கு சந்தையில் கிடைக்கும் பச்சை நிற வலைகளும் நல்ல தேர்வாகும். அதை தொட்டியின் மேல் விரிப்பது சூரிய ஒளியை தடுத்து காற்று உள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிப்பதால் தொட்டி சீக்கிரம் வெப்பமடைவதை தடுக்கிறது. மேலும் உள்ளே இருக்கும் தண்ணீரும் குளிர்ச்சியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: Facts: நம்ம போன் நம்பர்ல 10 இலக்கம் ஏன் இருக்கு? 8, 9-னு ஏன் இல்ல? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?

46
தெர்மாகோல் கவசம்
Image Credit : Gemini AI

தெர்மாகோல் கவசம்

தெர்மாகோல் வெப்பத்தை கடத்தாக பொருளாகும். பேக்கேஜிங்-க்கு மட்டுமல்லாமல் வெப்பத்தை தணிக்கவும் உதவுகிறது. ஒரு தடிமனான தெர்மாகோலை வாங்கி வைத்து அதைத் தொட்டியை சுற்றி வைத்து நூல் அல்லது கட்டுக் கம்பி கொண்டு நன்றாக கட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெளிப்புற வெப்பமானது தொட்டிக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. தெர்மாகோல் நீண்ட நேரம் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், தொட்டியும் சூடாகாமல் தடுக்கப்படுகிறது. குறைந்த செலவிலான இந்த முறை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!

56
சணல் பைகளை சுற்றி வைப்பது
Image Credit : Gemini AI

சணல் பைகளை சுற்றி வைப்பது

தெர்மாகோலைப் போலவே சணலும் வெப்பத்தை கடத்தாதே ஒரு பொருளாகும். பழைய சணல் சாக்குகளை எடுத்து அதை தண்ணீர் தொட்டியை சுற்றி முழுமையாகச் சுற்றவும். காற்றில் பறக்காதவாறு ஒரு கயிற்றால் கட்டவும். தினமும் காலையிலும் மாலையிலும் இந்த சாக்குகளின் மீது சிறிதளவு தண்ணீரை தெளித்து ஈரமாக்க வேண்டும். சணல் சாக்கில் இருக்கும் ஈரம், சூரிய வெப்பம் தொட்டிக்குள் இறங்காமல் தடுத்து தண்ணீரை ஜில்லென்று வைத்திருக்கும். இது மிகவும் எளிமையான மற்றும் செலவு குறைந்த முறையாகும்.

இதையும் படியுங்கள்:  Aral Sea: 60 ஆண்டுகளுக்கு முன் கடல், இன்று பாலைவனம்..! மனிதன் செய்த 'அந்த' ஒரு தவறால் வற்றிப்போன கடலின் அதிர்ச்சி வரலாறு.!

66
இன்சுலேட்டட் வாட்டர் டேங்க் கவர்கள்
Image Credit : Gemini AI

இன்சுலேட்டட் வாட்டர் டேங்க் கவர்கள்

தற்போது சந்தைகளில் தண்ணீர் தொட்டிகளுக்கு என்றே பிரத்தியேக இன்சுலேட்டட் கவர்கள் கிடைக்கும். ஜாக்கெட் போன்ற இந்த கவர்களை தொட்டிக்கு மாட்டி விடுவதன் மூலம் எவ்வளவு வெயில் அடித்தாலும் உள்ளே இருக்கும் தண்ணீர் குளிர்ச்சியாகவே இருக்கும். தண்ணீர் தொட்டிக்கு வரும் பிளாஸ்டிக் குழாய்களை பழைய துணிகள் அல்லது சாக்கு கொண்டு சுற்றி வைப்பதன் மூலம் குழாயில் வரும் தண்ணீர் சூடாவது தடுக்கப்படும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fridge : உங்க பழைய ஃபிரிட்ஜை ஈஸியா புதுசு மாதிரி மாத்தலாம்... இந்த 3 டக்கரான ஐடியாஸ் பாலோ பண்ணுங்க..!
Recommended image2
Parenting Tips: குழந்தைக்கு காய்ச்சலா? இந்த 4 தப்பை மறந்தும் பண்ணாதீங்க!
Recommended image3
Aral Sea: 60 ஆண்டுகளுக்கு முன் கடல், இன்று பாலைவனம்..! மனிதன் செய்த 'அந்த' ஒரு தவறால் வற்றிப்போன கடலின் அதிர்ச்சி வரலாறு.!
Related Stories
Recommended image1
Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
Recommended image2
Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved