MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நீங்கள் இதுவரை கேட்டிராத உப்புக் குறித்த அரிய தகவல்கள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

நீங்கள் இதுவரை கேட்டிராத உப்புக் குறித்த அரிய தகவல்கள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

உங்களுடைய கசப்பான காஃபியைக் கூட சுவையாக மாற்றக்கூடிய பண்பு உப்பில் உண்டு என்று கூறினால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. அதேபோன்று முட்டையின் தரத்தை கண்டறிவதற்கும், தேனீக்களின் கடியை குணப்படுத்துவதற்கும் உப்பு தேவைப்படுகிறது. உப்பு சுவைக்கு மட்டுமில்ல ஐம்புலனுக்கும் விருந்தளிக்கக்கூடிய முக்கிய படைப்பாகும். அதேபோல உணவுத் தேவையில் இருந்து மருத்துவத் தேவைகள் வரையிலும் பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பதற்கு உப்பு முக்கிய காரணியாக உள்ளது.  மனிதனின் பண்பு நலனுக்கும் உவமையாக சொல்லப்படும் உப்பு குறித்து அறிந்திராத பல தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம். 

2 Min read
Author : Dinesh TG
Published : Oct 19 2022, 10:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

செயற்கை பூக்களை சுத்தப்படுத்தும்

நம்முடைய வீடுகளில் அலங்கார பொருட்களாக பல்வேறு செயற்கை பூக்கள் வைக்கப்பட்டு இருக்கும். பட்டுத் துணி மற்றும் நைலான் கொண்டு தான் பல்வேறு செயற்கை பூக்கள் தயாரிக்கப்படுகின்றன. அதை சுத்தம் செய்வதற்கு உப்பு தேவைப்படுகிறது. ஜிப் லாக் பைக்குள் செயற்கை பூக்களை போடவும். அதனுடன் ஒரு குவளை உப்பினைக் கொட்டி நன்றாக குலுக்கி எடுக்கவும். இதன்மூலம் பூக்களிலுள்ள தூசி துகள்கள் தனியாக வந்துவிடும். இந்த செயற்கைப் பூக்கள் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்கும்.

25

கடினமான அழுக்குகளை எளிதாக நீக்கிவிடும்

உங்களுடைய சட்டையில் வையின் போன்ற கடினமான அழுக்குப் படிந்துவிட்டால், அதன்மேல் ஒரு ஸ்பூன் உப்பினை தூவிவிட்டு சிறிதுநேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். அதையடுத்து சட்டையை நன்றாக சோப்புப்பொட்டு அலசும் போது, அந்த அழுக்கு எளிதாக நீங்கிவிடும். அதேபோல வியர்வையின் காரணமாக சட்டையில் படியும் அழுக்கினைக் கூட உப்பு எளிதாக நீக்கிவிடும். 

35
salt

salt

தேனீயின் கடிக்கு மருந்தாகும்

எப்போதும் தேனீக்கள் கொட்டும்போது, அதனுடைய கொடுக்கு உடம்பில் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடும். அதை நன்றாக பார்த்து அகற்ற வேண்டும். அதையடுத்து, தேனீ கொட்டிய இடத்தை நன்றாக சுத்தம் செய்து, அதன்மீது உப்பினை தடவிட வேண்டும். அது காய்ந்தவுடன், வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். குளவி போன்ற வேறு ஏதாவது பூச்சிக் கடிக்கும் இந்த வழிமுறையை பின்பற்றுவது நல்ல தீர்வாக அமையும்.

ரோஸ்வாட்டர், வெள்ளரி, மஞ்சள் கொண்டு செய்யப்படும் ஐஸ் கட்டிகள்- எதற்கு இதெல்லாம்?

45

துடைப்பதின் ஆயுளைக் கூட்டும்

புதியதாக துடைப்பம் வாங்கியவுடன் அதை சுடு தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போது ஒரு கைப்பிடி உப்பை அதில் சேர்க்க வேண்டும். உப்பு மற்றும் துடைப்பத்தை சேர்த்து வைக்கக்கூடாது என்று எண்ணிவிட வேண்டும். இது ஒரு அறிவியல் சார்ந்த தகவலாகும். குறைந்தது 20 நிமிடம் துடைப்பது உப்பு கலந்த சுடு தண்ணீரில் ஊற வைத்து எடுப்பதன் மூலம், அதனுடைய ஆயுள் காலம் கூடுகிறது. விளக்குமாறு இன்னும் நீண்ட நாட்களுக்கு வரும். 

எண்ணற்ற மருத்துவப் பலன்களை வழங்கும் இஞ்சி, புதினா, தேன், நெல்லிக்காய்... இன்னும் பல..!!

55

முட்டையின் தரத்தை கண்டறியலாம்

நாம் வாங்கும் முட்டை புதியதா அல்லது கெட்டுப்போனதா என்பதை உப்பை வைத்து கண்டறிய முடியும். ஒரு கப்பில் தண்ணீரை ஊற்றி, அதில் இரண்டு டேபுள் ஸ்பூன் உப்பை போடவும். அதற்கு முட்டையைப் போட்டால், புது முட்டை என்றால் எழும்பி மேலே வந்து மிதக்கும். அப்படி முட்டை எழும்பி வரவில்லை என்றால், அது கெட்டுவிட்டது என்று அர்த்தம். அதேபோல ஒரு ஸ்பூன் உப்பைப் போட்டு முட்டையை வேகவைத்தால், ஓடு எளிதாக உரிந்து வரும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved