அடிக்கடி தாகம் ஏற்படுகிறதா? இந்த பிரச்சனைகள் இருக்கலாம்!
தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்தால் பாதி உடல் பிரச்சனைகள் குறையும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதிகமாக தண்ணீர் குடிப்பது, அடிக்கடி தாகம் எடுப்பது உடலில் ஏதோ நோய் இருப்பதற்கான அறிகுறியாம். அதிக தாகம் எடுத்தால் என்னென்ன நோய்கள் இருக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

தண்ணீர் உடலுக்கு மிகவும் அவசியம். அதனால் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு தண்ணீர் குடிப்பது உண்மையிலேயே உடலுக்கு நல்லதா? உண்மை சொல்ல வேண்டுமென்றால், நம் உடல் தேவைகளுக்கு ஏற்றவாறு நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை சிறுநீர் நிறத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
அடிக்கடி தாகம் எடுத்தால்?
உங்களுக்கு அடிக்கடி அதிகமாக தாகம் எடுத்தால், அது உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக குறிக்கிறது. இது உடலுக்கு ஆபத்தானது. தொடர்ந்து அதிகமாக தாகம் எடுப்பது நல்ல அறிகுறி இல்லை. உங்களுக்கு நாள் முழுவதும் தாகம் எடுத்தால், அது ஆபத்தான நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
பாலிடிப்சியா
நிறைய தண்ணீர் குடித்தாலும் உங்களுக்கு அடிக்கடி தாகம் எடுத்தால், அது நல்ல அறிகுறி இல்லை. உங்களுக்கு பாலிடிப்சியா என்ற உடல்நல பிரச்சனை இருக்கலாம். அதிகமாக தாகம் எடுப்பது, அதிக வியர்வை, டீஹைட்ரேஷன் போன்ற பிரச்சனைகள் வரும். உடலில் காஃபின், ஆல்கஹால் அல்லது உப்பு அதிகமாகும்போது இது வருகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு?
சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளவர்களுக்கும் அதிக தாகம் எடுக்கும். சுகர் வந்தால் உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செயல்முறை மெதுவாகும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. சுகர் பேஷண்டுகளுக்கு அதிகமாக தாகம் எடுக்கும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே அடிக்கடி தாகம் எடுத்தால் மருத்துவரை சந்திப்பது மிகவும் முக்கியம்.
இதய நோய்கள்
அதிகமாக தாகம் எடுப்பவர்களுக்கு இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது. உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹார்ட் ஃபெயிலியர் போன்ற பிரச்சனைகளின் போது அதிகமாக தாகம் எடுப்பது சாதாரணமானது. எப்போதாவது உங்களுக்கு அதிகமாக தாகம் எடுத்தால், உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.
செப்சிஸ்
செப்சிஸ் என்பது பாக்டீரியா, மற்ற தொற்றுக்களால் உடலில் வீக்கம் அதிகரிக்கத் தொடங்கும் நிலை. இந்த நிலையில், நபருக்கு கடுமையான தாகமும் எடுக்கும்.
கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகளுக்கு பொதுவாக மற்றவர்களை விட அதிக தாகம் எடுக்கும். அந்த மாதிரி சமயங்களில் இந்த பிரச்சனையை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்வது முக்கியம். ஒரு ஆய்வின்படி ஒரு நாளைக்கு சுமார் 4-5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இருப்பினும், நிறைய தண்ணீர் குடித்தாலும் உங்களுக்கு தாகம் எடுத்தால், அது ஆபத்தை விளைவிக்கும் சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.