MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்க ACஐ அடிக்கடி கிளீன் பண்ணுங்க! இல்ல மழைக்காலத்தில் "இந்த" பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு!

உங்க ACஐ அடிக்கடி கிளீன் பண்ணுங்க! இல்ல மழைக்காலத்தில் "இந்த" பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு!

Why Should You Clean AC Very Often : மாறிவரும் பருவ சூழலால் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரது வீட்டிலும் இயங்கும் ஒரு அத்தியாவசிய இயந்திரமாக மாறி இருக்கிறது குளிரூட்டி எனப்படும் ACகள்.

2 Min read
Ansgar R
Published : Oct 18 2024, 10:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Uncleaned AC

Uncleaned AC

ACகள், தற்பொழுது ஒரு வீட்டின் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல. முன்பெல்லாம் எல்லா அறையிலும் மின்விசிறிகள் ஜோராக ஓடி வந்த நிலையில், இப்போது அனைத்து அறைகளையும் நிரப்ப தொடங்கி இருக்கிறது குளிர்சாதன பெட்டிகள். ஆனால் அதை சரியாக பராமரிக்கிறோமா என்று கேட்டால் அது நிச்சயம் சந்தேகம் தான். சில வீடுகளில் குளிரூட்டிகளை பொருத்திய நாளிலிருந்து அதை கவனிக்காமலேயே விட்டுவிட்ட கதைகளும் உண்டு. ஆனால் அப்படி செய்தால் நம் உடல் நலத்திற்கு அது மிகப்பெரிய கேடுகளை ஏற்படுத்துகிறது.

அப்ப தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையாதா? கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

24
AC Filter

AC Filter

சுவாச பிரச்சனை 

அறிஞர்களின் கூற்றுப்படி ஒரு குளிரூட்டிகளில் உள்ள பில்டரை குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்திட வேண்டுமாம். அப்படி செய்யாமல் விடுவது அந்த குளிரூட்டிகளுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துமோ அதைவிட இரண்டு மடங்கு அதன் அருகில் படுத்து உறங்கும் மனிதர்களுக்கு பெரிய உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதில் முதலாவதாக வருவது சுவாசக் கோளாறு தான். தூய்மை செய்யப்படாத பில்டர்களைக் கொண்ட குளிரூட்டிகளை சீக்கிரம் பாக்டீரியா மற்றும் பிற கேடு விளைவிக்கும் விஷயங்கள் பல உருவாகிறது. அதிலிருந்து வரும் காற்றை சுவாசிப்பதால் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.

34
Uncleaned AC in Room

Uncleaned AC in Room

தோல் சம்பந்தமான பிரச்சனைகள் 

நமது வீட்டில் உள்ள ஏசியை சரியாக பராமரிக்காமல் இருக்கும் பொழுது அதன் அருகில் படுத்து உறங்கும் மனிதர்களின் தோல்களையும் பெரிய அளவில் அவை பாதிக்கின்றது. கண்ணுக்கு தெரியாத அளவில் நுண்ணிய அளவில் அதிலிருந்து வெளியேறும் அழுக்குகள் அந்த அறைக்குள் படுத்திருக்கும் நம் மீது தான் வந்து படுகிறது. ஒரே நாளில் நமது தோலுக்கு பாதிப்பு ஏற்படாது என்றாலும், முறையாக சுத்தம் செய்யப்படாத ஏசிகள் அருகே படுப்பதால் நாளடைவில் நமக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

44
Sleeplessness

Sleeplessness

தூக்கமின்மை மற்றும் சோர்வு 

சரியாக தூய்மை செய்யப்படாத ஏசி-களிலிருந்து வெளியேறும் அசுத்தமான காற்றால் நமது உடலில் சீக்கிரம் நீர்சத்து இழக்கப்படுகிறது. அதனால் நமக்கு தூக்கத்தில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் அதிக நேரம் இது போன்ற ஏசி-களுக்கு அருகில் படுப்பதால் உடல் சோர்வும் ஏற்படுகிறது. என்ன தான் அயர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் தூங்கினாலும் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாத ஒரு அனுபவத்தை தூய்மை செய்யப்படாத ஏசிக்கள் கொடுக்கின்றது என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஜூஸை தொடர்ந்து குடித்தால் போதும்! உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
Recommended image2
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்
Recommended image3
இவர்களோடு மட்டும் சவகாசம் வைச்சுக்காதீங்க - சாணக்கியர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved